புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

முழுநாட்டுக்கும் ஒளியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் 150 மெகாவாட் மின்சாரத்தை இணைத்துக் கொள்ளும் புதிய உதயம் மின்சாரத்திட்டம் மேல் கொத்மலையில் நேற்று சனிக்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைகக்கப்பட்டது. அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, சி.பி. ரத்னாயக்க, நவின் திசாநாயக்க பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்தியமாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, ஸ்ரீரங்கா எம்.பி. மற்றும் பிரமுகர்கள் இவ்வைபவத்தில் பங்கேற்றனர். (படம்: சுதத் சில்வா)
 

அஷ்ரப்பின் மறைவின் பின் ஒன்றிணையும் தலைமைகள்;

ACMC, தேசிய காங்கிரஸ் வழியில் அரசுடன் கைகோத்துள்ள SLMC!

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் மீண்டும் ஓரணியில் சேர்ந்தனர்

மர்ஹ¥ம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிர ஸிலிருந்து பிரிந்து சென்ற முக்கியஸ்தர்கள் அமைத்த கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸ¥ம் ஒரே கட்சியில் போட்டியிடும் வரலாற்றுத் தேர்தலாக கிழக்கு மாகாண சபைத்தேர்தல் அமைந் துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விவரம் »

புலிகளுக்காக ஆட்சியை இழந்ததாக கருணாநிதி புரளி

அதிகாரம் உள்ளபோது மெளனம் இல்லாமல் போனதும் ஞானோதயம்!

கலைஞரின் தில்லுமுல்லுக்கு தமிழக மக்கள் கண்டனம்

விடுதலைப் புலிகளின் நலன்களுக்காகத் தான் 1991இல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

விவரம் »

தனித்தா, தமிழ் கூட்டமைப்புடனா, அரசுடனா? இழுபறிக்கு முற்று;

சமூகத்தின் நன்மை கருதியே அரசுடன் இணைந்தது மு.கா

அரசுக்குள் இருந்துகொண்டே தமது பலத்தை நிரூபிக்கப் போவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதி பதியுடனும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகி யோருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் திருப்தி கண்டதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோ மென அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

விவரம் »

கூட்டமைப்பில் சமத்துவ பிரதிநிதித்துவமா? கேட்க சித்தா, சங்கரிக்கு அருகதையில்லை

ஒருவர் கட்டுக்காசை இழந்தவராம், மற்றவர் காட்டிக்கொடுத்தவராம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தங்களுக்குச் சமத்துவப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயமாகாது. சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 9223 வாக்கு கள் மட்டும் விழுந்தன. போட்டியிட்ட அனைவரும் கட்டுக்காசை இழந்தனர். அப்படியான கட்சிக்கு எப்படி சமத்துவப் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியும்?

விவரம் »

IPKF உடன் மோதலில் ஈடுபட வேண்டாமெனக் கெஞ்சிய யாழ். மக்கள் ;

உளவாளிகள், காதலர்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்த புலிகள்!

முன்னாள் பெண்புலி எழுதிய நூலில் பல திடுக்கிடும் தகவல்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அனைவருமே துரோகிகள் என அந்த அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினரான நிரோமி டி சொய்சா என்பவர் தான் எழுதியுள்ள 308 பக்கங்களைக் கொண்ட தமிழ் டைக்ரஸ் (Tamil Tigress) என்ற புத்தகத்தில் அந்த இயக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.