புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 

யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனம் புதிய மருத்துவக் காப்பீடான “Union Family Health Net” காப்புறுதித் திட்டத் தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இக் காப்பீட்டு திட்டத்தினூடாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், OPD சிகிச்சைகள் மற்றும் மேலதிக அனுகூலங்களுடன் முழுப் பாதுகாப்பும் வழங்கப்படுகின்றது.

இலங்கையின் மிகப் பெரிய ஆயுட்காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வரும் யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனம் இக் காப்புறுதியின் அனைத்து செயற்பாடுகளும் சேவைகளும் வெளிப்படையானதாகவும் வசதியானதாகவும் உபசரிப்பானதாகவும் தமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்ததோர் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தினை வழங்கும் நோக்குடனும் இந்த “ஸிnion பிaசீily சிலீalth னிலீt” காப்புறுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

“Union Family Health Net” என்பது ஆணடு வரம்பின் கீழ் ஆபத்தான நோய்களுக்கு 150% காப்புறுதியளிக்கும் இலங்கையின் ஒரே மருத்துவக் காப்புறுதி திட்டமாகும். இக் காப்பீட்டின் கீழ் 30 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் விபத்துக்களால் ஏற்படும் மரணத்திற்கு ஆண்டு வரம்பின் அடிப்படையில் 200 வீதம் காப்புறுதியளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் காப்பீட்டு ஆவணமானது இலங்கையில் வசிக்கும் 1 வயது முதல் 65 வயது வரையான நிரந்தர பிரஜைகளுக்கு தனி அல்லது குடும்ப காப்புறுதியாக அவர்களின் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதன் தனித்தன்மை வாய்ந்த top-up எனும் விசேட அம்சத்தினூடாக ஒருவர் தம் வேலைத்தளத்தில் இக் காப்பீட்டின் கீழ் காப்புறுதி பெற்றிருந்தால் அவர் மேலதிக தொகையை செலுத்துவதன் மூலம் தமது குடும்பத்தினருக்கும் அதே காப்புறுதியினை நீடித்துக் கொள்ள முடியும்.

இது சம்பந்தமாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவின் பொது முகாமையாளர் ருவந்தி குணரத்தின கருத்துத் தெரிவிக்கையில், “சுகாதார காப்புறுதியொன்றை தேர்ந்தெடுக்கும்போது நாம் கவனம் செலுத்த வேண்டியது அதன் சொகுசான வசதிகள் மற்றும் நடைமுறையில் அவ்வசதிகளை பெற்றிடக்கூடிய வசதி வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதாகும். நாம் எமது காப்பீட்டாளர்களுக்கு எதிர்பாராத நோய்கள் ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கான பணத்தினை அவர்களுக்கு செலுத்த இடமளிக்காது, அவர்கள் பண ரீதியாக பாதிக்கப்படும்போது எமது காப்புறுதியுனூடாக கைகொடுப்போம். இதற்கிணங்க இக் காப்புறுதித் திட்டமானது மிகச் சிறந்ததொரு தீர்வாக அமைவதோடு எமது பங்குதாரர்கள் எம்மீது நம்பிக்கை கொள்வதற்கான ஒரே காரணம் என்றார்.

“Union Family Health Net” மருத்துவ சிகிச்சைகளின் போது மேலதிக செலவுகளை தீர்க்க உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இக் காப்புறுதியானது ஐந்து திட்டங்களை கொண்டுள்ளது.

வெளிப்படையான மற்றும் உறுதியான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதை நோக்காக கொண்டு செயற்படும் நாட்டின் முன்னணி காப்புறுதி சேவை வழங்குனராகத் திகழும் யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் இப்புதிய காப்புறுதி ஓர் மைல் கல்லாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.