புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
கலாபூ'ணம் மாத்தளை பெ.வடிவேலனுக்கு ஆக்க இலக்கியத்திற்கான விருது

கலாபூ'ணம் மாத்தளை பெ.வடிவேலனுக்கு ஆக்க இலக்கியத்திற்கான விருது

டெனிஸ் - தமிழ் உறவுகள் மிகத்தொன்மையானவை. அவர்கள் தரங்கம்பாடியில் அமைந்து துறைமுக வர்த்தகக் கோட்டை இதற்கு ஒரு சான்றாகும். புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழர்கள் இவ் உறவில் புதியதோர் சகாப்தத்தை உரு வாக்கியுள்ளனர். இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ந்த்தும் தமிழ் இலக்கியங்களை அங்கு அறிமுகம் செய்து வருவதும் புலம் பெயர்ந்த இலக்கிய கர்த்தாக்களின் பணிகளுள் முக்கியமானதாக விளங்குகின்றது.

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க்கினை 1913-1914 காலப்பகுதியில் வெளியான தமிழ் சிறுகதை நூல்களில் தங்களுடைய "அட்சயவடம்" சிறுகதைத்தொகுதி முதன்மையான சிறந்த சிறு கதைத்த்தொகுதி என தெரிவு செய்யப்பட்டு டென்மார்க் இலக்கிய மேதை அனசன் விருதை வழங்கி கெளரவிக்கவிருக்கின்றது.

வீரகேசரி நடாத்திய நான்காவது மலையக சிறுகதை போட்டியில் முதற்பரிசு உட்பட துரைவி தினகரன் சிறுகதைப் போட்டி, கலை ஒளி முத்தையாப்பிள்ளை சிறுகதை போட்டி, உதயன் வெள்ளிவிழா சிறு கதைபோட்டி ஆகியவற்றில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.

மலையக பாரம்பரிய கலைகள், அட்சய வடம் (தமிழியல் விருது) மலைய கத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும், மலையக நாட்டுப் புறவியலில் மாரியம்மன், திருக்கோயில்களில் குடமுழுக்கு என்றும் கும்பாபிஷேகம், கோபுரதரிசனம் மாத்தளை அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அற்புதத் திருவருள், இலக்கியத்தில் மாத்தளை முத்துமாரியம்மன், கடலம்மா ஏனிந்த சீற்றம் (கவிதை), மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருப் பொன்னூஞ்சல், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருப்பள்ளியெழுச்சி (நூல் இறு வட்டு), கதிர்காம முருகன் திருவடி போற்றி 108 (நூல், இறுவட்டு) கதிர் காம முருகன் காவடிச்சிந்து (இறுவட்டு) ஆகிய நூல்களை வெளி யிட்டுள்ளார். இவரது சிறுகதைகள் பல தமிழகத்தில் மறுபிரசாரம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆங்கில, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

நுனிக்கரும்பு, தொடுவானம் நோக்கி, அக்கினித் தீர்த்தம் என்பன இவரது தொடர் நவீனங்களாகும். கொழும்பு தமிழ்ச்சங்கம் நடாத்திய குறுந்திரைப்பட போட்டியில் இவரது "பால்மரங்கள்" குறுந்திரைப்படம் பரிசு பெற்றுள்ளது. மாற்று சிந்தனைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் ஸ்தாபனம் நடாத்திய குறுந்திரைப் பட போட்டியில் இவரது "குளவிகள்" என்னும் படைப்பு சிறந்த எழுத் தாக்கத்திற்கான பரிசைப் பெற்றதுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.