புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவும்

உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவும்

உறுப்பினர்களை பெயரிடுவதில்

அசமந்தப் போக்கும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில், முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலான சந்தேகங்கள் உண்மையாக இருந்தும் கூட சமகாலத்தில் ஒரு தவறிழைப்பதாகவே குறைகூறப்படுகின்றது. ஐம்பது ஆண்டுகளையும் விட கூடுதலான தமிழர் அரசியல் வரலாற்றில் மற்றுமொரு பிழை விடுவதாகவே கருத இடமுண்டு.

அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் நழுவல் போக்கையே கடைப்பிடிப்பதாக தமிழ்க் கூட்டமைப்பின் அச்சங்கள் இருக்குமாயின் அதற்கும் ஒரு பரிகாரமாக ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியை நிர்ணயித்து அக்குறிப்பிட்ட காலக் பகுதியினுள் பூர்வாங்க உடன்பாடுகள் எட்டப்படாதவிடத்து அதனை மக்களுக்கு பிரகடனப்படுத்திவிட்டு பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்கலாம் என்று தெரிவிப்போர் உள்ளனர்.

அரசியல் பேச்சுவார்த்தை தகவல்களின் படி அரசாங்கம் 6 மாத காலப் பகுதியை கால எல்லையாக முன் வைத்ததாகவும் அக்காலப் பகுதயினுள் TNA யும் மாற்று ஆலோசனைகளை முன் வைக்கையில் நிச்சயமாக உணர்வு பூர்வமான இணக்கப்பாடுகள் எட்டப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத் தெரிவுக்குழு முறைமை - தாமதம் என்ற வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகக் கூடிய தென்றாலும் இலங்கையின் தேசியவாதிகள் மற்றும் கடும்போக்குவாதிகள் போன்றோரின் பக்கபலமும் ஆதரவுமிருக்குமானால் தீர்வுப் பொதியை சாத்தியமானதாக்குவது கஷ்டமான காரியமல்ல.

சிறந்த பின்புலம்

புலிகள் இல்லாதொழிந்துள்ள ஒரு கால கட்டத்தில் மிதவாதச் சிந்தனைகளுடன் கூடிய தந்திரோபாய கட்டமைப்பை கட்டியெழுப்பவும், யதார்த்தமான சிந்தனை களுடன் கூடிய பெரும்பான்மை, சிறு பான்மை பிரதிநிதிகளின் நல்லபிப்பிராயங்களைக் கட்டியெழுப்பிய வண்ணம் நகருவதற்கு ஏற்ற காலச் சூழல் இல்லாமலில்லை. பேராசிரியர் திஸ்ஸ விதானவின் APRC அறிக்கையை அரசாங்கம் தட்டிக்கழித்து விட்டதைப் போன்று பாராளுமன்றத் தெரிவுக் குழு அறிக்கைக்கும் அதேகதி நடந்து விடும் என்ற கூட்டமைப்பின் வாதம் நியாயமானதாக இருந்தாலும் சமகால பாராளுமன்ற பெரும்பான்மை ஜனாதிபதியின் விருப்பத்தை சட்டென்று நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய வல்லமை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அயல்நாட்டு மத்தியஸ்தம்

தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர் வுத் திட்டத்தை வகுப்பதற்குரிய யதார்த்த பூர்வமான முயற்சியை அரசாங்கம் மேற் கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டும் TNA மத்தியஸ்தர் பங்காற்றுமாறு வெளி நாடு ஒன்றின் உதவியை பெற்றுக் கொள்வதில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை பெயர் குறிப் பிடாவிட்டாலும், அதனை பகிஷ்கரிக்கும் வகையாக தீர்மானங்கள் எடுக்கப்படவி ல்லை என்று வெளிநாட்டு ராஜதந்திரிகளு க்கு தமிழ் கூட்டமைப்பு முக்கியஸ்தர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. பேச்சுக்களைத் தொடர்வதற்கு தாங்கள் விரும்பியிருந்தும் அரசாங்கம் அதனை இடைநிறுத்தி விட்டதாகவும் குறை கூறப்படுகிறது.

