புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
மனித உரிமைகளை பாதுகாக்கும் முன்னோடிகளாக தமிழர்கள் மாற வேண்டும்

மனித உரிமைகளை பாதுகாக்கும் முன்னோடிகளாக தமிழர்கள் மாற வேண்டும்

உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனித ஆற்றல் வீணாகின்றது, வன்முறை தலைவிரித்தாடுகின்றது. உலகில் எங்கு திரும்பி னலும் மனித குலத்துக்கெதிரான வன்முறைகள் மலி;ந்து விட்டநிலையிலும், அவற்றைத் தடுப்பதற் கான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் காலத்தின் தேவை யறிந்து, அதற்காகத் தனது பங்களிப்பனை நல்கியிருக்கின்றார், வவுனியா இராசேந்திர குளத்தி னைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிட மாகவும் கொண்ட தா.தேச. இலங்கை மன்னன். கணக்காளரும் கணக்கியல் விரிவுரையாளருமான இவர், சர்வதேச மனித உரிமைச் சாசனத்தினை பாமர மக்களும் வாசித்தறியக் கூடிய வகையில் எளிய வடிவில் தந்துள்ளார். இவரது 'சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 மானுடத்தின் சாதகம்' எனும் நூல் இன்று மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்படுகின்றது. இந்நூல் குறித்து தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்காக மனம் திறக்கின்றார் இலங்கை மன்னன்….…

உங்கள் நூலின் பெயர் 'மனித உரிமைச் சாசனம் மானுடத்தின் சாதகம்' என்பதாக அமைந் திருக்கின்றது. உண்மையில் அதன் மூலம் நீங்கள் சுட்ட விளைவது என்ன?

இந்துக்களின் மரபில் மனிதனின் வாழ்வு அவனது சாதகத்தில்தான் தங்கியிருக்கின்றது. சாதகம் பிழை த்தால் தமக்கு வாழ்வே இல்லை யென்பது அவர்களது நம்பிக்கை. அதுபோலத்தான் மனித உரிமைகள் மறுக்கப்படும்போது மனிதர்களின் வாழ்வே மாறுகின்றது. அதனாலேயே அவ்வாறு பெயரிடப்பட்டது.

மனித உரிமைச் சாசனம் என்ப தென்ன?

இரண்டாம் உலகப் போரின் பின்னராக பரவலாக எழுந்த மனித உரிமைக்குரலின் பிரதிபலிப்பாக, அன்று 58 நாடுகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த சாசனம். இன்றிருக்கும் 194 நாடுகளும் எற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுதான் அதன் சிறப்பும் பலமும்.

மனித உரிமைச்சாசனம் முழுவதுமே இந்நூலில் உள்ளடங்கியிருக்கின்றதா?

அதனை அப்பிடியே விரிவான வடிவில் தந்தால் அனேகரால் அதனை புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அதனாலேயே மூன்று பிரிவாக வகைப்படுத்தி சாதாரண மக்களும் சர்வதேச மனித உரிமைகள் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வகை யில் எளிமையாகத் தந்திருக்கின்றேன். முதலாவ தாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கான தேவைகளை அறிந்த உலகம், அதனை விரைவு படுத்தத் தூண்டிய காலகட்டம், அதனை உருவாக்க முன்வந்த நாடுகள் எனறு விரிகி;ன்றது. இரண்டாவது பகுதி மனித உரிமைச் சாசன விதிமுறைகளைத் தெரி ந்து கொள்வதற்காக பரிமாறப்பட்ட அனுபவ ங்கள், இறுதிப் பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 30 விதிமுறைகள் என்பன வற்றைச் சொல்கின்றது,

இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதற் காக 2011 ஆம் ஆண்டு வரை ஏற்படுத் தப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மாநாட்டுத் தீர்மானங்கள், உள்ளடக்கப்பட்ட கூடுதல் நெறிமுறை கள் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனக் கருவிகள் என்பனவற்றை மூன்றாவது பகுதி உள்ளடக்கியி ருக்கின்றது.

1960. 70 களில் ஈழத் தமிழ் இளைஞர் இயக்கத்துக்கு தலைமை தாங்கி சாதீய அடிப்படையில் நிகழும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டங் களை நடாத்தியவர் நீங்கள் அதன் தொடர்ச்சி யாகத்தான் இந்நூல் வெளியிடப்படுகி;ன்றது எனக் கொள்ளலாமா?

எங்கெல்லாம் மனித குலத்துக்கெதிரான அநீ திகள் இடம்பெறுகின்றனவோ அப்போதெல்லாம் அதற்கெதிராக வெகுண்டெழுவது மனித இயல்பு. குறுகிய மத. இன சாதி உணர்வுகளால் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் இனங்களில் ஒன் றாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் தமிழினம் மனித உரிமைகள் பற்றிய தெளிவான அறிவி னைப்பெற்று அதனைக் காக்கும் முன்னோடிகளாக வேண்டும் என்பது எனது அவா. (21ம் பக்கம் பார்க்க)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.