புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 

யோகா ஆசிரியையாக நடிக்கும் நமீதா

யோகா ஆசிரியையாக நடிக்கும் நமீதா

கவர்ச்சி நாயகி நமீதா லவ் காலேஜ் என்ற தெலுங்கு படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார்.

இந்தியாவில் தென்னிந்திய திரையுலகில் தனக்கே உரித்தான கவர்ச்சி அழகில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பெற்றவர் நமீதா.

இவர் சமீபத்தில் படங்களில் அழுத்தமான, முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்து வாய்ப்புக்காக காத்திருந்தார்.

நமீதா எதிர்பார்த்த கதாப்பாத்திரத்தைக் கொடுத்து தெலுங்கு பட உலகம் அவரை அரவணைத்துள்ளது. இளமை துள்ளும் பொழுதுபோக்கு தெலுங்கு படமான லவ் காலேஜ் படத்தில் நமீதா யோகா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக நடித்துள்ளார்.

திரை ரசிகர்களுக்கு இதுநாள் வரையில் நமீதா கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவரை கவர்ச்சியாக பார்க்க முடியாது.

லவ் காலேஜ் படத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்தப்படத்தைப்பற்றி இயக்குனர் nஜய் சிம்ஹா ரெட்டி கூறியுள்ளதாவது, நமீதாவோட சினிமா வாழ்க்கையில் லவ் காலேஜ் திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

லவ் காலேஜ் தெலுங்கு படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.