புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

பட்டதாரிகள் நியமனத்திற்கும் கோயம்புத்தூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பட்டதாரிகள் நியமனத்திற்கும் கோயம்புத்தூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை

அறிக்கை விடும் அரசியல்வாதியொருவருக்கு ராஜதுரை எம்.பி. சாட்டை

மலையக பட்டதாரிகளுக்கு அரச துறையில் தொழில்வாய் ப்பை பெற்றுக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாத மலையகத் திலுள்ள சில அரசியல், விசமிகள் பொருத்தமற்ற முறையில் அறிக்கை களை வெளியிட்டு மலையக பட்டதாரி களை இழிவுப்படுத்தியுள்ளமை மிகவும் கீழ்த்தரமான செயலாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி. ராஜதுரை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையப் பட்டதாரிகளை சிறுபிள் ளைத் தனமானவர்கள் என்றும் அரசி யல்வாதிகளுக்கு பின் செல்பவர்கள் என்றும், சரியான விடயத்தை சீர்தூக் கிப் பார்க்க தெரியாதவர்கள் என்றும் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளமை வருந்தத்தக்க விடயமாகும்.

இ.தொ.காங்கிரஸானது இவ்வாறான அறிக்கைகளுக்கு பதில் கொடுக்கக் கூடாது எனத் தீர்மானித்துள்ளது. எனினும் இவ்வறிக்கையில் மலையக சமூகத்தை மான்புறச் செய்யும் மலை யகப் பட்டதாரிகள் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளமையாலும், மலையகத்தில் ஒரு பட்டதாரி உருவாவது எவ்வளவு சிரமம் என்பதை அனுபவ ரீதியில் உணர்ந்தவன் என்ற ரீதியிலும் இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யாமல் பெயரையும் புகழையும் பரப்பிக் கொள்ளும் நோக்கில் அறிக்கை விடுபவர்களையும், மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று சமூகத் தேவைகளை உணர்ந்து செயல்படத் தகுதி இல்லாத அரசியல்வாதிகளையும் கல்வி கற்ற சமூகம் நன்றாக அடையாளம் கண்டு அவர்களை நாடாத காரணத்தினால் இவ்வாறாக பொருத்தமற்ற முறையில் அறிக்கையை வெளியிட்டு கல்வி கற்ற சமூகத்தை, குறிப்பாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை இழிவாக சுட்டிக்காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அறிக்கையை விடுவோர் மலையகத்தில் எதையாவது சாதித்திருக்கிறார்களா? மக்களுக்காக இ.தொ.கா. செய்யும் உண்மையான அரசியல் சேவையால்தான் இ.தொ.கா.விற்கு மக்கள் பல்வேறுபட்ட ரீதியில் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இதனால் தான் இ.தொ.காவுக்கு ஒரு அமைச்சு பதவியும், அதி முக்கியத்து வம் வாய்ந்த அமைச்சில் பிரதியமைச் சர் ஒருவரையும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும், தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற இரு மாகாணங் களிலும் இரண்டு மாகாண அமைச்சுக் களையும், மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதோடு அம்பகமுவ, அம்பன்கங்க கோரல, பன்வில, ஆகிய பிரதேச சபைகள் மற்றும் அட்டன் - டிக்கோயா, தலவாக்கலை - லிந்துலை நகர சபைகளில் முழுமையான அதிகாரத்தை யும் தம்வசப்படுத்த முடிந்தது.

கடந்த 2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி யிடம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படை யில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 50 பேரும் மாகாண அமைச்சர்களுக்கு 10 பேரும் சிபாரிசு செய்யக் கூடிய சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டது. அந்த அடிப்படையில் இ.தொ.கா. பத்திரிகை, வானொலி ஊடாகவும் விடுத்த வேண்டுகோளை யடுத்து தகுதியுள்ள பெரும்பான்மை யான பட்டதாரிகளின் தகவல் சேர்க் கப்பட்டது.

