புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

நிறைகுடமாக அமைந்த வரவு-செலவுத் திட்டம்

நிறைகுடமாக அமைந்த வரவு-செலவுத் திட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தினை நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்களன்று பாராளுமன்றத்திலே சமர்ப்பித்தார். இலங்கையின் வர லாற்றில் முதற்தடவையாக மக்களது கருத்துகளும் உள்வாங்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டமாக இந்த வரவு-செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள், திறைசேரி செயலாளர்கள், வர்த்தகத்துறை சார்ந்த மேதைகள் ஆகியோரின் வழிநடத்தலிலேயே இதுவரை காலமும் நாட்டில் வரவு-செலவுத் திட்டங்கள் சம ர்ப்பிக்கப்பட்டு வந்தமை வரலாற்றுப் பதிவாகும். மக்களை வரிச்சுமைகள் மூலம் பாதிக்கும் மற்றும் மக்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கும் இந்த வரவு- செலவுத் திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டறியப்பட்ட வரலாறு எதுவும் இதுவரை இருக்கவில்லை.

ஒரு சாதாரண நாட்டுப் பிரஜையின் வாழ்க்கை முறை, அவனது தேவை, எதிர்பார்ப்பு என எதுவுமே அறியப்படாது, குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து கொண்டு வாழ்க்கையில் பொரு ளாதரக் கஷ்டங்கள் எதனையும் பெரிதாக எதிர்கொள்ளாத சில குழுக்களால் தயாரிக்கப்படும் வரவு-செலவுத் திட்டங்களே இதுவரை காலமும் மக்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது. இந்த வருடத்துடன் இந்த ஏற்றுக்கொள்ளப்படாத வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையுடனும், வழிகாட்டலுடனும் நிதியமைச்சும், பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிக ளும் இணைந்து இவ்வருடம் மக்களுக்காக மக்களின் கருத்தறிந்து பொருளாதார நிபுணர்க ளால் வடிவமைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காக நாட்டின் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் பலதரப்பட்ட மக்களுடனும் பல சந் திப்புகளை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். பல குழுக்களாகப் பிரிந்து சென்று பொதுமக்களு டன் கலந்துரையாடி தகவல்கள் பெறப்பட்டன.

மக்களது அடிப்படைத் தேவைகள், வீட்டுத் தேவைகள், தொழில் வாய்ப்புகள், கடனுதவி கள், சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புகள், விவசாயத் தேவைகள், வாழ்க்கைச் செல வைச் சமாளிக்க வேதன உயர்வு எனப் பல விடயங்கள் கேட்டறியப்பட்டு அவற்றுக்கு முன் னுரிமை கொடுத்துள்ளதுடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான திட்டங்களை யும் உள்ளடக்கியதாக இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுவரும் பொருளாதார அபிவிருத்தியின் பயன்களை மக்களுக்குக் கிடைக் கும் வகையில் வழி செய்வதையும், திடமான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற் குத் தேவையான யோசனைகளையும் உள்ளடக்கியதாக இந்த வரவு-செலவுத் திட்டம் தயா ரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மொத்தம் 112 மக்கள் நலன் கருதிய யோசனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவைதான் மக்களிடமிருந்து கருத்தறியப்பட்டு பெறப்பட்ட விடயங்களாகும்.

அதில் முதலாவதாக அரச ஊழியர்களின் சம்பளம் அவர்களது வாழ்க்கையைக் கொண்டு செல்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என அறியப்பட்டதனால் சகல அரச ஊழியர் களதும் சம்பளத்தை பத்து சதவீதத்தால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சம்பள அதி கரிப்பானது உண்மையில் அரச ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அத் துடன் ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியக் கொடுப்பனவும் ஆயிரம் ரூபா மற்றும் ஐநூறு ரூபா என இரு பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர சமுர்த்தி உதவி பெறும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கும் சமுர்த் திக் கொடுப்பனவை அரசாங்கம் அதிகரித்துள்ளது. அத்துடன் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களைப் பாதிக்கும் வரிச்சுமைகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளன.

சேரிப்புற மக்களுக்காக ஐம்பதாயிரம் வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நகரை அழகுபடுத்துவதாகக் கூறிச் சேரி ப்புற மக்களது வீடுகளை அரசு உடைத்து அப்புறப்படுத்தி வருவதாக கொழும்பில் அர சாங்கம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக இந்தப் பொய்ப் பிரசாரம் மூலமே ஐக்கிய தேசியக் கட்சி சேரிப்புற மக்களைக் குழப்பி, அவர்களது வாக்குகளை அப கரித்து, கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் வீடுகள் எனும் அறிவிப்பின் மூலம் அரசாங்கம் சேரிப்புற மக்களுக்குச் செய்யவுள்ள நன்மைகள் தற்போது அம்மக்களுக்குப் புரிந்திருக்கும்.

இவை போன்று மக்கள் நலனுக்காக 112 விசேட அம்சங்களைக் கொண்ட இந்த நிறைவான வரவு-செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்து உரையாற்றுகையில், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு வாக்களித்த மக்களை நிச்சயம் வெட்கித் தலைகுனிய வைத்திருக்கும். ஜன நாயக அரசியலில் சுதந்திரமாக நடந்து கொள்ளலாம் என்பதன் அர்த்தம் இதுவல்ல. தமது கருத்துகளைத் தமக்குரிய விவாதத்தின் போது பண்பாக எடுத்துக்கூறுவதே முறையான செயற் பாடாகும். இது இந்த இவ்வருட மக்கள் வரவு-செலவுத் திட்டத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை மட்டுமே உணர்த்தி நிற்கிறது.

அந்த வகையில் அவ்வளவு தூரம் அநாகரிகமாக அவர்கள் நடந்து கொண்டபோதும் தலை மைக்குரிய தலைமைத்துவப் பண்புடன் தனது உறுப்பினர்களைப் பொறுமை காக்குமாறு கேட் டுக்கொண்டதுடன், தானும் பொறுமை காத்து, வந்த கருமத்தை சிறப்பாக நிறைவு செய்த ஜனா திபதியை பாராட்டாமலிருக்க முடியாது. அத்துடன் சபையில் ஒரு குட்டிக் கலாட்டாவே இடம் பெற்ற போதும், எவ்விதமான சலனமும் இல்லாது அமைதியாக இருந்த மற்றைய எதிர்க் கட் சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகளையும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாராட்டுவது எமது பொறுப்பும், கடமையுமாகும்.

தேவையான விடயங்களுக்குக் குரல் கொடுத்தாலும் இதுவொரு தேவையற்ற செயல் என் பதைப் புரிந்து செயற்பட்ட தமிழ்க் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும் இது போன்று அரசுடன் இணைந்தும் செயலாற்ற முன்வந்தால் நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு கண்டு விடலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.