புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!

வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை தமிழ் கூட்டமைப்பு சரியாகவே கையாண்டு வருகிறது. நான் ஒன்றும் கண்மூடி இருக்கவில்லை. தேவையெண்டு வந்தால் சரியான நேரத்தில் தேவையான ஆதரவும், அழுத்தமும் என் மூலமாகவும் வெளிவரும். தம்பி ஆறுமுகன் தொண்டமானின் கூற்று தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள வயதான மற்றும் இளமையான அண்ணாமாருக்கு புரிந்திருக்குமோ தெரியாது. பலமுள்ள தம்பியைப் பற்றி யோசிக்காமல் தம் மூலம் பலம் தேடும் மலையக குழந்தைப் பிள்ளை அரசியல்வாதிகளுடன் கூட்டுவைப்பதால் என்ன பலன்?

* ஆர்ப்பாட்டங்களின் உரிமையாளர்கள்!

நாட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கென்றே ஒரு குழு வேறெந்த வேலையுமில்லாது அலைந்து திரியுது எண்டா நம்பவேணும். நில ஆக்கிரமிப்பா?, சிறுவர் துஷ்பிரயோகமா?, பட்டதாரிகள் புறக்கணிப்பா? ஊடக அடக்குமுறையா?, தீர்வு முயற்சியில் தாமதமா? எல்லாவற்றிலும் இந்தக் குழுவே பிரசன்ன மாயிருக்கும். அரசை எதிர்ப்பதன் மூலம் அரசியல் நடத்தும் இந்தக் குழுவின் குழந்தைப் பிள்ளைத்தனம் இப்போ சனத்துக்கு நல்லாத் தெரிந்துவிட்டது. ஏதோ ஊடகக்காரர் கையுக்குள்ள இருக்கும் வரைக்கும் இவர்கள் பாடு கொண்டாட்டம்தான்! இவர்களால ஊடகக்காரருக்கும் கொண்டாட்டம்தான்!!

* எழுபது வயதுக்கு கேட்கும் 7 வயது!

சிறுவர் துஷ்பிரயோகம் திடீரென்று இவ்வளவு தூரம் மலிந்துபோக என்ன காரணம்? ஏதோவொரு காரணம் இருந்தே ஆக வேணும். இல்லையெண்டா எழுபது வயதுக்கு ஏழு வயது கேட்குமா? இணையத்தள ஆக்கிரமிப்பை மட்டுமே காரணமாக கூறிவிடமுடியாது. கவிஞர் வாலி கூறுவது போல பூமி வெப்பமடைதலும் ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ கலாசாரம் மிக்க நாட்டில் இதை கட்டுப்படுத்தாவிட்டால் இது எமது நாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை. முதலில் வேலியே பயிரை மேயும் நிலைமையை வீடுகளிலும், பாடசாலைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் கட்டுப்படுத்த வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.