இதற்கிணங்க தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்த சகல பட்டதாரிகளும் கொழும்பிலுள்ள கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு மலையகப் பட்டதாரிகளுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவது தொடர்பாக கலந்துரையாடப் பட்டதன் விளைவாக இவர்கள் தொடர்பான மேலதிகமான சகல ஆவணங்களும் திரடப்பட்டு இது தொடர்பான முன்னெடுப்புகளை செவ்வனே மேற்கொண்டது இ.தொ.கா.

எனவே இந்த நியமனத்தின் தார்மீக உரிமையும், அங்கீகாரமும் இ.தொ.கா.விற்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்திற்கும் சகல பட்டதாரி களினதும் தகவல்களை திரட்டியவன் என்ற ரீதியில் எனக்கும், எமது கட்சி யின் மாகாண அமைச்சர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்குமே உரித்துடையதாகும். மலையக பட்டதாரி களை அரச நிர்வாக துறையில் இணைத்துக் கொள்வதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டமை மக்கள் எமக்கு கொடுத்த அரசியல் அங்கீகாரத்தின் வெற்றியாகும்.

அறிக்கைகள் மூலம் பட்டதாரிகளை இழிவுப்படுத்தியது மட்டுமின்றி பட்ட தாரிகள் நியமனம் வழங்கப்பட்டதை யும் அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மானின் கோயம்புத்தூர் விஜயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளாத முட்டாள் தனமான அரசியல் வாதிகளே இவ்வாறு முழங் காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுவது போல அறிக்கை களை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோயம்புத்தூர் விஜயம் தொடர்பில் 2012.02.12 அன்று வெளிவந்த இந்தியா வின் தினத்தந்தி பத்திரிகையில் உண்மை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனிப்பட்ட ரீதியில் விஜயம் மேற் கொண்டு இந்தியா சென்றார். அங்கு அவர் தனது உறவினர்களை சந்தித்த பிறகு தனது இளைய புதல்வியோடு சில விடயங்கள் கலந்துரையாடியிருக் கின்றார். அச்சமயத்தில் அவர் ஹோட்டல் உரிமையாளரோடு தகராறு ஏற்படுத்தியோ அல்லது தேவையற்ற முறையில் நடந்து கொள்ளவோ இல்லை என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் அமைச்சர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் நிருவாகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைகளை மேற்கொண்டார். இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத் தும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டமாக அமைந்ததே தவிர வேறு எந்தவிதமான அசம்பாவிதங் களும் நடைபெறவில்லை என ஹோட்டல் நிருவாகம் தெரிவித்தது.

இலங்கை அரசாங்கத்தை கண்டித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தங்கியிருந்த ஹோட்டல் அருகில் போராட்டக்காரர்கள் சென்றார்கள். அப்பொழுது அவருக்குப் பாதுகாப்பாக வந்திருந்த காவல் அதிகாரிகள் அங்கு தடியடி நடாத்தி 12ற்கு மேற்பட்டவர் களை கைது செய்தனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங் கப்பட்டிருந்த பாதுகாப்பை விட சற்று கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் இடம் பெறாமல் தவிர்ப்பதற்கு தமிழக காவல் துறையினர் முன் நின்று செயல்பட்டுள் ளனர். எனவே மேற்கூறப்பட்ட வகையில் உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் ஊடகங்களினூடாக கருத்துக்களை வெளியிடுவதால் மக்கள் மத்தியில் தாங்கள் இழந்து வரும் செல்வாக்கை மீட்டுக் கொள்ள லாம் என நினைப்பது “கல்லில் நார் உரிக்க நினைப்பது போன்றதாகும்”

இ.தொ.கா.விற்கு சவால் விடும் வகை யில் அறிக்கையிட வேண்டுமானால் அரசியலில் மக்களுக்கான தேவையு ணர்ந்து செயல்பட தகுதியுடையவராக இருப்பது காலத்தின் தேவையாகும். அத்தோடு மலையக அபிவிருத்தியின் பங்குதாரர்களான மலையக பட்டதாரி களை சிறுபிள்ளைத்தனமானவர்கள் என்றோ, அரசியல்வாதிக்குப் பின் செல்பவர்கள் என்றோ, கல்வி கற்ற பாமரர் போன்று செயற்படுகின்றார்கள் என்றோ சுட்டிக்காட்டி அறிக்கை விடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எந்தவொரு நாகரீகமான அரசியல்வாதிக்கு பொருத்தமுடையதாகும்.

