புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
ஏடாகூடமான கேள்விகள்? 37

ஏடாகூடமான கேள்விகள்? 37
 

ஏடாகூடம் : மொழி
 

பதில் தருவது

விமர்சகர் எழுத்தாளர்

தம்பு சிவா

1) கேள்வி: நீங்கள் ‘தம்பு’ சிவாவா அல்லது ‘வம்பு’ சிவாவா?

பதில்: என்னை வம்புக்கு இழுப்பதில் நீங்கள் காணும் சுகம் என்னவோ? வேண்டாம் வீண் ‘வம்பு’ நான் தம்பு சிவாவாகவே இருந்து விடு கின்றேன்.

(நம்புங்கப்பா...!)

2) கேள்வி: உங்களுக்கு கோபம் வந்தால் ‘நாக்கமுக்கா நாக்க முக்கா...’ என்ற பாடசாலைப் பாடிக் கொண்டு வீட்டைச் சுற்றி பத்து தடவைகள் ஓடுவீர்களாமே...! உண்மையா?

பதில்: தொடர்மாடி வீட்டில் இருந்து கொண்டு சுற்றி ஓடமுடியாததால், கோபம் வராமல் பார்த் துக் கொண்டு ‘சிந்தித்தால் சிரிப்புவரும்’ என்று பாடிக் கொண்டிருக்கின்றேன். உண்மையைச் சொன்னால் நீங்கள் கோவிப்பீர்களே! அதனால் மெளனமாக இருக்கிறேன்.

(மெளனம் சம்மதத்தின் அறிகுறிதானே!)

3) கேள்வி: உங்கள் தூரிகையிலிருந்து தெளித்து இன்று துருவ நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருப்பவர்கள் யாராவது இருக்கிறார் களா?

பதில்: ஆம், மின்னுவதெல்லாம் பொன்னல்ல. இருந்தும் மனிதநேயம் கொண்ட அத்தனை பேரும் துருவ நட்சத்திரங்களாக இருப்பது சற்று ஆறுதலைத் தருகின்றது. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

(உங்கள் பிரார்த்தனை வாழ்க்கை)

4) கேள்வி: விமர்சனத்துக்கும் விதண்டாவாதத் திற்கும் என்ன வித்தியாசம்?

பதில்: விமர்சனம் அறிவின் வெளிப்பாடு. விதண்டாவாதம் அறிவின்மையின் செயற்பாடுகள்

(ஹா... அப்படிப் போடு...!)

5) கேள்வி: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதீர்கள் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அப்படி என்றால் என்று என்று ஒரு சிறு விளக்கம் தாருங்களேன்.

பதில்: போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்ற விளம்பரத்தைப் படித்துப் பாருங்கள். விளங் கிக் கொள்வீர்கள்.

(நீங்கள் தான் கழுவுகின்ற மீனின் நழுவுகிற மீனாச்சே)

6) கேள்வி: நீங்கள் விமர்சனம் செய்வதற்காக ஒரு சிலரிடம் சம்திங் வாங்குவதாய் கதை அடிபடு கிறதே...!

பதில்: தங்கள் ‘கதை’ கற்பனை கதையாகவே இருக்கிறது. என் விமர்சனங்கள் யதார்த்தமா னவை. கறைபடியாத கைகள் என்று கேள்விபட்டு ள்Zர்களா?

தெரியாவிட்டால் இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்.

(இப்படிச் சொன்னவரிடம் இதை நான் சொல்லுகிறேன் தலைவா!)

கேள்வி: அழகான பெண்களைக் கண்டால் உங்கள் மனதிற்குள் எப்படி விமர்சனம் செய்து கொள்வீர்கள்?

பதில்: அழகை அழகென்றுதானே சொல்ல வேண்டும். மனம் எப்படி விமர்சனம் செய்யும். மனித மூளை தானே எல்லாவற்றையும் செய்கி ன்றது.

(ஓ.. நீங்க ரொம்பதூரம் போயிட்டீங்க...!)

7) கேள்வி: கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்: குறுக்கே வராமல் பார்த்துக் கொள்வேன். வந்தாலும் விலத்திச் சென்றுவிடுவேன்.

(புரிகிறது நீங்கள் ‘வம்பு’ சிவா இல்லை, ‘தம்பு’ சிவா என்பது இப்போது புரிகிறது.)

8) கேள்வி: நம் நாட்டில் உள்ள விமர்சகர்களில் எந்த விமர்சகரைப் பார்த்தால் உங்களுக்கு நடுக்கம் வரும்?

பதில்: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? என்ற கேள்விக்கு நிலை கெட்டுப்போன நயவஞ் சகரின் நாக்குத்தானது என்ற பதிலைக் கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இந்தக் கேள்விக்கு எத்த கைய விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் என்னிடம் இருக்கும் போது நான் பயப் படுவதில்லை என்பதே அதற்கான பதில்.

எல்லோரும் ஜோரா கை தட்டுங்களே

கேள்வி: 7ம் அறிவு படத்தை ஒரே வரிசையில் விமர்சனம் செய்ய சொன்னால் எப்படி விமர்சிப்பீர்கள்.

பதில்: மூடக்கொள்கையினால் இத்தரணியில் உள்ள மனிதனை இலகுவாக ஏமாற்றிவிடலாம். ஏப்ரகாம் கோவூர் உயிருடனில்லையே!

(இருந்தால் மட்டும் எதை கிழித்து விடப் போகிறார்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.