புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
பலதும் . . .

சேட்டை செய்த மகன்...

பொலிஸில் பிடித்து கொடுத்த தாய்

அமெரிக்காவில் தாயார் ஒருவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தனது மகனை திருத்துவதற்காக பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வருபவர், சிக்கிடா ஹில் ( திgலீ - 33) என்பவரின் மகனாக சீன் (ஷிலீan திgலீ -10) வீட்டில் அதிக சேட்டை செய்து வந்துள்ளான்.

மேலும், பாடசாலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவருடைய ஆசிரியர், சிக்கிடாவிடம் புகார் தெரிவித்தி ருந்தார். இதனால் மகனை திருத்துவதற்கு சிக்கிடா முயற்சி செய்துள்ளார். ஆனால் சீன் சொல் பேச்சை கேட்காமல் தனது சேட்டையை தொடர்ந்துள் ளான்.

இதனைத் தொடர்ந்து, தனது மகனை திருத்துவதற்காக பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார். அவர் பொலிஸாரிடம் நடந்தவற்றை கூறி, எனது மகனை கைது செய்வது போன்று பயமுறுத்தும்படி கேட்டுக் கொண் டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த பொலிஸார், சீனை கைது செய்து அழைத்து சென்றனர், இந்த செயலால் பயந்துபோன சீன், நான் இனிமேல் ஒழுங் கீனமாக நடந்து கொள்ளமாட்டேன் என்று அழுது கெஞ்சியுள்ளான். பின்னர், பொலிஸார் சீனை, வீட்டில் விட்டு விட்டு சென்றுள் ளனர்.

இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இறந்தவர் கண் விழித்துவிட்டு மறுபடியும் இறப்பு

இறந்ததாக கருதப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தவர் திடீரென கண் திறந்தார். பிறகு சில மணி நேரத்தில் இறந்துவிட்டார்.

புதுவையை அடுத்த வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (54) இவர் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். ஆனாலும், சரிவர குணமாகாததால், அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில், திடீரென பாரி எந்த அசைவுமின்றி கிடந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக கருதிய குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

பின்னர் இறுதி சடங்கிற்கான வேலைகளில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெட்டிக்குள் வைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு பாரியின் கை, கால்கள் அசைந்துள்ளன. மேலும், கண்களையும் திறந்து பார்த்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை, அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பாரி இறந்து விட்டார். பிறகு அவரை, இறந்தவருக்கு செய்யும் சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.


உணவு விடுதி ஊழியருக்கு 2000 டொலர் ரூபா டிப்ஸ்

அமெரிக்காவில் உணவு விடுதியொன்றில் பணியாற்றும் யுவதியொருவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் 2000 டொலர் (சுமார் 260,000 ரூபா) டிப்ஸ் வழங்கி இன்ப அதிர்ச்சியளித்துள்ளார். அவ்வாடிக்கையாளரின் பில் தொலை 278 டொலர்கள் மாத்திரமே. ஆனால், அதை விட சுமார் 8 மடங்கு அதிக தொகையை ஊழியருக்கான டிப்ஸாக அந் நபர் வழங்கியுள்ளார். ஆர்கன்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஸ்மித் நகரில் கடந்த முதலாம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதான லோரன் லோபஸ் எனும் மேற்படி யுவதி ஆர்கன்சாஸ் பல்கலைக்கழக மாணவியாவார்.

இவர் பகுதி நேர ஊழியரான மேற்படி விடுதியில் பணியாற்றுகிறார். வழக்கமாக அந்த உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளரான பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி மற்றொரு நண்பருடன் மேற்படி விடுதிக்கு வந்தபோது இந்த வெகுமதியை அளித்ததாக லோரன் லோபஸ் தெரிவித்துள்ளார். “அவ்வாடிக்கையாளரை இதற்கு முன்னரும் கண்டுள்ளேன். ஆனால், ஒருபோதும் நான் அவருடன் உரையாடியதில்லை. அன்றைய தினம் அவர் உணவு உட்கொண்டபின், 278.55 டொலருக்கான பில்லை வழங்கினேன்.

அவர் அத்தொகை¨யுடன் 2000 டொலருக்கான டிப்ஸையும் அதில் சேர்த்து எழுதி கடன் அட்டையை தந்தார். நான் உடனடியாக அதை பார்க்கவில்லை. எனது இருக்கைக்குச் சென்று கணனியில் அத்தொகையை பதிவு செய்ய முயன்றபோதுதான் 2000 டொலர் டிப்ஸாக குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானித்தேன். என்னால் அதை நம்பமுடியவில்லை. 2 நிமிடம் என்னால் பேச முடியவில்லை.

அப்போதும் வாடிக்கையாளர் தனது மேசையில் இருந்தார்.

