புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
விசுவமடுப் பயணத்தில் கிடைத்த புதிய அனுபவங்கள்

விசுவமடுப் பயணத்தில் கிடைத்த புதிய அனுபவங்கள்

செழிப்பாக வளர்ந்திருக்கும் தென்னந் தோட்டங்கள்

ணீங்களால் சகல மக்களையும் சில சமயங்களில் ஏமாற்றலாம். அதேபோல் உங்களையும் சில மனிதர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் ஏமாற்றக்கூடும். ஆனால் உங்களால் சகலரையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏமாற்ற முடியாது.

பேர்னாட் ஷோ என்ற எழுத்தாளர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய அந்த பெறுமதிமிக்க வார்த்தைகள், எல்.ரீ.ரீ.ஈ. அன்று ஏமாற்றிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களின் மத்தியில் நாம் சந்தித்த நாட்டுப்பற்றுள்ள தமிழ் மக்களினால் தான் எமது மனதில் மீண்டும் மீண்டும் உறுதியாக்கப்பட்டது.

“ஐயா எந்த நாளும் தீவுகளின் மக்கள் வாழ்க்கையைப் பற்றி தேடிக்கொண்டிருக்காமல் தரைமார்க்க இடங்களையும் கொஞ்சம் சுற்றிப் பாருங்க. அன்றைக்கு இந்த பயங்கரவாதிகள் எமது பயிர் நிலங்களையும் அழிவுக்குட்படுத்தினார்கள். கிராமங்களை எரித்தார்கள். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்துக்கு உதவிய அப்பாவி தமிழ் மக்களுக்கு சொல்ல முடியாத வகையில் துன்பங்களை இழைத்தார்கள். கடைசியில் இவர்கள் சரியாகச் சாப்பிடக் கூட வழியில்லாதிருந்த அந்த அப்பாவி மக்களை ஒரு குவியலாக வைத்து கொலை செய்தனர்.”

குறிகட்டுவான் தரிப்பில் சந்தித்த தமது பெயரை வெளியிடாத அப்பிரதேச தமிழ்மகன் இவ்வாறு கூறினார். அவரோடிருந்த மற்றையவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

“பெரியவரே நீங்கள் எங்கு போக நினைக்கிaர்கள்? நான் அவரை அண்மித்து கேட்டேன்.

“விசுவமடு. அன்றைக்கு விசுவமடுவில் அவர்களின் நிர்வாகம் மட்டும் தான் முழுமையாகவே இருந்தது. கடைத்தெருக்களில் சகல கடைகளிலிருந்தும் அவர்களுக்கு பணம் (கப்பம்) தேவைப்பட்டது. கப்பம் கொடுக்காதவர்களை கொலை செய்து மற்றவர்களுக்குத் தெரிய அவர்கள் மேல் பெயர்ப் பலகைகளை ஏற்றி வைத்தார்கள். மோட்டார் வெடிச் சப்தங்கள், மருந்துகளின் மணம் எங்கும் பரவியிருந்தது. இன்று இப்பிரதேசங்களில் பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள். பங்கர்களில் ஒளிந்திருந்த பிள்ளைகள் வெளியில் வந்து விட்டார்கள்.”

அவர் சொல்லிக் கொண்டே போனார். உண்மையில் இன்று இம்மனிதர்கள் புதுமையான ஒரு சுதந்திரத்தையே அனுபவிக்கிறார்கள்.

நான் அந்த பெரிய மனிதருக்கு நன்றி கூறினேன். நாட்டுக்குத் தேவைப்பட்டிருப்பதும் அவ்வாறு புரிந்து கொள்ளும் புரிந்துணர்வு தான் என்று எனக்குத் தோன்றியது.

உத்தம் பாவித்த டிபெண்டர் வாகனம்

அவர்கள் பல தகவல்களைக் கூறினாலும் போட்டோ எடுப்பதை விரும்பவில்லை. கடந்த அனலைதீவு ஆய்வுக்குப் பிறகு மீண்டும் கடலில் தீவுகளைப் பற்றி ஆய்வு செய்வதை விட தரை மார்க்கமாக இத்தகைய பகுதிகளில் திரிந்து செல்வது எமக்கு மற்றுமொரு அனுபவமாகும்.

