புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
உளவாளிகள், காதலர்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்த புலிகள்!

IPKF உடன் மோதலில் ஈடுபட வேண்டாமெனக் கெஞ்சிய யாழ். மக்கள் ;

உளவாளிகள், காதலர்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்த புலிகள்!

முன்னாள் பெண்புலி எழுதிய நூலில் பல திடுக்கிடும் தகவல்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அனைவருமே துரோகிகள் என அந்த அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினரான நிரோமி டி சொய்சா என்பவர் தான் எழுதியுள்ள 308 பக்கங்களைக் கொண்ட தமிழ் டைக்ரஸ் (Tamil Tigress) என்ற புத்தகத்தில் அந்த இயக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அமைதி காக்கும் துருப்பினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் உளவாளிகளை விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததுடன், தமிழர்களின் வர்த்தக நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களையும் மேற்கொண்டதாக நிரோமி டி சொய்சா குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு தமது 17 வயதில் நிரோமி டி சொய்சா புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். நிரோமி டி சொய்சா தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். வன்முறைகளால் தமிbழ கோரிக்கையை அடைய முடியாது என அறிந்து கொண்டதன் பின்னர் தாம் இயக்கத்திலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய படையினருக்காக உளவு பார் த்த குற்றத்திற்காக புலிகளின் இளம் உறுப்பினர் ஒருவரை சிரேஷ்ட உறுப்பினர்கள் சித்திரவதை செய்ததனை தாம் நேரில் கண்டதாக கூறும் அவர், சிறு பூச்சியை கொல்வது போன்று அந்த இளைஞரை புலிகள் கொலை செய்ததாகத் தெரி வித்துள்ளார்.

சக பெண் போராளி ஒருவரை காதலித்த இளைஞர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட் டுள்ளார்.

இவ்வாறு புலிகள் அமைப்பிலிருக்கும் எவரும் காதல் செய்யக்கூடாது என்பது தலைமைப்பீடத்தின் உத்தரவாக இருந்தது. மீறிச் செயற்பட்ட பலர் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய அமைதி காக்கும் படையினருடன் மோதல்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அதனை நிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தாகவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.