புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
ஏடாகூடமான கேள்விகள் ?

ஏடாகூடமான கேள்விகள் ?

ஏடாகூடம் : மொழி

பதில் தருவது: எழுத்தாளர் தியத்தலாவ

எச். எப். ரிஸ்னா

கே: திருக்குறளை திருவள்ளுவரின் மனைவி வாசுகி எழுதியிருந்தால் என்ன பெயர் வைத்திருப்பார்?

ப: திருமதிக்குறள்னு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

(நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கிறது)

கே: எழுத்தாளராவதற்கு என்ன தகுதியிருந்தால் போதுமென்று நீங்கள் நினைக்கிaர்கள்?

ப: இலக்கியம் பிடித்திருக்க வேண்டும். மனிதர்களைப் படித்திருக்க வேண்டும். அத்தோடு தேடலும். நம்பிக்கையும் இருக்க வேண்டும்.

கே: ஏ. பெண்ணே அடிக்கடி சிரிக்காதே ஏற்கனவே இங்கு தாடியுடன் பலபேர் இதற்கு பதில் கவிதை எழுதுங்கள் பார்ப்போம்?

ப: ஏ ஆணே! சும்மா சும்மா உளறாதே எங்கள் கழுத்தில் தாலி பார்!!

(ஓ... அதனால் தானோ அவன் தினமும் தேடுகிறான். பார் (கிar)

கே: பள்ளி நாட்களில் யாருக்காவது அல்வா கொடுத்த அனுபவம் உண்டா?

ப: அல்வாவுடன் கேக்கும் கொடுத்திருக்கிறேன். என் பிறந்த நாட்களில் ஹா.. ஹா....!

(ஓ.... ஒன்னு கொடுத்தா... ஒன்னு ப்ரியா...?)

கே: நீங்கள் சிரித்தால் பூக்கள் விரியுமா? பூகம்பம் வெடிக்குமா?

ப: நான் சிரிச்சால் பூ விரியும் முறைச்சால் பூகம்பம் வெடிக்கும்ல...

(இது கொஞ்சம் ஓவராத் தெரியல்ல...?)

கே: தமிழ் அரிச்சுவடியிலுள்ள எழுத்துகளில் ஆபத்தான எழுத்து எது?

ப: தீ சுட்டுப்புடுமுங்க.

(இல்லிங்க.. தீயைக் கொண்டு திருக்குறளும் படிக்கலாமுங்கோ...

கே: குத்து விளக்குக்கும், குடும்ப விளக்குக்கும் என்ன வித்தியாசம்?

ப: குத்துவிளக்கு எண்ணெய் ஊற்றினால்தான் எரியும். குடும்ப விளக்கு எண்ணெய் ஊற்றாமலேயே எரியுமுங்கோ..

(அடாடா அனுபவம் பேசுதுங்கோ...!)

கே: பர்தா போட்ட பரீதாவுக்கும் சுடிதார் போட்ட சுகுனாவுக்கும் என்ன வித்தியாசம்?

ப: சட்டுன்னு சொல்றேன் பொட்டுதான் வித்தியாசம்.

(பட்டுன்னு இப்படி சொன்னா.. பொட்டுன்னு நான் போயிடுவேனுங்கோ?)

கே: உங்களைப் பார்த்து பொறாமைப்பட்ட எழுத்தாளர்கள் யாராவது உண்டா?

ப: வார்த்தையால் கத்தி செய்து வீசியவர்களும் இருக்கிறார்கள். வாழ்த்துக்களால் பூக்களைத் தூவியவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுக்காம போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

(ஓ.. அப்படீன்னா றப்பர் மரத்திற்கு ரணங்களைப் பற்றி கவலை இல்லைன்னு சொல்லுங்கோ..?)

கே: உங்களை யாராவது அடித்துவிட்டால் Why this Kolavery? Why this Kolavery? என்றவாறு வீட்டைச் சுற்றி ஓடுவீர்கள் என்று உங்கள் தோழி சொல்கிறாரே உண்மையா?

ப: உமக்கு Why this Kolavery ப்பா?

(WHY THIS சமாளிப்பு)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.