புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
ACMC, தேசிய காங்கிரஸ் வழியில் அரசுடன் கைகோத்துள்ள SLMC!

அஷ்ரப்பின் மறைவின் பின் ஒன்றிணையும் தலைமைகள்;

ACMC, தேசிய காங்கிரஸ் வழியில் அரசுடன் கைகோத்துள்ள SLMC!

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் மீண்டும் ஓரணியில் சேர்ந்தனர்

மர்ஹ¥ம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிர ஸிலிருந்து பிரிந்து சென்ற முக்கியஸ்தர்கள் அமைத்த கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸ¥ம் ஒரே கட்சியில் போட்டியிடும் வரலாற்றுத் தேர்தலாக கிழக்கு மாகாண சபைத்தேர்தல் அமைந் துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மறைவின் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஹக்கீம் ஏற்றுக் கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ¥க்குள் பின்னர் பல்வேறு நெருக் கடிகள் தோன்றினர் உயர் பீட உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர். இவர்கள் பின்னர் தமக்கென கட்சிகளை அமைத்துக்கொண்டனர். அமைச்சர் அதா வுல்லா தேசிய காங்கிரஸையும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸையும் தோற்றுவித்தனர். ஹாபிஸ் நkர் அஹமட் துஆ கட்சியை தொடங் கினார். இணைத்தலைவராக இருந்த பேரியல் அஷ்ரப் நுஆ கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மு.காவின் அதிருப்தி யாளர்கள் பலர் தமது விருப்பத்துக்கு அமைய இந்த கட்சிகளில் இணைந்து கொண்டு அரசியல் நடத்தினர்.

இந்தக்கட்சி களில் சில ஆளும் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. மு.கா பல் வேறு தேர்தல்களில் தனித்தும் இணைந்தும் தேர்தலில் போட்டியிட்டமை வரலாறு.

தற்போதைய கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. வடக்கு, கிழக்கை பலமான தளமாகக் கொண்ட இந்தக்கட்சிகள் கிழக்கில் ஒரே அணியின் கீழ், ஒரே சின்னத்தில் போட்டியிடுவது வரலாற்றுத்திருப்பமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் ஒரு மித்த குரலில் ஓரணியிலிருந்து இந்தத் தலைவர்கள் செயற்படுவதற்கான அடித்தளமாக இது இருக்குமெனவும் ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியன ஆளும் அரசு டன் கடந்த காலத்தில் இணைந்து தொடர்ச்சி யாகத் தேர்தலில் போட்டியிட்டமை முஸ்லிம் சமூகத்தின் நன்மைகருதியே என்ற உண்மை தற்போது அரசியலில் நடைபெறும் நிகழ்வுகள் நிரூபணமாக்கி வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பேரினவாதம் முஸ்லிம் காங்கிரஸை உடைத்து அந்தக் கட்சியைச் சின்னா பின்னப்படுத் தியது என்ற கடந்த காலக் குற்றச்சாட்டுக்கு மாற்றமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கும் கட்சி, பிரிந்து சென்று செயற்பட்ட அதே முஸ்லிம் தலைமைகளை ஓரணிக்குள் கொண்டுவர வழி சமைத்துள் ளமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் குறிப்பிடப்படவேண்டியதென சிலாகிக்கப் படுகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.