புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
சப்றா, சக்வித்தி பாணியில் மாத்தளையிலும் நிதிமோசடி!

மக்கள் ஏமாறும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம்:

சப்றா, சக்வித்தி பாணியில் மாத்தளையிலும் நிதிமோசடி!

கோடிகளைக் கொடுத்தவர்கள் மனக்குமுறல்

மக்களை ஏமாற்றி பாரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தொம்பை பிரதேசத்தில் கைது செய்யப்பட் டுள்ளார். எண்பதுகளில் சப்றா என்றழைக் கப்பட்ட நிதி நிறுவனம் அதிக வட்டி தரு வதாக பொதுமக்களின் பெருமளவு நிதி மோசடி செய்யப்பட்டதைப் போன்றும் சில வருடங்களுக்கு முன்னர் சக்வித்தி என்ற பெயரில் நிதிமோசடி இடம்பெற்றதைப் போலவும் தற்போதும் ஓர் பாரிய நிதிமோசடி இடம்பெற்றுள்ளது.

மாதத்திற்கு 10 வீத வட்டி வழங்குவதாக மக்களை ஏமாற்றி வைப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள குறித்த மோசடிப் பேர்வழி பின்னர் வட்டியை செலுத்துவ தில்லை என கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அந்நபர் கைதுசெய் யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். 575 இலட்சம் ரூபாவை அவர் பொதுமக்களிடமிருந்து சேமிப்பாக ஏற்றுக் கொண்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பெண் ஒருவர் இவரிடம் மூன்று கோடி ரூபா பணத்தை வைப்பில் இட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் 28 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் ஏமாறும்வரை சப்றாசிரா, சக்வித்தி,தொம்பே பேர்வழிகள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.