இவ்வாறாக அநாகரீகமான முறையில் கல்வி கற்ற சமூகத்தை மதிக்காமல் கொச்சை வார்த்தைகளில் கேவலப்படுத்தும் அரசியல் வாதிகளை மலையக சமூகம் நிராகரித்து வருகின்றது. அது மாத்திரமின்றி தனக்கு சார்பாக செயற்படுகின்ற ஊடகத்தைப் பயன்படுத்தி மலைய மக்களின் வாக்குகளைப் பெற்று இன்று மலைய மக்களை மறந்து திரியும் அரசியல்வாதிகளையும் மக்கள் அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கையில் சமுக அபிவிருத்தியையும், கல்வி அபிவிருத்திகளையும் ஏனைய சமுகங்களுக்கு சவால்விடக் கூடிய அளவிற்கு மலையக சமூகம் முன்னேறியிருக்கின்றது என்றால் இது இ.தொ.கா.வின் அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மையுள்ள தலைமைத்துவம் அதன் சேவையே என்பதை மலையக வரலாறு சான்று பகர்கின்றது. மலையக பட்டதாரிகள் 150 பேருக்கு மட்டும் சிபாரிசு செய்யக்கூடிய நிலை இருந்தும் 210 பேருடைய சிபாரிசு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினதும் இ.தொ.காவினதும் செயற்பாடுகள் காரணமே தவிர வேறு எந்த மலையக கட்சிக்கும் இது தொடர்பில் கருத்து வெளியிட தகுதியில்லை.

இந்த நியமனம் தொடர்பில் இ.தொ.கா. எவ்வித பாரபட்சமும் இன்றி நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, குருநாகல், பதுளை, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 210 பேரைத் தெரிவு செய்து அவர்களுக்கான நியமனம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

விமர்சிப்பவர்கள் கூரைத்தகடுகளையும், தண்ணீர் தாங்கியையும், 100 அடி வீதியையும் அரைகுறையாக போட்டுவிட்டு கிழமையில் 6,7 நாட்களும் பத்திரிகையில் செய்திகளை போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில வேளையில் ஒரே செயற்பாடு மூன்றிற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒரே பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்வாறு மோசமான அரசியலை செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. மேற்கூறப்பட்ட ரீதியில் செயற்திறனற்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களித்ததனால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளதால், இவ்வாறான போலியான அறிக்கைகளின் மூலம் மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடிக்கலாம் என நினைப்பது அரசியல் அநாகரீகமாகும்.

மலையக சமூகத்தை தலைநிமிர வைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற மாபெரும் ஸ்தாபனம் இன்று பல கட்டங்களில் மக்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் பெற்றிருப்பதை சில அரசியல்வாதிகளால் ஜீரணிக்க முடியாதுள்ளது. இதனால்தானோ என்னவோ முன்னுக்குப் பின் முரணாக கருத்துகளை வெளியிடுகின்றனர். இவ்வாறானவர்கள் குறித்து மலையக சமூகத்தினர் விழிப்புடன் செயற்படுகின்றனர் என ராஜதுரை எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையகத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தித் திட்ட உதவியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை ஆகியோர் நியமனக் கடிதங்கள் வழங்குவதையும் பட்டதாரிகளையும் படங்களில் காணலாம்.

(படங்கள். தி. பாலகிருஷ்ணன்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.