புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
மனித உரிமை பேரவையில் போலி குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படும்

மனித உரிமை பேரவையில் போலி குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படும்

சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை யிலான குழு ஜெனீவா சென்றிருப்பது, இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த பதில்களை வழங்கி, குற்றச்சாட்டுக்களிலிருந்து நாட்டை விடுவிக்கச் செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்களில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டதால், இம்முறையும் அவர் தலைமையில் குழு ஜெனீவா சென்றிருப்பதால் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு செயலூக்கமான பதில்களை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், இலங்கைக்கு எதிராக வழக்கொன்றைக் கொண்டுவரும் நோக்கிலுமே சில சர்வதேச சக்திகள், இலங்கைக்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

இலங்கைக்கு எதிரான பிரேரணைகளைக் கொண்டுவந்து நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவருவதற்கும் சர்வதேச சக்திகள் முயற்சிக்கலாம். எனினும், இக்குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தகுந்த பதில்களை வழங்கும். இதற்கு அரசு தயாராகவே உள்ளது என்றும் சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து இலங்கைக் குழுவினர், சர்வதேச சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்துவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.