புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தீர்மானம்

ஆறுமுகனும் மனோவும் ஓரணியில் பயணிக்க முடிவு;

தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தீர்மானம்

முன்னாள் பிரதித் தலைவர் இராமச்சந்திரனும் களத்தில்

சப்ரகமுவ மாகா ணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரநிதித் துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலை யகத்தில் பிரதான அர சியல் கட்சிகள் ஒன்றி ணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் நடந்துள்ள சந்திப்பின் போது இந்த இணக்கம் எட் டப்பட்டுள்ளது.

அதற் கமைய மாகாண சபை யின் முன்னாள் பிரதித் தலைவர் கே. இராம சந்திரனையும் வேட் பாளராக களத்தில் நிறுத்தவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. மனோ கணேசன் தலைமை யிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் மறை ந்த சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் இன்னும் சில மலையகத் தமிழ்க் கட்சிகளும் தமது கட்சியுடன் கூட்டுசேர்ந்து தமது கட்சியின் சேவல் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறு முகன் தொண்டமான் கூறினார்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவிடாமல் அங்கு நீண்டகாலத்துக்குப் பின்னர் தமிழ்ப் பிரநிதித்துவம் ஒன்றை உருவாக்குவது தான் தமது நோக்கம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியில் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியில் இருக்கின்ற மனோ கணேசன் தலைமையிலான கட்சி யுடன் கூட்டுசேர்ந்து போட்டியிடுவது பற்றி அரசாங்கத்துக்கு தான் விளக்கமளித்துவிட்ட தாகவும் அந்த விளக்கத்தால் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் மேலும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதில் தமது தரப்பிலிருந்து எவ்வித சிக்கலும் இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.