புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

அடைமழை; மினிசூறாவளி; மண் சரிவு; வெள்ளம்

நாடுபூராகவும் மக்களது இயல்பு நிலை பாதிப்பு 17 பேர் உயிரிழப்பு; 33 பேரைக் காணவில்லை

பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பிடங்களில் தஞ்சம்

நாடளாவிய ரீதியில் நேற்றுவரை பெய்த கடும் மழை மற்றும் மினிச் சூறாவளியினால் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென் மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் 17 உயிரிழப்புகளும் கடுமையான பாதிப்பும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் இடையூறும் ஏற்பட்டுள்ளன. மலையகத்தில் மண் சரிவுகளால் பெருந்தெருக்களில் மண் மூடப்பட்டு வாகன மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காலி, மாத்தறை பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தமையால் மின் கம்பங்கள் சேதமாகியதில் மின் பாவனையும் தடைப்பட்டிருந்தது.

விவரம் »

யாழ்ப்பாணத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம்

டிசம்பர் முதலாம் திகதி திறப்பு விழா

தினகரன், டெய்லி நியூஸ், தினமின, வாரமஞ்சரி, சண்டே ஒப்சேர்வர், சிலுமின, வானவில் உட்படப் பல பத்திரிகைகளை வெளியிடும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாணத்துக்கான அலுவலகம் புதுப் பொலிவுடன் புதிய முகவரியில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் இயங்கவுள்ளது.

விவரம் »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தினகரன் வாரமஞ்சரிக்கு பாராட்டு

அலரிமாளிகையில் வியாழன்று மாலை இடம்பெற்ற அமரர் டி.ஏ. ராஜபக்ஷ அவர்களின் நினைவு வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின், இந்து சமய விவகார ஆலோசகர் சிவஸ்ரீ பாபு சர்மா, தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகியிருந்த டி.ஏ. ராஜபக்ஷவின் கட்டுரை, ஜனாதிபதியின் பிறந்த தினம் மற்றும் பதவியேற்பு நிறைவாண்டு தொடர்பாக வெளியாகிய தனது பேட்டி என்பவற்றை ஜனாதிபதிக்கு காண்பித்து அவற்றினை மொழி பெயர்த்துக் கூறிய போது ஜனாதிபதி தினகரன் வாரமஞ்சரிக்குத் தனது பாராட்டுக் களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண் டார்.

விவரம் »

ஆட்டோவில் வருபவர்கள் விலாசம் கேட்கிறார்களா?

எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்பு வீதிகளில் ஆட்டோவில் வந்து விலாசம் கேட்போரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, தெஹிவளை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருவதாகப் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விவரம் »

இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் தமிழ் மக்கள்

தமிழ் மக்கள் தற்போதும் சம உரிமையைக் கொண்டுள்ள குடிமக்களாகக் கருதப் படவில்லை. இவர்கள் தமது கெளரவத்தையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விவரம் »

இனவாதத்தை தூண்டும் முயற்சியில் சில விஷமிகள்!

பாதுகாப்பு செயலர் கோட்டாபய குற்றச்சாட்டு

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டா பய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சிகளுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

விவரம் »

தேசிய கீதத்தைத் தமிழில் பாட இனிப் பயப்படத் தேவையில்லை

நிர்ப்பந்தித்தால் வழக்குத் தாக்கல் செய்யலாம்?

தமிழ் பேசும் மக்களால் நடத்தப்படும் பொது விழாக்கள், பாடசாலைக் கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்களில் இனி தமிழில் தேசிய கீதத்தைப் பாட பயப்படத் தேவையில்லை. இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் தேசிய கீதத்தைத் தமிழில் பாடாவிட்டால் படையினர் பயமுறுத்துவர் என்ற பயம் இருந்து வந்தது. இனி சுதந்திரமாக தமது தாய் மொழியிலேயே தமிழ் மக்கள் இதனை இசைக்கலாம்.

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

    TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.