புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
முஸ்லிம் உலக உச்சி மாநாட்டில் இலங்கைக்கு பார்வையாளர் அந்தஸ்து

தாருங்கள்!

முஸ்லிம் உலக உச்சி மாநாட்டில் இலங்கைக்கு பார்வையாளர் அந்தஸ்து

சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில் இலங்கைக்கு பார்வையாளர் அந்தஸ்து (Observer status) வழங்கப்பட வேண்டும்....

இஸ்லாமிய நாடுகளின் பாராளு மன்ற ஒன்றியத்தின் ஏழாவது கூட்டத் தொடரின் போது இவ் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத் தொடர் இந்தோ னேசிய நாட்டின் தென்கோடித் தீவான சுமாத்ராவின் தென்முனை யில் பாலெம்பாங் (Palembang) நகரில் ஜனவரி 24, 2012 முதல் 31 வரை நடைபெற்றது.

சர்வதேச முஸ்லிம் தலைவர்களோடு சந்திப்பு.

இக்கூட்டத் தொடருக்குப் புறம் பாக பல முஸ்லிம் நாட்டுத் தலைவர்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் அஸ்வர் எம்.பி. அவர்களும் நேரடியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஏழு நாடுகளைச் சேர்ந்த தலை வர்களையும் அவர்களோடு வந்த பரிவாரங்களையும் இவ்விருவரும் சந்தித்து அளவளாவினர்.

இந்தோனேசியா, பங்களாதேஷ், கட்டார், மலேசியா, ஜோர்தான், நைஜீரியா, கமரூன், அல்பேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற சபாநாயகர்களையும் குறிப்பிட்ட அந்தந்த நாடுகளின் தூதுக்குழுத் தலைவர்களையும் சந்தித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மாநாட்டின் தலைமகன் இந்தோனேசிய பாராளுமன்ற சபாநாயகர் மேதகு டாக்டர் மர்ஸ¤கி அலி (Dr. Marzouki Ali) ஆவார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தை முதலில் இந்த இந்தோனேசிய சபாநாயகருடன் தான் இடம்பெற்றது.

இந்தோனேஷிய சுமாத்ரா தீவு பாலெம்பாங் தலைநகருக்கு அணி சேர்க்கும் பெரிய பள்ளிவாசலின் தோற்றம்.

வன்செயல், பயங்கரவாதம் இல்லாத ஒரு நாட்டை நாம் விரும்புவோம்.

“வன்செயல்கள் இல்லாத, பயங்கரவாதம் தாண்டவமாடாத நாடுகளைத் தான் நாம் விரும்புகின்றோம். சமாதானமே எமது குறிக்கோள். சமாதானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தான் எமது நாடு முன்னேற்றம் காண்கின்றது. அந்த வகையில் உங்கள் நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதை எமது நாடு பெரிதும் வரவேற்கின்றது”

உலகில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் இந்தோனேசிய நாட்டின் பாராளுமன்றத்தின் சபாநாயகர் டாக்டர் மர்ஸ¤கி அலி இவ்விதம் கூறி இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைத்த போது எமது உச்சி குளிர்ந்தது.

‘அப்பப்பா... பயங்கரவாதம், அதிபயங்கரமானது. இதிலிருந்து மீண்டோர் மீட்சி பெற்றோர்’.... என்ற கருத்து இங்கே உச்சஸ்தானத்தில் வைத்து அலசப்படுத்தப்பட்டது.

“உங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியதன் மூலம் உலகில் பரந்த ரீதியில் மிகவும் பாராட்டுக்குரியவராகத் திகழ்கிறார்” என்று இந்தோனேஷிய சபாநாயகர் சொன்னபோது எமது இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி அலை மோதியது!

உலகில் மிகப் பெரிய முஸ்லிம் நாட்டு சபாநாயகருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகையில்....

இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு மிக உறுதியாக உள்ளது. ஆடைத் தொழிற்சாலைகள் எம்மைவிட இங்கே அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. நூற்றாண்டு காலமாக அந்நியச் செலாவணியை எமக்கு அள்ளிச் சொரிந்த இறப்பர் (Rubber) உற்பத்தியிலும் முன்னுரிமை பெறுகின்றது இந்தோனேஷியா.

முதல் இறப்பர் மரம்

இந்தோனேஷிய மலேசிய பூமிப் பிரதேசத்திலிருந்துதான் முதன் முதலாக இறப்பர் மரம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு எமது நாட்டில் நடப்பட்டது.

ஆடைத் தொழிலில் தைத்த ஆடைகள் மேலும் பிரபல்யம் பெற்று ஏற்றுமதி செய்யும் இணக்கப்பாட்டை இருநாடுகளும் ஒத்துக் கொண்டு செயலாற்றுவது இருதரப்பினருக்கும் மிகப் பலன்தரத்தக்கது என்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டது.

“இறப்பர் தொழிலில் மேலும் முன்னேறுவதற்காக இலங்கைக்கு அனைத்து விடயங்களிலும் உதவிகள் தர நாம் தயார்” என்று இந்தோனேஷிய சபாநயகர் எம்மிடம் கூறினார்.

‘நம் நாட்டுக்கு உலக முஸ்லிம் நாடுகள் மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்து பெற சிபார்சு செய்வோம்’ - இருவரும் ஆலோசிக்கும் போது.....