விமலும் நானும் யாழ்ப்பாண குடாநாட்டின் சகல மூலை முடுக்குகளையும் காண்பிக்கும் வரை படத்தை விரித்துப் பார்த்தோம். விசுவமடு எங்கு இருக்கின்றது என கண்டு பிடிப்பதில் அனுரங்கவின் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது.

நான் நினைக்கிற மாதிரி விரைவில் நாம் விசுவமடுவை அண்மித்து விடுவோம். உண்மையில் விசுவமடு நகரமானது யுத்தத்தின் சாபத்துக்குட்பட்ட ஒரு நகரமென்று சொல்ல முடியாத அளவுக்கு அங்கு மனித வாழ்க்கை இன்று சாதாரண நிலைமைக்குத் திரும்பியுள்ளது.

கஜு, தென்னை மற்றும் வேறு சில பயிர்களும் செழிப்பாக வளரும் பூமி. அங்குள்ள கடைத் தெருவில் சாதாரணமாக மக்கள் வேறு இடங்களை விட கூட்டமாக இருப்பதைக் காண முடிகின்றது. அங்கு இடைக்கிடை இராணுவத்தினரும் இருப்பதைக் கண்டு நான் அந்த சிறைச்சாலைகளைப் பற்றி அவர்களிடம் கேட்டேன்.

“இங்கிருந்து இன்னும் சிறிது தூரம் சென்றால் விநாயகர் என்ற ஒரு ஹாட்வெயார் (இரும்புச் சாமான்கள் விற்கும் கடை) போல் ஒரு கடை இருக்கின்றது. சரியாக அந்த கடைக்கு முன்னாலுள்ள பாதையில் சென்றால் எமது இளைஞர்கள் இடைவழியில் இருக்கிறார்கள்.” அந்த இராணுவ அதிகாரி இளைஞர்கள் என்று கூறியது தமது சகாக்களைத் தான் என்பது எமக்கு புரியாமலில்லை.

எல்.ரீ.ரீ.ஈ. சிறைக்கூடம்

விநாயகர் என்பது பிள்ளையார் கடவுளுக்கு கூறும் ஒரு பெயராகும். அந்தப் பெயர் சிங்கள இராணுவ படையினருக்கு நன்கு ஞாபகமிருக்க இன்னுமொரு காரணமும் உண்டு. இங்கிருக்கும் ஒரு பெண்ணும் இளைஞனும் எல்.ரீ.ரீ.ஈ.யின் வதைகளுக்கு பெருமளவில் உட்பட்ட விசுவமடுவில் இப்போது வாழும் பிரதானமான இருவர் அந்தப் பெண் மாவத்த கிராமத்திலிருந்து அப்பால் சென்ற ஒரு பெண்ணாவாள்.

அன்றைக்கு நன்றாக செழிப்புத் தன்மையோடிருந்த ஹாட்வெயாரை ஒரு பாழடைந்த கடையாக மாற்றியது இந்த புலிகள் தான். இன்னுமொரு இடத்தில் இதுபற்றி விளக்கமாக கூறப்போகிற படியால் நான் விநாயகர் கதைக்கு சிறிது ஓய்வைக் கொடுத்து எல்.ரீ.ரீ.ஈ.யின் சிறைச்சாலைகளை தேடி பயணம் செய்கிறேன்.

இலைகுழைகளால் சூழ்ந்துள்ள நிழலான சிறு பாதையினூடாக நாம் பயணம் செய்தோம். இரு பக்கங்களிலுமுள்ள இராணுவத்தினர் எமக்கு வழிகாட்டினர்.

புலிகளின் தலைவன் பிரபா இந்தப் பக்கம் வந்திருப்பார் இல்லையா? நான் சடுதியாக பாதையைக் காட்டும் ஒரு இராணுவ அதிகாரியிடம் கேட்டேன்.

