புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
அங்கவீனரும் நம்மவர்களே...

அங்கவீனரும் நம்மவர்களே...

இயற்கை விபத்துக்கள், பலதரப்பட்ட நோய் நிலைமைகள், வாகன விபத்துக்கள், யுத்தம் மற்றும் வயதாகுதல் உள்ளிட்ட ஏதாவதொரு காரணங்களால் பலர் அங்கவீனமுறும் நிலைமையினைக் காண்கின்றோம். இது ஒருவருடைய வாழ்க்கையில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் நிகழக்கூடிய ஒரு நிலைமையாகவும் இருக்கலாம்.

இச் சந்தர்ப்பத்தில் அங்கவீன முற்றிருக்கும் அந்த நபர், சக்கர நாற்காலியின் உதவியை அல்லது அவரது கை அல்லது அவரது கால்களுக்கு ஏதாவதொன்றைப் பொருத்தி, அதன் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியவராக அல்லது அதன் துணையோடு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவராக ஆகிவிடுவார் என்பதே உண்மை.

அப்படிச் செய்தால் தான் அவரால் எந்தப் பணிகளையும், அடுத்தவர்களைப் போன்று திறமையாக சுயமாகச் செய்யவோ அல்லது இயங்கவோ முடியும். ஆனால், அங்கவீனமாகும் ஒருவரின் கால்களுக்கோ அல்லது கைகளுக்கோ அவைகளுக்கேற்ற தரமான உறுதியான வலுவான உபகரணங்களைப் பொருத்தினால்தான், அவரினால் அவருடைய வேலைகளைச் சரியான முறையில் நேர்த்தியாக உறுதியாகச் செய்ய முடியும்.

தரமற்ற அல்லது சக்தியற்ற அல்லது பாவனைக்கு உதவாத முறையில் தயாரிக்கப்பட்ட போலியான இவ்வாறான அங்கவீன உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அல்லது பொருத்திக் கொள்வதன் மூலம், தனது அங்கவீனமுற்றிருக்கும் நிலைமைக்கு மேலாக மற்றுமொரு அங்கவீன நிலைமையைத் தானே எற்படுத்திக் கொள்ளும் ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதாவது, தனது ஆபத்து அல்லது விபத்தைச் சீர்செய்வதற்காக, அதிலிருந்து தானும் விடுபட்டு அடுத்தவர்களைப் போன்று தனது சொந்தக் காலில் எதனையும் செய்வதற்கு அடுத்தவர்களின் உதவியை நாடாமல் தனது உதவியிலேயே அனைத்தையும் மேற்கொள்வதற்கு அங்கவீனமுற்றிருக்கும் எவரும் ஆசைப்படுவதுண்டு

அந்த ஆசையை செவ்வனே செய்ய வேண்டுமானால், அல்லது சரியாகப் புரிய வேண்டுமென்றால், அவர் அவரின் அங்கவீனமுற்றுள்ள கைகளுக்கு அல்லது கால்களுக்குத் தேவையான பொருத்தமான உபகரணங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுதான், ஒரு அங்கவீனமான அல்லது வலுவிழந்தோருக்கான ஒரு சிறந்த செயற்பாடும் நம்பிக்கைமிக்க தம்மையுமாகும்.

இன்று வீதி விபத்துக்களினால் அவயவங்களை இழப்போர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வீதி விபத்துக்கள், பிறப்பிலேயே அங்கவீனமாகப் பிறத்தல், யுத்தம் மற்றும் செவிடு, குருடு, ஊமை என்பனவும் இந்த அவயவங்கள் இழப்பில் இடம்பெறுகின்றன.

எனவே, இவ்வாறான அவயவங்கள் இழப்பைச் சமாளிப்பதற்காக அல்லது அந்த இழப்புக்கு நிகரான ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக மிகச் சிறந்த செயற்கை அவயவங்கள் இன்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இப்படி செயற்கை அவயவங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்தாலும் கூட, அந்தத் தயாரிப்புக்கள் தரத்தில் சிறந்தனவா என்பதைப் பார்த்து கவனித்து வாங்க வேண்டும். போலியான செயற்கை அவயவங்களை வாங்கி ஒருபோதும் ஏமாறக் கூடாது.

இந்த விடயத்தில் ஏமாந்தீர்கள் என்றால் அங்கவீனர்களாகிய நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொண்டவர்களாகவும், நீங்கள் படுகுழியில் வீழந்தவர்களாகவும் ஆவீர்கள்.

ஆகவே சிறந்த தரமான நேர்த்தியான காலாகாலம் பாவிக்கும் செயற்கை அவயவங்களை வாங்க நீங்கள் முற்பட்டால் இவைகளைத் தயாரித்து விநியோகிக்கும் சிறந்த இடங்களை நாடிச் செல்வதே புத்திசாலித்தனமாகும்.

அந்த வகையில் தரமான, நேர்த்தியான, மிக நீண்ட காலம் பாவிக்கக் கூடிய செயற்கை அவயவங்கள் தயாரிப்புக்களை ‘மினுவாங்கொடை, மாதம்மன’ எனும் இடத்திலுள்ள ஒத்தோ பெடிக்ஸ் சப்ளயர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம், சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தரமான ஒரு நிறுவனமாகும். 1985 ஆம் ஆண்டு மாதம்மன என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிறுவனம், செயற்கை அவயவங்களைத் தயாரிப்பதிலும், அவற்றை விநியோகிப்பதிலும் இலங்கையில் ஒரு முன்னணி நிறுவனமாக இன்று விளங்குகிறது. அங்கவீனர்களுக்கான எல்லா வகையான செயற்கை அவயவங்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி விருது, தொழில்நுட்ப அபிவிருத்திச் சபை, ஆதாய செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களிலிருந்து, இந்த நிறுவனத்திற்கு சான்றிதழ்களும், நற்சாட்சிப் பத்திரங்களும் கிடைத்துள்ளன.

இந்த நிறுவனத்தின் தரமான நேர்த்தியான செயற்கை அவயவங்கள் தயாரிப்புக்களைப் பாராட்டியும் புகழ்ந்துமே இந்த நற்சான்றிதழ் பத்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ‘மினுவாங்கொடை, மாரம்மன என்ற இடத்தில் இயங்கிவரும் ஒத்தோ பெடிக்ஸ் சப்ளயர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பத்மசீலி அல்கம்பிட்டிகே தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் உயர் ரகத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்நிறுவனத் தயாரிப்புக்கள், மிக அனுபவமிக்க இந்நிறுவன ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் பத்ம சீலி அல்கம்பிட்டிகே, தற்பொழுது கூட ஜேர்மனியில் அமைந்துள்ள விகலாங்க பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மஷல் மற்றும் பபியேன் ஆகிய இரு மாணவர்களாலும் இந்நிறுவனத்திலுள்ள சேவையாளர் குழாமுக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜேர்மனியைச் சேர்ந்த OTTO BOCK கிலிவிறி நிறுவனத் தயாரிப்பான C - WALK அங்கவீனர்களுக்கான செயற்கைப் பாதணிகளைத் தயாரிக்கும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனமாகவும் இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றமையையும் இங்கு பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.