மாணிக்கம் - நம்பர் ஒன்

“இலங்கை மாணிக்கக் கற்களுக்கு பெயர்போன நாடு. எமது நாட்டில் இப்போது மாணிக்கக்கற்கள் தோண்டப்படுகின்றன. எனினும் உங்கள் நாட்டின் மாணிக்கக் கற்களின் தரத்தைவிட அவை உயர்ந்ததும் அல்ல உகந்ததும் அல்ல, என்பதை நாமறிவோம்” என்றார் மர்ஸ¤கி அலி.

மாணிக்கக் கல் தொழிலில் நாம் உலகில் நம்பவர் வன் முதல்தரமாக விளங்குகிறோம். இதற்கு முக்கிய காரணம் மாணிக்கக் கல் வெட்டுதல், ஒப்பமிடல் துறையில் எம் நாட்டவர் முதன்மையானவர்களாக இருப்பதுதான் காரணம் என்று நான் அடக்கமாகச் சொன்னேன்.

Sure I know it என்று வாய் விட்டே சொன்னார் இந்தோனேஷியா சபாநயகர்.

நான் சும்மா விட்டேனா?

“அவர்களை நாங்கள் தாராளமாக உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக் கலாம்” என ஒரு ஆலோசனை முன்வைத்தேன்.

“அது நல்ல யோசனை. குறித் துக் கொள்ளுங்கள்” என்று பக்கத் திலிருந்த தனது சகாவுக்கு உத்தரவு இட்டார் சபாநாயகர் மர்ஸ¤கி.

எதிர்காலத்தில் இலங்கை மாணிக்கக் கல் தீட்டுவோர், ஒப்பமிடுவோர் இந்தோனேஷியா ஏகும்போது எம்மை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்ன.... சிறுபான்மையினரான முஸ்லிம்கள்

இலங்கையில் இரண்டாவது சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்கள் குறித்துப் பேச்சு திசைதிரும்பியது.

அரபுலக தலைவர்களுடன் நாம் இருவரும் அமர்ந்திருக்கும் காட்சி

“நாங்கள் ஒரு உறுதிமிக்க Vibrant சமூகமாக எமது நாட்டில் வாழுகின்றோம். குர்ஆன் அல்-ஹதீஸ் போதனைப்படி வாழக் கூடியதாக எமது அரசு சட்டபூர்வ மாக அங்கீகாரம் வழங்கியிருக்கின் றது. ஏனைய சமூகங்களைப் போன்று நாம்நாட்டுத் தலைவர் முஸ்லிம்களையும் ஒன்று போல் கருதிச் செயலாற்றி வருகின்றார்” என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தோனேஷியத் தலைவருக்கு விளக்கிக் கூறினார்.

“எம்மை எமது அரசு கவனிக்கின்றது போல் நீங்களும் கவனிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார் நீதி அமைச்சர்.

“எம்மிடமிருந்து எதனை எதிர்பார்க்கின்aர்கள்?” என்று இந்தோனேஷியா சபாநயகர் வினவினார்.

இலங்கைக்கு ஒரு இடம் வேண்டும்

இலங்கை ஒரு முஸ்லிம் நாடாக இல்லாவிட்டாலும் உலக முஸ்லிம் நாடுகளோடு இணைந்து எம்மை அங்கீகரிக்க வேண்டும். இதற்குத் தோதாக சர்வதேச முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப் பில் இலங்கைக்குப் பார்வையா ளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” என்ற வேண்டுகோளை இவ்விடத்தில் முன்வைத்தார் இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

நம்பிக்கை தோய்ந்த குரலில் இதற்குப் பதில் அளித்தார் இந்தோனேஷியா சபாநாயகர்.

“ஆம். இது சாத்தியமாகலாம். இந்த வேண்டுகோளை இந்தோ னேஷியாவே முன் நின்று சிபார்சு செய்ய முடியும்” என்று நல்ல திருப்திகரமான பதிலைத் தந்தார் இந்தோனேஷியா சபாநாயகர்.

பென்னம் பெரிய முஸ்லிம் நாடு சின்னஞ்சிறிய இலங்கைக்கு உதவி

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியா சின்னஞ்சிறிய இலங்கையில் வாழும் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இம் மாபெரும் கைங்கரியத்தைச் செய்ய முன்வந் ததையிட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமும் நானும் அவ்விடத்திலே நன்றிப் பெரு மூச்சு விட்டோம்.

இது சாத்தியமாயின் அடுத்த சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு பார்வையாளர் அந்தஸ்து நாடாக (Observer State) கலந்து கொள்ளக்கூடிய சாத்தியம் இலங்கைக்கு கிடைக்கும்....! இன்ஷா அல்லாஹ்.

அது எப்படியிருப்பினும் இந்த ஏழாவது பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் இலங்கைக்கு ஒரு விசேட பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால் பல அமர்வுகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ஆங்காங்கே இலங்கையின் சார்பில் கருத்துக்களை வழங்கவும் வாய்ப்பும் எமக்கு கிட்டின.

பார்வையாளர் என்ற அந்தஸ்தில் ஒரேயொரு குழுவுக்கும்தான் இம் மாநாட்டில் பேச விசேடமாக அனுமதி வழங்கப்பட்டது. அந்தப் பேற்றை பிலிப்பைன்ஸ் நாட்டு மிந்தானோ மோறோ தேசிய விடுதலை முன்னணிதான் (Moro National Liberation Front) தட்டிக் கொண்டது. அதன் தலைவர் உலகப் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரரான பேராசிரியர் நூர் மிசூரி இங்கு மேடை ஏறினார்.

நேரம் காலத்தை அனுசரித்து மிகவும் சுருக்கமாகப் பேசினார்.

என்ன சொன்னார், பொறுங்கள் சொல்வோம்....

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.