“இதற்கு கொஞ்சம் அப்பாலுள்ள ஒரு பெரிய பங்கரில் தான் அவர் ஒழிந்திருந்தார். பாதையில் போனாலும் துப்பாக்கி குண்டுகள் தாக்காதவாறு கறுப்பு நிற கண்ணாடிகளைக் கொண்ட ஒரு காரில் தான் போயிருக்கிறார். சாதாரண பொது மக்களுக்குக் கூட அவர் இப்பகுதியில் இருந்ததாகத் தெரியாது. ஒளிந்து கொண்டு வந்து ஒளிந்து கொண்டேயிருந்து பெரிய சண்டித்தனம் காட்டினார்.” அந்த இராணுவ அதிகாரி இவ்வாறு கூறினார். அவர்களின் பெயரை சொல்லவோ புகைப்படங்களை போடவோ நாம் விரும்பவில்லை.

கைதியொருவரின் காலுக்கு போடப்பட்ட இரும்புப் பூட்டு

இத்தகைய மரங்களால் மூடப்பட்ட ஓர் இடத்தில் எல்.ரீ.ரீ.ஈ. தலைவன் சிறைச்சாலைகளை நிர்மாணித்தது ஏன்? பிரதானமாக அம்முகாம்களை விமான தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான். வானத்திலிருந்து பார்க்கும் போது இந்த இடம் ஒரு காடு போல இருக்க வேண்டும் என்பது தான் இவர்கள் எண்ணம்.

இப்போது இங்கிருப்பது ஒரு இராணுவ காவல் நிலையமாகும். நாம் வந்த விடயத்தை தெளிவுபடுத்திய பின்பு அவ்வதிகாரிகள் எமக்குத் தேவையான வசதிகளை செய்து தந்தார்கள்.

இதற்கு உள் நுழையும் இடத்தில் புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உபயோகப்படும். அதிவேகமாகத் தாக்கும் படகொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அது சூசை என்ற கடற்படை தலைவன் உபயோகித்த தாகும். இந்த படகினால் எமது கடற்படை படகுகளுக்கு இவர் தாக்குதல்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் விதியென்பது புதுமையானது. தவறான வழியில் வாழ்பவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அதற்கான வினைகள் பலன் கொடுக்கும் என்பது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அவரின் கடற்படை படகு இப்போது காவல் நிலையத்தில் ஒரு காட்சிப் பொருளாகும்.

மற்றுமொரு இடத்தில் 3-4 வயதுடைய பிள்ளையொன்று விளையாடக்கூடிய விளையாட்டுக் காரொன்று கற்குவியலொன்றின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இது பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி சிறு பிராயத்தில் விளையாடிய காரென்று அறியப்பட்டுள்ளது. பிரபாகரனின் குளிக்கும் தடாகமும் பயங்கர செயற்பாடுகளுக்கு உபயோகிக்கும் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அதற்குச் சிறிது தூரத்தில் வேறு ஒரு இடத்தில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். தமது ஈழம் என்ற கனவை நனவாக்க காலுக்கு ஒரு செருப்புக் கூட இல்லாத சரியாக சாப்பாடு இல்லாமல் இரவு நித்திரையின்றி தமது சகாக்கள் படையினரோடு சண்டை பிடிக்கும் போது பிரபாகரனும் அவரது பிள்ளைகளும் அனுபவித்த சுக போக வாழ்க்கையில் இது ஒரு அங்கம் மாத்திரமே. அவரின் பிரமாண்டமான மாளிகையைப் பார்க்கச் சென்றால் அது பற்றி நீங்கள் இதை விட புரிந்து கொள்வீர்கள்.

புலிகளின் சிறைச்சாலைத் தொகுதிக்கு போகும் போது ஒரு நாளும் நாம் உணராத ஒரு மணத்தினால் ஆச்சரியப்பட்டோம். பச்சை இரத்தத்தின் மணத்திலிருந்து இச்சிறைச்சாலைகள் இன்னும் மாறவில்லை. வெளவால்களின் மணம் அதை விட பரவியிருக்கின்றது.

கடும் தண்டனை பெற்றுக் கொடுக்கும் கைதிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒருவரின் காலுக்கு இரும்பு பூட்டுகளைப் பூட்டி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கும் சிறைக் கூடங்கள் 4 இருந்தன. 3.3 அடி பருமனான இந்த அறையில் ஒரு தனி மனிதனுக்கு ஒரே கோணத்தில் இருக்க முடியுமா? கைதிகளின் மலசல கூடமும் அந்த சிறிய இடத்தில் தான். கால்களுக்கு சங்கிலி பொருத்தப்பட்டிருக்கும் போது ஒரு மிருகத்துக்குக் கூட இப்படி இருக்க முடியாது என எனக்கு நன்கு தெளிவாகத் தெரிகின்றது.

