புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

இவ்வார பலன்

27.11.2011 முதல் 03.12.2011 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேடராசிக்காரர்கள் அரச வழி உத்தியோகத்தர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் நலம் பாதிப்படையலாம். முயற்சிகள் கைகூடுவது தாமதமாகும். இனசன உறவு பாதிப்படையலாம். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். ஏதோ ஒரு வகையில் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். பலவித சிரமங்களுக்கு முகம் கொடுத்து உங்களது கடமைகளை செய்ய வேண்டி வரும். போராட் டங்கள் மிகுந்த வாரம். சமாளித்து போங்கள்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரருக்கு மனதில் தாழ்வான உணர்வு தோன்றும் அலைச்சல் கூடும். வயிறு சம்பந்தமான உபாதை ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும் பெண்வழி சச்சரவுக்கு இடம் உண்டு. வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். இவ்வாரம் கிரக நிலைகள் அவ்வளவு சிறப்பானதாக உங்களுக்கு இவ்வாரமும் சிறப்பாக அமையாதலால் நீங்கள் அமைதிகாத்து பொறுமை காத்து நடப்பது மிகவும் நல்லதாகும். மிதுன ராசிக்காரருக்கு புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

வாய்ப்புண்டு. எதிர்பாராத விதமாக பணம் வந்து சேரும். பரீட்சைகளிலும் வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய பதவி கிடைக்கலாம். உடல் நலம் மேம்படும். எடுக்கின்ற முயற்சிகள் ஓரளவு வெற்றி அளிக்கும். பகைவர்களின் தொந்தரவும் குறையும். பலவிதத்திலும் உங்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அவற்றின் முழு நன்மையான பலன்களையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
கடக ராசிக்காரருக்கு உடல் நலம் பாதிப்படையலாம். பகைவர்களின் கரச்சல்கள் இருக்கலாம். குடும்பத்தில்


கடகம்


புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

பிரச்சினைகள் தலைதூக்கும். பலவித கவலைகள் இருந்து கொண்டிருக்கும். பெண்கள் மூலம் பலவித உபத்திரவங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் இவ்வாரமும் உங்களது கிரக நிலைகள் அவ்வளவு சிறப்பானதாக அமையாததால் அதிகமாக சிறப்பான பலாபலன்களை எதிர்பார்க்க முடியாது. பலவித சிரமங்களுக்கு மத்தியில் இவ்வாரம் நீங்கள் உங்களது கடமைகளை செய்ய வேண்டியிருக்கும்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரருக்கு பெண் வழியால் பல பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படலாம். உடல் நலம் பாதிப்படையலாம். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். வீணான கலகத்துக்கு இடம் உண்டு. தாயாரின் மீது அக்கறை காட்டுங்கள். ஓரளவு திருப்தியான நல்ல செய்திகளும் கிடைக்கும். பல வித தொல்லைகளுக்கும் முகம் கொடுத்து உங்களது பிரச்சி னைகளை சமாளிக்க வேண்டி வரும். பொறுமை காத்து கொள்ளுங்கள்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரருக்கு புதிய பதவி கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். எதிர்பாராத விதமாக பணம் வந்து சேரும். பரீட்சை வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடலில் புதிய உற்சாகம் பிறக்கும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம். குடும்பத்தில் ஓரளவு ஆறுதல் கிடைக்கும். ஓரளவு காரியங்களும் கைகூடி வரும். அரச வழி உத்தியோகத்தர்கள் முன் கவனத்துடன் நடப்பது நல்லது. எதிரிகளின் தொந்தரவும் இருக்கும்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலா ராசிக்காரருக்கு பெருமளவு செலவுகள் ஏற்படும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். தாழ்மையான உணர்வு மனதில் ஏற்படும். வீண் பெயர் கேட்க நேரிடும். அடிக்கடி கோபம் ஏற்படலாம். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். குடும்பத்தில் தகராறுக்கு இடம் உண்டு. திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும். நீங்கள் சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகி முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். சமாளித்து நடப்பது நன்று.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக்காரருக்கு சமூகத்தில் இருக்கும் செவ்வாக்கு குறைய நேரிடலாம். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலம் பாதிப்படையலாம். உறவினர்களுடன் பகைமை ஏற்படலாம். செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். வீண் பகைமைக்கும் இடம் உண்டு. நெருப்பு தொழிலுடன் தொடர்புடையவர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரருக்கு இடமாற்றத்துக்கு இடம் உண்டு. கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் பரீட்சை வழக்கு முடிவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் அமையாது. எதிரிகளின் தொந்தரவு இருக்கும் உடல் நலம் பாதிப்படையலாம். பலவித யோசனைகள் மனதில் இருக்கும். வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். எதிர் பாராத விதங்களில் கஷ்டங்கள் வந்த போதிலும் குரு பகவானின் அனுகூலம் இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரருக்கு புதிய சொத்துக்கள் வந்து சேரலாம். உடல் நலம் மேம்படும். செய்கின்ற தொழில் இலாபம் ஏற்படும். அரச பதவி வாய்ப்பு ஏற்படலாம். குடும்பத்தில் மனைவியாலும் பிள்ளைகளாலும் சந்தோஷமான செய்தி கிடைக்கும். விவசாயிகளுக்கு இலாபமாகும். பெண்வழி சுகம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவும் உண்டு.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக்காரருக்கு நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் பலவித சஞ்சலங்களுக்கு மத்தியில் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். மேலும் திடீர் பண வரவுக்கும் இடம் உண்டு. வராத பாக்கி வந்து சேரும். குடும்பத்தில் மனைவியாலும் பிள் ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். பெண்வழி சுகம் கிடைக்கும். மேலும் இதயம் சம்பந்தமான வைத்திய சிகிச்சை ஏற்படலாம். வீணான பெயரும் கேட்க நேரிடலாம்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்கள் போக்குவரத்தில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். வீணான தாழ்மையான உணர்வு ஏற்படும். உடல் நலம் பாதிப்படையலாம். எதிலும் முன் கவனம் நன்று எதிரிகளின் பிரச்சினைகள் இருக்கும். எடுக்கின்ற காரியங்கள் தாமதமாகி நிறைவேறலாம். உங்களுக்கு குரு பகவானின் வாக்கு தானத்திலும் குடும்ப தானத்திலும் செல்வாக்கு தானத்திலும் அமர்ந்திருப்பது எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.