புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
ஒரே பாதையில் பயணிக்கும் சர்வதேசமும் புதிய அரசும்

ஒரே பாதையில் பயணிக்கும் சர்வதேசமும் புதிய அரசும்

இலங்கை அரசுக்கு பலம் சேர்க்கும் ஜோன் கெரியின் விஜயம்

கடந்த மே தினம் சகல கட்சிகளுக்கும் மிக முக்கிய தினமாகியது. காரணம் இவ்வருடத்தின் மே தினமானது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டமாக அமைவதற்குரிய சாத்தியம் இருந்தமை யேயாகும். இதனால் சகல கட்சிகளும் தங்களது கட்சி உறுப்பினர்களை அதி கூடியளவில் மேதினக் கூட்டங்களில் பங்குபற்றச் செய்து தங்களது மக்கள் சக்தியை நாட்டுக்குக் காட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தன. ஹைட்பாக் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சியின் மே தினக் கூட்டமானது இதற்கு மாற்றமானதாக இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா உட்பட முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன அடங்கலான கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக முக்கியமானதோர் விடயத்தைக் கூறினார். அதாவது, இலங்கையில் மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் போன்ற விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்த வருடத்தின் பின்னர் தான் இடமளிக்கப் போவதில்லை என்பதே அந்த விடயமாகும்.

இதனால் அவர் குறிப்பிட்டிருப்பது சர்வதேச சமூகத்தை ஓரங்கட்டும் விடயத்தையல்ல. அவர்களால் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கேற்ற நிலை ஏற்படாத வகையில் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்ள சகல குறைபாடுகளும் நீக்கப்படும் என்பதே. நாட்டில் ஜனநாயகம், மற்றும் மனித உரிமைகளை மீண்டும் உருவாக்கி ஐக்கிய இலங்கையாக தாய் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், இதனூடாக சர்வதேச சமூகத்தினருக்கு எமது நாட்டு விடயங்களில் தலையிட இடமளிக்கப்பட மாட்டாது என்றே ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி பொது அபேட்சகராக நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிலையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் பெரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

19வது திருத்தத்தின் ஊடாக செயன்முறை ரீதியில் அதனை உறுதிப்படுத்தியுள்ள ஒரு நிலையிலேயே, அத்தோடு நிறுத்திக் கொள்ளாது தனது பொது அபேட்சக ருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் யெற்பட்டு வரும் ஒரு நிலையிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சர்வதேசத்தினருக்கு மீண்டும் எமது நாட்டு விடயங்களில் தலையிடுவதற்கு இடமளிக்காத வகையில் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விடயங்கள் வலுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் கூறியுள்ளதைப் போன்ற கருத்தையே அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரும் கூறியிருக்கின்றார். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே தேடிக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார்.

ஜோன் கெரியின் இந்த கருத்து தொடர்பில் இரு விடயங்கள் தெளிவு பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது விடயம், தேசிய பிரச்சினைக்கு அவர்களது தலையீடுகளோ, அழுத்தங்களோ இல்லை என்பது. இரண்டாவது விடயம், நேரடியான முறையில் வெளிப்படுத்தப்படாததாகும். அதாவது அமெரிக்கா தலையிடாமல் இருந்தாலும் அவர்கள் விரும்பாத வகையிலான தீர்வு ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் செல்லாது என்ற நம்பிக்கையாகும்.

மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதியின் உரையானது அந்த நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதானதாகும். அது அமெரிக்கா மாத்திரமின்றி இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களுக்கிடையிலான நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதானதாகும்.

அமெரிக்கா இராஜாங்கச் செயலாளரின் வருகை தெளிவுபடுத்தும் ஒரு பிரதானமான விடயம் இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கொள்கையாகும். தற்போது அரசாங்கம் தமது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் கட்டுப்படாத தன்மையினைக் கடைப்பிடிப்பதாகவே கூறுகின்றது. அது உண்மையானதாக அமைவது, கடந்த அரசாங்கத்தைப் போல தற்போதைய அரசும் சீனாவுக்கு மாத்திரம் தனது வெளிநாட்டுக் கொள்கையினை விட்டுக்கொடுக்காது இருந்ததாகும். அந்த வெளிநாட்டுக் கொள்கை இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலகில் ஏனைய நாடுகளுடனும் பயனுள்ளவாறான இணைப்புக்க ளுடனும், கட்டுப்படாத தன்மையினையும் கடைப்பிடிப்பதாகும்.

எவ்வாறாயினும் ஜோன் கெரியின் உரையானது ஒரு புறத்தில் தமது ஆதிக்கத்திலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு ஆயத்தமாவதை தெரிவிப்பதாக அமைகின்றது. மறுபுறத்தில் அதற்காக முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளாத விடயத்தை குறிப்பிடுகின்றது. காணாமல் போனோர் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் இதனை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. ஒற்றுமை, சமரசம் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் ஒரே விதமான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கூறும் ஜோன் கெரி, காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையோ அல்லது அதற்குச் சமனான விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் மேதின உரையானது ஜோன் கெரி உட்பட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய பதிலாக எடுத்துக்கொள்ள முடியும். காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவும் தமது பணியை ஆரம்பிப்பதானது அந்த காரணத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

ஆணைக்குழுவின் விசாரணைக்காக நான்கு உதவிக் குழுக்களும் இவ்வாரத்தில் நியமிக்கப்பட உள்ளது. இவ்விடயம் சம்பந்தமான ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு, உதவிக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் அந்த இடைக்கால அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தினுள் அந்த அறிக்கையின் பரிந்துரையினை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பது மிக நல்லதொரு விடயமாகும். அதேபோல அதனுடன் தொடர்புடைய சகல நடவடிக்கைகளும் சிறந்த முறையில் செய்யப்படுவதும், உள்நாட்டு வெளிநாட்டு நம்பிக்கையினை உறுதிப்படுத்திக் கொள்வதும் மிக முக்கியமான விடயங்களாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார். தொடர்ந்தும் அவ்வாறே நடந்தால் கட்டுப் படாத தன்மையினை நிஜமாக்குவது கடினமான காரியமாக அமையாது.

எவ்வாறாயினும் சீனாவுக்கு கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு இருந்த இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை விரிவுபடுத்தப்பட்டு உலகின் கவனத்தை இலங்கை ஈர்த்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இதன் பலனாக அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு அமெரிக்காவிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாரத்தில் இலங்கை வர இருக்கின்றது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது இவ்வாறு புதிய வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

என்றாலும் அவ்வாறே தற்போதைய அரசாங்கம் அல்லது வரும் காலங்களில் அமைய இருக்கின்ற அரசாங்கம் இலங்கையின் தேசிய கொள்கை தொடர்பில் தனது கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும். கட்டுப்படாத வெளிநாட்டுக் கொள்கையினை அதன் தேசிய கொள்கையானது உறுதியாக இருந்தால் மாத்திரமே நிஜமாக்க முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.