புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

காலணிகள் நீண்ட நேரம்

காலணிகள் நீண்ட நேரம்

மினுமினுக்க ஊhநசல டீடழளளழஅ

Reckitt Benckiser Lanka Limited  இனால் செர்ரி ப்ளொசம் காலணி மினுமினுப்பாக்கி (Chery Blossom Shoe Polish) இலங்கைச் சந்தையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறந்ததொரு பாரம்பரியத்தைக் கொண்ட இந்த வியாபார நாமம் காலத்தால் அழியாத புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளினால் விளம்பரங்களில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டமை நினைவு கூரத்தக்கது.

பாதணிகளை நீண்ட நேரத்துக்குப் பளபளப்பாக வைத்திருப்பதற்கு ஏற்றவாறு விசேட எண்ணெய் வகையையும் உலகின் பல பாகங்களிலுமிருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்ட மெழுகினையும் இது கொண்டுள்ளது. பல தலைமுறைகளாக மக்களின் நம்பிக்கையைப்பெற்ற செர்ரி ப்ளொசம் மெழுகு வடிவத்திலும் திரவ வடிவத்திலும் இலங்கையில் கிடைக்கின்றது.

Reckitt Benckiser Lanka Limited நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான தன்சிம் ரிஸ்வான் கூறும்பொழுது ‘நாங்கள் செர்ரி ப்ளொசுமை இலங்கையில் அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமானது என எதிர்பார்கின்றோம். பாடசாலை செல்லும் சிறுவர்கள், அலுவலகம் செல்வோர் முதல் இலங்கையின் அனைத்து வாடிக்கையாளர்களும் செர்ரி ப்ளொசமை நாளாந்தம் பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைவர் என நம்புகின்றோம்” என்றார். ஒரு பல்தேசியக் கம்பனியான Reckitt Benckiser சுத்தம் சுகாதாரம் மற்றும் வீட்டுபயோகப் பொருட்களில் முன்னோடியாக விளங்குகின்றது. இலங்கையில் மக்களின் நம்பிக்கையை வென்ற இந்நிறுவனம் ஹார்பிக், (4ஆவது தடவையாகவும் மக்கள் தெரிவு விருதை வென்றது) லைசோல், டெட்மோல், மோட்டீன், எயர்விக், மெப்சில்ஸ், வீற் போன்ற பிரபல வியாபாரக் குறிகளை சந்தைப்படுத்தி வருகின்றது. முன்னதாகக் கடந்த ஆண்டு ‘வனிஷ்’ எனப்படும் உலகப் புகழ்பெற்ற கறை நீக்கியையும் ஃபினிஷ் எனப்படும் பாத்திரங்களின் தூய்மையாக்கியையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் செர்ரி ப்ளொசம் காலணி மினுமினுப்பாக்கியை அறிமுகப்படுத்துவதில் இந்நிறுவனம் பெருமை அடைகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.