புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
பாராளுமன்ற புதிய எம்.பி.க்கள் குழு பிரிட்டன் விஜயம்; புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு

பாராளுமன்ற புதிய எம்.பி.க்கள் குழு பிரிட்டன் விஜயம்; புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு

நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள காரணங்களையும் கண்டறிவர்

பாராளுமன்றத்திற்கு முதற் தடவையாக தெரிவு செய்யப்பட்ட பல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று இன்று 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரிட்டனுக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

யுத்தத்திற்கு பின்பு நல்லிணக்கத்திற்கு தடையாகவுள்ள கார ணிகள் தொடர்பாக ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள புலம் பெயர் மக்களை சந்தித்து இக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர். இந்தக் குழுவில் லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த சேனாநாயக்க, ஷேஹான் சேமசிங்க, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாருக், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, நிரோஷன் பெரேரா, தமிழ் தேசிய கூட்டமைப்பு ரகு பாலச்சந்திரன் ஆகியோர் இவ்விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ரோயல் பொது நலவாய சங்கம், இண்டநேஷனல் அலட், வன்டெக்ஸ் இனிசியேட்டிவ் ஆகிய3 அமைப்புகள் கூட்டாக விடுத்த அழைப்பின் பேரிலேயே இக்குழுவினர் அங்கு செல்கின்றனர்.

இவர்கள் பல்வேறுப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள புலம் பெயர் இன, மத அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அத்துடன் அந்நாட்டு ஜனநாயக நடை முறைகளை அறிந்து கொள்வதற்காக உள்ளுர் மற்றும் தேசியயஅரச நிறுவனங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.