புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
அம்ஜாத் பவுண்டேசன் பேருவளை மாணவரின் கல்வி மேம்பாட்டுக்கு உதவி

அம்ஜாத் பவுண்டேசன் பேருவளை மாணவரின் கல்வி மேம்பாட்டுக்கு உதவி

பீ.எம். முக்தார்

எம்.எம்.எம். அம்ஜாத் பவுண்டேசனினால் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி பயிலும் 300 மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாச புத்தகம் உட்பட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பேருவளை மரக்கலாவத்தவில் சாரா மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீல.சு. கட்சி களுத்துறை மாவட்ட அமைப்பாளருமான எம்.எம்.எம். அம்ஜாத் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். யூஸ¤ப், பியல் நிசான்ந்த, நகர சபை உபதலைவர் சஜித் தேவப்பிரிய, நகர சபை உறுப்பினர்களான எம். உஸ்மான், காமினி அல்விஸ், முன்னாள் நகர சபை எதிர்க் கட்சித் தலைவர் இர்பான் முர்ஸி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம். இஸ் மாயில், பைஸான் நைஸர், நெவில் ரன்சித், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஹுஸைன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளான துமிந்த ராஜபக்ஷ, காலிந்த பியசேகர உட்பட அதிபர்கள் பலரும் பங்குபற்றினர். வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றம் கருதி எம்.எம்.எம். அம்ஜாத் பவுண்டேசன் மேற்கொள்ளும் பணிகளை பலரும் பாராட்டிப் பேசினர்.

வறுமையை காரணம் காட்டி எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வியை நிறுத்தி விடக் கூடாது என மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத் கூறினார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். யூ.ஸ¤ப் பேசும் போது வறிய பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளுக்கு வசதி படைத்தவர்கள் கைகொடுத்து உதவி செய்ய முன்வர வேண்டும்.

எம்.எம்.எம். அம்ஜாத் பவுண்டேசன் முதல் சேவையாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.

பேருவளை வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாலினி ஏக்கநாயக்க, அதிபர்களான எம்.எம். சுபைர், யூ.எல்.எம். ராஸிக் உட்பட பலரும் பேசினர். அதிபர்களான எம்.ஏ.எம். பாரிஸ், ஐ.ஹுஸாமுதீன், எம்.எப்.எம். நல்ரி, எம்.எஸ்.எம். இர்பான், எம்.இஸட்.எம். அஷ்ரப் உட்பட பலரும் விழாவில் பங்குபற்றினர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.