அதேவேளை தேசியப் பிணக்கு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு வுக்கு தமது பிரதிநிதிகளை ஹினிதி பெய ரிடுவது முற்றுப் பெறாததன் காரணமா கவே பேச்சுக்களை இடைநிறுத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. ஹினிதி யுடனான பேச்சுக்களுக்கு தலைமை தாங்கும் அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஹினிதி பிரதிநிதிகளைப் பெயர் குறிப்பிட்டதும், அவர்களுடனான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயார் எனக் கூறுகிறார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களும், விட்டுக் கொடுக்க மனமின்மை காரணமாக பேச்சுக்கள், உயிர்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றன. இரு திறத்தவர்களும் திட்டமிட்டிருந்தும், திட்டமிட்டவாறு ஆரம்பிக்க முடியவில்லை. மற்றுமொரு ஹினிதி முக்கியஸ்தர் கருத்துரைக் கையில் கருத்துப் பரிமாற்றங்களின் போது இரு திறத்தவரிடையேயும் உறுதி யான உடன்பாடு கண்டடையப்படா விட் டால் தமது கட்சி பாராளுமன்றத் தெரி வுக்குழுவுக்கு செல்லமாட்டாது என்று தெரிவித்தார். அவ்வாறு செல்வது அர்த்த மற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், அர சாங்கத்தைப் பொறுத்தவரை இது காலம் கடத்தும் ஒரு நடவடிக்கை என்று சுட்டிக் காட்டினார்.

மன்றில் பூரண ஒத்துழைப்பு

இதேவேளையில் தமிழ்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் நியாயமான திட்டத்துக்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமானால் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கும் வரையறையின்றி ஹினிதி அதன் ஒத்துழைப்பை வழங்குமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகள் தீர்வுகாணப்பட்டால் ஹினிதி இன் 13 எம்பிக்களும் அரசாங்கத்தின் அங்கமாக இருப்பராம். பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான திறத்தவர்களின் எதுவிதமான அடையாளமுமின்றி முட்டுக்கட்டையாக காணப்படுகின்ற நிலையில் கிருஷ்ணாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட விதமாக செயல்பட ஜனாதிபதி முன்வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளியகமல்ல, உள்ளகம்

ஒரு ஸ்திரமான அரசியல் தீர்வினைக் கண்டடையவும், அதனை எவ்வாறு முன்னகர்த்தலாம் என்பதை ஆராய் வதற்காகவுமே பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனை முன்வைக்கப்பட்டதாக அரசா ங்க முக்கியஸ்தர் குறிப்பிட்டார். இதுவரையில் நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒவ்வொரு முறைமைகளும் திஜிஞிவி உட்பட பாராளுமன்றத்துக்கு வெளியேயானதா கவே இருந்தது. அப்படியான தீர்வுத் திட் டத்தை பாராளுமன்றம் ஏற்க மறுத்துவிட வாய்ப்புண்டாதலால் அதனை அங்கு கொண்டு செல்ல முடியாது.

பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று இனப்பிரச்சினைகள் தொடர்பாக குறித்த சமாச்சாரங்களை விவாதிக்குமானால் அங்கு நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். அது நிராகரிக்கப்பட முடியாததாகும், அது பாராளுமன்றத்துக்குள்ளேயே வாசஞ்செய்ய வேண்டும். இதனாலேயே தங்களது பிரதிநிதிகளை பெயரிடுமாறு கேட்கப்பட்டதாம். சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்து முன்நோக்கிச் செல்லும் பாதை அவர்களுக்கு தென்படவில்லை.

இது கோழியும் முட்டையும் போன்றதொரு நிலமையாகும். பாராளுமன்றத்திலுள்ள கட்சிகள் யாவும் தெரிவுக் குழுவில் பங்கேற்கும். அது ஒரு உள்வீட்டு நடவடிக்கையாயமையும். தெரிவுக் குழுவில் இருந்து எத்தகைய தீர்வு வெளியாகுமோ அதற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஹினிதி யிடம் தெளிவாகக் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தீர்க்கமான உபாயம் - அச்சம்

அரசாங்கம் முன்னரும் திஜிஞிவி ஊடாக பரந்த கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டது. அத்தகைய பேச்சுக்கள் யுத்த காலத்திலேயே நடந்தது. பயங்கரவாதப் பிடிக்குள் நாடு இருந்த தருணத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்மொழிவுக்கான தருணம் ஒருநாள் தோன்றும் என எவருமே கற்பனை செய்திருக்கார். அக்கால கட்டத்தினுள் ஹினிதி யினால் சுயாதீனமாக சிந்திக்க முடிய வில்லை. அவர்கள், புலிகளின் சேவகர்கள் போன்று இருந்தனர். அந்த வகையில், முக்கிய விஷயங்களை விவாதிக்கவும், பிரேரணைகளையும் பிரச்சினைகளையும் முன்வைக்கவும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒரு தீர்க்கமான கருவி என விபரிக்கப் படுகிறது.

எது எப்படியிருந்தபோதும், பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்னும் உருவகம் பெற வில்லை. குறித்த குழு உடன்படுகின்ற விஷயங்கள் ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்படும் என்கின்ற போதிலும் மேற்கொண்டு எந்த அதிகாரப் பகிர்வும் இல்லை என்ற கொள்கையை எதிர்த்துப் போக வேண்டிய நிலை தோன்றலாம் என்கிற அச்சம் சம்பந்தப்பட்ட திறத்தவர்களுக்குண்டு.