அதைவிட தனியாக கைதிகளை வைத்திருக்கும் சிறைக்கூடங்கள் 40 இருந்தன. இவர்கள் மனிதர்களுக்கு கொடுமை இழைத்ததன் அறிகுறிகள் இச்சுவர்களில் இருக்கின்ற அறிகுறிகள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் செய்த தவறு என்ன? தாம் சம்பாதித்துக் கொண்டவற்றிலிருந்து சரியான முறையில் கப்பம் கொடுக்காமை, கொடுக்கப்பட்ட செயல்களை சரியாகப் புரியாமை, பிள்ளைகளை இயக்கத்துக்குக் கொடுக்காமல் நாட்டிலிருந்து வெளியேற்றியமை, இராணுவத்துக்கு தகவல்களை இரகசியமாகக் கொடுத்தமை, இயக்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை போன்ற செயல்களே காரணம். இந்த சிறைக்கூடங்களைக் கூட அவர்கள் கைது செய்த இராணுவ வீரர்களையும் தமிழ் சிறைக் கைதிகளையும் கொண்டே அமைத்துக் கொண்டுள்ளனர்.

கிராமத்தின் அயலவர்களுக்கு இது ஒரு தடை செய்யப்பட்ட பிரதேசமாகும். அவர்களின் அகலமான பாதைகள் வேறுபடுத்தி முட்கம்பிகளை அடித்த சிறிய 2 அடி பாதையொன்று கீழேயிருந்த கிராமத்துக்குச் செல்ல பாவிக்கும் படி அப்போது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறைக்கூடங்களுக்கு சிறிது அப்பால் மோட்டார் வெடித் தாக்குதல்களுக்கு பாவித்ததன் சில எச்சங்கள் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக பெரும் கொடுமைகளை இழைத்து நடத்தி வந்த இத்தகைய வதை முகாமுக்கு அனுதாபம் ஏற்பட்டது. மானிட செயற்பாடு செயற்படுத்தப்பட்டு விசுவமடுவின் நாலா பக்கமும் சுற்றி வளைத்த போது தான்.

உத்தம் என்பவர் அதுவரை சிறைப்படுத்தியிருந்த 37 பேரை கொலை செய்ய திடீரென ஆணை பிறப்பிக்கக் காரணம். கபீர் கணைகள் ஓரிரண்டு முகாமைச் சுற்றி வர ஆரம்பித்த போது தான். அடுத்தது நடையில் வரும் இராணுவத்தினர் நாலா பக்கங்களிலும் விசுவமடுவுக்கு வரப்போகிறார்கள் என்ற தகவல் இரகசிய உளவறிபவர்கள் மூலம் கிடைத்ததே அதற்குக் காரணம்.

விசுவமடுவின் கிராம மக்கள் அச்சத்தினால் உறைந்து போயிருந்தனர். சூசை உத்தம் மாத்திரமல்ல புலித் தலைவர்களும் யுத்தத்தில் இறந்தனர். விசுவமடு எஞ்சியிருந்தது.

இன்று அது புற்களால் நிரம்பியிருக்கின்றது. தென்னை, கஜு, வாழை பயிரிடலும் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. மக்கள் நிம்மதியாக அங்குமிங்கும் பயணம் செய்யும் காலம் வந்துவிட்டது. இது எந்தளவு புதுமையானது என்று கூறுமளவிற்கு மக்கள் வாழ்க்கை சாதாரண நிலைக்கு திரும்பியிருப்பது இலங்கை மக்கள் என்ற வகையில் எமக்கும் இது ஒரு ஆனந்தமே.

செழிப்பாக வளர்ந்திருக்கும் தென்னந் தோட்டங்கள்

உத்தம் பாவித்த டிபெண்டர் வாகனம்

எல்.ரீ.ரீ.ஈ. சிறைக்கூடம்

கைதியொருவரின் காலுக்கு போடப்பட்ட இரும்புப் பூட்டு

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.