புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

8 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய HP

8 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய HP

மேம்படுத்தப்பட்ட கருவிகளின் உதவியுடன் அனைத்து அளவிலான வர்த்தகங்களை கைப்பற்றுவதற்கும், பாதுகாப்பாகவும், செயற்திறனுடனும் இணைப்பினை ஏற்படுத்தி தொடர்பாடல் மேற்கொள்வதற்கான வசதியினை வழங்கும் எட்டு புதிய இமேஜிங் மற்றும் பிரின்டிங் தயாரிப்புகளை HP அறிமுகப்படுத்தியது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு (SMB) தொழிற்துறை வாடிக்கையாளர்களுக்கும் தொழின்முறைத் தரம் கொண்ட ஆவணங்கள் மற்றும் துரித பிரின்ட் வேகம் ஆகியவற்றை, குறித்த கருவி அமைந்துள்ள இடத்தில் மட்டும் அல்லாமல், அப்பாலிருந்தும் வழங்கும் ஆறு புதிய HP லேசர் ஜெட் பிரின்டர்கள், இரண்டு HP ஸ்கேன் ஜெட்ஸ் ஆகியவையாகும்.

HP டொப்ஷொட் லேசர் ஜெட் ப்ரோ M275 ஆனது பல்செயற்பாட்டு பிரின்டர்களை (ணிபிஜிs) வழங்குவதனால், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு ‘ஸ்ரூடியோ இன் எ பொக்ஸ்’ போன்ற அனுபவத்தை வழங்குகின்றது. இந்த புதிய பிரின்டர் உயர் தரமுடைய 3-D பொருட்களை பிரின்ட் செய்வதற்கான தனித்துவமிக்க முறையினை அறிமுகப்படுத்துகின்றது.

லேசர் ஜெட் புறோ 300 கலர் MFP M 375nw ஆனது வலையமைப்பு சார்ந்த, பெல்செயற்பாடுகளைப்புரியும் திறன் கொண்ட பன்முக தொழின்முறை கலர் பிரின்டர் ஆகும். இணையத்துடன் இணைக்கப்படக்கூடிய செயற்திறன் மற்றும் விரிவாக்கத்திறன் கொண்ட இந்த திறன்மிகு பிரின்டர் ஆனது ‘பிஸ்னஸ் அப்ஸ்’ களுடன் உபயோகிக்கப்படக்கூடியது என்பதுடன் இணையத்திலிருந்து அச்சுக்குறித்த தகவல்களை அதன் 3.5 அங்குல வர்ண தொடுதிரை ஊடாக MFPM375nw இனை Hp இ-பிரின்ட் தொழினுட்பத்துடனும் உபயோகிக்கலாம்.

HP லேசர் ப்ரோ 400 M401dh ஆனது HP யின் முதலாவது தனியொரு செயற்பாட்டு கறுப்பு வெள்ளை லேசர் ஜெட் தொகுதியாகும். பாவனையாளர்கள் பிரின்டிங் பணிகளை நேரடியாக 3.5 அங்குல தொடுதிரை மற்றும் வோக் அப் போர்ட் ஆகியவற்றின் துணையுடன் முகாமை செய்ய முடியும் என்பதுடன் இலகுவாக அணுகவும், ஒப்பந்தங்கள் மற்றும் விலைப்பட்டியல் உள்ளடக்கங்களை இணையத்தில் செயலாற்றும் ‘அப்ஸ்” மூலம் இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.