பிரேரணை

1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரப் பகிர்வை மையப்படுத்தி அரசியல் தீர் வைக் கண்டடையும் நோக்குடன் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் மங்கள முனசிங்க பிரேரனையைக் கொண்டுவந்தார். இத்தகைய ஆணையுடன் கூடிய ஒரு பாராளுமன்ற தெரிவுக் குழு தேசிய ஒருங்கிணைப்பின்மை, அப்பாவி மக்களின் கொலை, இளைஞர்கள், படை வர்களின் கொலை போன்றவற்றை தடுத்து நிறுத்தும் என இலங்கை அரசியல் உணர்ந்தது. பெருக்கெடுத்த இராணுவ மயம், நமது நாட்டிலுள்ள வன்செயல் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தமும் இருந்தது.

கனவும் - ஆத்மபலமும்

எமது நாடு சமாதானத்தையடைந்து பாதுகாப்பு செலவினம் குறைவடைந்து விரைவான பொருளாதார வளர்ச்சி, தேசிய அபிவிருத்தி, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை எட்டிவிடும் என்று அரசியல் தலைவர்கள் கனவு கண்டார்கள். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்மொழிவுகள் 1990 களின் அரசியல் வாய் வீச்சுக்கள் காரணமாக பலமிழந்திருந்தாலும் தெரிவுக் குழுவின் அரசியல் ஆத்ம பலம் மறுக்க மடியாத வகையில் முன்னேற்றகரமாகவே இருந்தது. என்றாலும் இரு தசாப்தங்க ளுக்குமேல் காலம் கழிந்த பிறகு, யுத்தம், சமாதானம், அரசியல், சமுக பொருளாதாரங்கள் யாவுமே மாறிப் போய்விட்டன. அந்த வகையில் சமகாலத்தில் பேசப்படுகின்ற தெரிவுக்குழு உயிர்பெற்று, அன்றைய காலத்தைப்போன்றதொரு ஆத்ம பலத்துடன் கூடிய நிலை நிறுத்துகையுடன் நிமிர்ந்து நிற்குமா? வரலாறு அதன் தோற்றத்தைக் காண்பிக்குமா? அல்லது புதிய எதிர்காலத்தை எழுதக்கூடிய வாய்ப்பைத் தோற்றுவிக்குமா? போன்ற கேள்விகளை நாமே நமக்குள் கேட்டுக் கொள்ளலாம்.

வாய்ப்பும் நல்லிணக்கமும்

யுத்தத்தின் முடிவு நாட்டுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் தீர்வை கட்டாயம் கலந்து பேசவேண்டிய தருணமாகவே கருதவேண்டும். யுத்தம் காரணமாக பலியான ஒரு இலட்சம் மக்களை நினைத்துப் பார்ப்பதற்கும், அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கும், மற்றுமொரு யுத்தத்தை தடுப்பதற்குமான வாய்ப்பை தோற்றுவித்துள்ளது. அந்த வகையில் அரசியல்தீர்வுக்கான சமகாலத்தேவை இருப்பதன் காரணமாக கடந்த காலத் தோல்விகளை எதிர்கால நம்பிக்கைகளாக கட்டுப்போடவேண்டும். மக்களின் எதிர்காலத்தோடு தொடர்புபட்ட விடயமாதலால் தெரிவுக்குழு தோன்றினால் மக்களின் கருத்துக்களை உள்வாங்கக்கூடிய மக்கள் தெரிவுக் குழு போன்று செயற்பட வேண்டும். அந்த வகையில் அதிமுக்கிய தேவை யாதெனில் சகல கருத்துக்களையும் உள்ளடக்கி எவராலும் கேள்விக்குட்படுத்த முடியாத நிலையான தீர்வை எட்டுவதாகும். நல்லிணக்கம் என்பது இந்த நாட்டு மக்கள் சமாதானத்தில் மாத்திரமன்றி ஒருவருக்கொருவர் இழகிய தன்மையுடனும், இலகுவாகவும் வாழக்கூடிய சூழலும், நிலமையுமாகும். இந்த நிலமை - சகல பிரஜைகளும் சமமாக அரசாங்கத்தால் கவனிக்கப்படுவதை பொருள்படுத்தும். ஒரு பிரிவினருக்கு தேவையற்ற நன்மைகள் வழங்கப்படுவதாக பிறர் உணராதவகையாக இருத்தல் வேண்டும்.