நான் ஓடிச்சென்று அவரை கட்டித் தழுவி மில்லியன் தடவை நன்றி கூறினேன்” என லோபஸ் தெரிவித்துள்ளார். இதற்கு வாடிக்கையாளரான அப்பெண் பதிலளிக்கையில், “டிப்ஸ்” வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால், இது மக்களுக்காக நான் செய்யும் ஒரு விடயம். நானும் முன்னர் உணவு விடுதியில் உணவு பரிமாறும் ஊழியராக பணியாற்றியவள். அப்போது எனக்குக் கிடைத்ததை முன்னர் நான் இப்போது மற்றவர்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன்” எனக் கூறியதாக லோரன் லோபஸ் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்தின் மிகச்சிறிய நாய் டிஸ்னி

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்டில் வசிக்கும் நடாலி வேன்ஸ் என்பவருக்கு சொந்தமான நாய்க்குட்டி தான் டிஸ்னி, இல்லை, நாய்க்குட்டியை விட குட்டியான நாய்தான் டிஸ்னி. கடந்த ஜனவரி மாதம் 3 நாய்க்குட்டிகளுடன் சேர்ந்து இந்த பூமிக்கு வந்த டிஸ்னியை நாய்க்குட்டி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு பூனைக்குட்டி போலவே தோற்றமளிக்கும் டிஸ்னியின் உயரமோ 3 அங்குலம் தான் (7.62செ.மீ) எடையோ 405 கிராம் மட்டுமே. டிஸ்னியுடன் பிறந்த 3 நாய்க்குட்டிகளும் நெடுநெடுவென வளர டிஸ்னி மட்டும் வளர்ச்சியில் பின் தங்கி விட்டது.

இதனாலே, மற்ற நாய்க்குட்டிகள் எல்லாம் டிஸ்னியை கேலிப்பொருளாக்கி காயப்படுத்த, நடாலி அதை எப்போதும் தன்னுடனே வைத்துக்கொண்டு பாதுகாத்து வருகிறார். டிஸ்னியின் தற்போதைய வளர்ச்சி விகிதத்தை வைத்துக் கணக்கிடும் போது விரைவில் அது கின்னஸ் சாதனை படைக்கும் என்று இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான மிரர் (ணியிஞிஞியிஞி) தெரிவித்துள்ளது.


1,700 மைல்கள் பறக்கும் பிளாக் வார்ப்லர்

பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் என்பது தெரிந்ததுதான். பெரிய கொக்குகள், நாரைகள், கழுகுகள் போன்ற பறவைகள் அத்தனை தூரம் எடையே உள்ள, பிளாக் வார்ப்லர் என்று அழைக்கப்படும் பாடும் சின்னஞ்சிறு பறவை, 1,700 மைல்கள் பறக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும் இரை தேடவோ, ஓய்வெடுக்க கூட எங்கும் நிற்காமல் பறக்கக்கூடிய சக்தி, இந்த பறவைக்கு இருக்கிறது. சிட்டு குருவி போல இருக்கும், 40 பிளாக் போல் வார்ப்பலர்களின் கால்களில் சிறிய மின்னணு சாதனத்தை இணைத்து விஞ் ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள் ளது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று கண்டம் விட்டு கண்டம் பறக்கும் இந்த பறவைகள், கடல் மீது பறந்தாலும், நதி மீது பறந்தாலும் துளிகூட தண்ணீரும் குடிப்பதில்லை என்பதுதான் ஆச்சரியம்.


குண்டு மனிதருக்கு மறுவாழ்வு அளித்த பெண் வைத்தியர்

சக்கர நாற்காலியில் முடங்கிப் போயிருந்த குண்டு மனிதருக்கு, பெண் வைத்தியர் ஒருவர் மீண்டும் வாழ் வளித்துள்ளார். பிரித்தானியாவில் சஃபோல்க் பகுதி அருகேயுள்ள இப்ஸ்விச் நகரை சேர்ந்தவர் பால் மேசன் (54). உலகின் அதிக எடை கொண்ட மனிதராக ஒரு காலத்தில் அறியப்பட்ட இவர், தபால்காரராக பணியாற்றியிருந்தார்.

சுமார் 450 கிலோ எடையுடன் இருந்த இவர். உடல் பருமன் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டு உடலின் உடையை கணிசமாக குறைத்தார். எனினும் சதைதான் கரைந்ததேயொழிய, தோல் பகுதிகள் தனி உறுப்புகள் போல் தொங்கிக் கொண்டிருந்தன.

தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தொங்கிய சுருங்கிப்போன தோல் உடலுக்கு அதிக அசெளகரியத்தை ஏற்படுத்த, நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியே கதியாக முடங்கிப்போனார். இவரது பரிதாப நிலையை அறிந்த வைத்தியர் ஜெனிபர் கல்பா என்பவர் இவருக்கு நியூயோர்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் வைத்தியசாலையில் வைத்து இலவசமாக சத்திர சிகிச்சை செய்து வைத்தார்.

இதனையடுத்து தேவையில் லாத தோல் பகுதி வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் தற் போது பால் மேசன் சுய மாக எழுந்து நடமாட தொடங்கியுள்ளார்.

 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.