புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 

சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் எனும் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது

தமிழரின் சம்பூர் விடுவிப்பு:

மண் மீட்புப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

புதிய அரசிற்கு சம்பந்தன் நன்றி: எவரும் எதிராக செயற்பட
வேண்டாமெனவும் கோரிக்கை

முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்ட திருகோண மலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியை தற்போதைய அரசு மக்களிடமே மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின் றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த முதலாவது மாபெரும் வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்த மண்ணில் மீள் குடியேறி தொழில் செய்து சுதந்திரமாக வாழவேண்டும் என்ற தமிழ் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்பதில் உறுதியாக விடாப்பிடியாக இருந்து வந்த சம்பூர் பகுதி மக்களின் இந்த விடாப்பிடி தற்போது புதிய அரசில் வெற்றியளித் துள்ளது.

விவரம்



நாட்டின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதில் களுத்துறை மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியது. பேருவளை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காட்சியையும், மேல் மாகாணசபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல், பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
 (படம்: பி.எம்.முக்தார்)
 

புதிய அஸ்கிரிய மஹாநாயக்கர்

அஸ்கிரிய பீடத்தின் புதிய மஹாநாயக்கராக வண. கலகம ஸ்ரீ அத்ததர்ஸி தேரர், வெள்ளிக்கிழமை (08) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரக் ஹித்த தேரரின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் தேரர்கள் அடங்கிய நிறைவேற்றுக் குழுவே இவரைத் தெரிவு செய்தது.  

டேவிட் கமெரோனுக்கு
ஜனாதிபதி வாழ்த்து

பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமெரோனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அத்துடன் பிரித்தானியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு ஒத்துழைப்புடன் முன்னோக்கி நகர்வதற்கு இலங்கை எதிர்பார்த் திருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

சில ஊடகங்கள் மீது நம்பிக்கை இழப்பு:

முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டோர் வி~மப் பிரசாரம்

வில்பத்து விவகாரம் குறித்து அமைச்சர்
ரிசாத் கவலை

வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரிசாத் தெரிவித்தார்.காழ்ப்புணர்வு கொண்ட இனவாத தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி . . . . .

 விவரம்»

வரும் பொதுத் தேர்தலை விகிதாசார முறையிலேயே நடத்த வேண்டும்

சிறுபான்மை, சிறிய கட்சிகள் கூட்டாக முடிவு

தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படியே நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அவசர . . . .

 விவரம்»

இந்திய மீனவர்கள் குழு நாளை ரணிலுடன் பேச்சு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆறு பேரடங்கி இந்திய மீனவர்கள் குழு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோ ருடனும் இந்தக் குழு பேச்சு நடத்தும் என்று இலங்கை இந்திய மீனவர் பேரவையின் இலங்கை . . . . .

 விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.