உண்மையில் இது நம்பிக்கையை உருவாக்குகின்ற ஒரு சமாசாரமாகும். பரஸ்பர நம்பிக்கை இருக்குமானால் - சிநேகிதமும், ஒருமித்து பணியாற்றலும் பதிலாகக் கிடைக்கும். அந்த வகையில் சிறந்த பரஸ்பர தொடர்பாடலையும், நம்பிக்கையயும் தோற்றுவிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

நல்லிணக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு

இது இவ்வாறிருக்க தாங்கள் அரசாங்கத் துடன் சற்று முரண்பட்ட விதமாக இருந் தாலும், முன்னாள் புலிப் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை ஹினிதி புகழ்ந்துள்ளமை நல்லிணக்கத்துக்கு நல்ல உதாரணமாக அமையலாம் எனக் கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் தலைசிறந்த வேலைத்திட்டம் தொடர்பாக ஏராளமான அறிக்கைகள் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் குறித்த விடயம் தொடர்பில் பங்காற்றிய இராணுவ அதிகாரி யையும் பாராட்டி, நிகழ்ச்சித்திட்ட அதிகா ரிகள் தங்களது பணியை முழுப்பொறுப் புணர்வுடன் நிறைவேற்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கவலை

எதிர்க் கட்சிகளால் பிரதிநிதிகள் பெய ரிடப்படாததன் காரணமாக இனப்பிரச்சி னைக்கு உறுதியான தீர்வு தேடும் வகை யில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு தனது பயணத்தை ஆரம்பிக்கும் வகையிலாக ஸ்தாபிப்பு காணவில்லை என்பது யாவ ருக்கும் அறிந்தே! தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த வழிமுறை என்று கூறிய அராசங்கம், பிரதிநிதிகளை நியமிக்காமல் விட்டதையிட்டு எதிர்க் கட்சிகளை குற்றஞ்சாட்டியது.

பரஸ்பர நம்பிக்கையீனம்

ஐ. தே. க., தமிழ்க் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், தத்தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயரிடாததால் தெரிவுக்குழு ஒரு காலம் கடத்தும் முயற்சி எனும் குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கு பொருந்தாது என்று அரசாங்கத்தார் கூறுகின்றனர். மறுபுறம் கூட்டமைப்பினர் அரசாங்கம், இதுவரையில் ‘அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு’ ‘நிபுணர்களைக் கொண்டமைந்த கமிட்டி’ என இரு குழுக்களை பிரச்சினைக் கண்டறியவும், ஆய்வு செய்யவும் நியமித்ததாம். இவ்விரண்டு குழுக்களும் சிபாரிசுகளை கொண்டு சேர்த்தன. அவற்றுக்கு நடந்தது என்ன? எனக் கேட்கின்றன.

அந்த வகையில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கத்தின் சிரத்தையை தமிழ்க் கூட்டமைப்பு நம்பவில்லையாம். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கே உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றனவாம். பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ற பொறிமுறை தாபிக்கப்படல் என்ற முன்மொழிவுக்குப் பிறகும், அரசாங்கம் தங்களுடன் பேச்சுக்களைத் தொடர்ந்ததாக கூறும் அவர்கள் புறம்பாகவும் பேச்சுக்கள் தொடருமென அவர்களது கட்சிக்கு உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அரசுடனான பேச்சுக்களில் திருப்திகரமான முன்னேற்றம் தோன்றிடின் தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளைப் பெயரிடுவதில் திறந்த மனதுடன் இருப்பதாக கூறினர்.

மந்தமான மனப்பாங்கு

தேசியப் பிணக்குக்கு எந்த அடிப்படையில் தீர்வுகாண அரசாங்கம் நோக்கங் கொண்டுள்ளது என்பது இதுவரையில் தெளிவுபடுத்தப்படாத நிலையிலுள்ளதாக ஐ. தே. க. பொதுச் செயலாளர் கூறினார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, நல்லிணக்க ஆணைக்குழு என்றெல்லாம் கூறிவந்த அரசு தற்போது 13க்கு மேலதிகம் என்கிறது எனக் குறிப்பிட்ட அவர் பிரச்சினைக்கு தீர்வு தேடுவதில் மந்தமான மனப்பாங்கு கொண்டிருப்பதாகவும், கடைப்பிடிக்கப்படுவதாகும் தெரிவித்தார்.

யதார்த்தம்

வடக்கு கிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான தமிழ்க் கூட்டமைப்பை நேரடியாக சம்பந்தப்படுத்தாமல் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு தேடும் முயற்சியைப் பற்றி பேசுவது அர்த்தமற்றது எனக் கூறும் ஆய்வாளர்கள் - பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். ஆனால் இது வரையில் ஒரு தெளிவான திட்டத்தை முன்வைப்பதற்கான முனைப்பு முறையாக தயார்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது. அசாங்கத்தால் தமிழ் கூட்டமைப்பினரை சரியான ஓடு பாதைக்குள் உள்வாங்க முடியுமானால், தமது பிரதிநிதிகளை தெரிவுக் குழுவுக்கு பெயரிடுவதற்கு ஐ. தே. க, திறந்த மனதுடனிருப்பதாக குரல்தரவல்ல அதிகாரி குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.