புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
முதலமைச்சர் போட்டி இனப் பிளவாக கூடாது

முதலமைச்சர் போட்டி இனப் பிளவாக கூடாது

SLFP அமைப்பாளர் அப்துல் சத்தார்

கிழக்கில் தமிழ் - முஸ்லிம் இன ஐக்கியம் மீண்டும் கனிந்து வரும் சூழலில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் நடவ டிக்கைகளால் அந்த ஒற்றுமை மீண்டும் சிதைவடைய அரசியல் தலைமைகள் இடமளிக்கக் கூடாதென குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் வாழ் பவர்கள் தாம் சார்ந்த சமூகம்தான் முதல மைச்சராக வரவேண்டுமென்று வரிந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் அவர்களின் அபிலாஷைகளால் இன நல்லுறவு பாதிப்படையக்கூடாது. அது அங்கு வாழும் மக்களின் எதிர்கால நன்மைக்கு ஆரோக்கி யமற்றதாக அமையக்கூடாதென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இந்த விடயத்தை மிகவும் அவ தானமாகக் கையாளவேண்டும். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் பிரசார நடவடிக்கைகளில் ஆளை ஆள் விமர்சிப்ப தில்லையென அறிவித்துள்ளமை வரவேற்க வேண்டியதே.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன தமது இனத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்க பாடுபட வேண்டிய தேவை யுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.