புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

இவ்வார பலன்

19.02.2012 முதல் 25.02.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகை பெறாமல் இருந்தால் சிவப்பு நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 12ம் இடத்து சுக்கிரன் காரணமாக எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும். ஆபரணங்களும் அணிகலன்களும் கூடவே வரும். உடல் நலம் மேம்படும், தொழில்துறைகளால் இலாபம் ஏற்படும். அரச பதவிகளுக்கு நன்மையான மாற்றம் கிடைக்கும். சொத்துக்களால் இலாபம் கிடைக்கும். நல்ல இலாபத்தை எதிர்பார்க்கலாம். ஆடைகள், ஆபரணங்கள் வந்து சேரலாம். மேலும் மனைவியாலும் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி கிடைக்கும்.
 


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிகரார்கள் உங்களது ஜாதகத்தில் சுக்கிரன் பகை பெறாமல் இருந்தால் வெண்பட்டு நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 11ம் இடத்து சுக்கிரன் காரணமாக அதிர்ஷ்ட இலாப சீட்டு பரிசு கிடைக்கலாம். நீங்கள் எடுக்கின்ற சகல முயற்சிகளும் வெற்றி அளிக்கும். அன்னதானம் வழங்குவதில் விருப்பம் ஏற்படும். தொழில் துறைகளால் பங்கு வியாபார த்தால் இலாபம் ஏற்படும். எதிர்பாராத விதமாக வசூலிக்கப் படவிருந்த பணம் வந்து சேரும். பெண்வழி ஆறுதல் கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் நிகழும்.
 


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் புதன் பகை பெறாமல் இருந்தால் பச்சை நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 10ம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண்களால் பிரச்சினை ஏற்படலாம். போக்குவரத்துகளில் அல்லது வாகனம் செலுத்தும் போது மிகவும் மின்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். பெண் வழி விரோதம் ஏற்படலாம். நன்மை செய்தும் வீண் பெயர் கேட்க நேரிடும். உடல் நலம் பாதிப்படையும் போக்குவரத்தின் போது மிகவும் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
 


கடகம்


புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் சந்திரன் பகை பெறாமல் இருந்தால் வெண்ணிறம், நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 9ம் இடத்து சுக்கிரன் காரணமாக திடீர் பண வரவு உண்டு. பெண்வழி சுகம் கிடைக்கும். அரசாங்க துறைகளில் எந்தத் துறைகளாக இருக்கட்டும் பதவி வகித்தா லும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். உடல் நலம் பாதிப்படையும். பெண் வழி ஆறுதல் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த விடயங்கள் நீங்கள் எண்ணிய வண்ணம் உங்கள் சார்பாக நிறைவேறும் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். ஆடை தொழிற்சாலை வியாபாரிகளுக்கு இலாபம்.
 


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் சூரியன் பகை பெறாமல் இருந்தால் சிவப்பு நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 8ம் இடத்து சுக்கிரன் காரணமாக வாழ்க்கை வசதிகள் பெருகலாம். மனதில் ஒருவித தாழ்வு நிலைப்பாடு தோன்றும். வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் நாட்டம் இருக்கும். பெண்வழி ஆறுதல் கிடைக்கும். மேலும் மனதில் ஒருவித சஞ்சலம் நிலவும்.
 


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்கள் உங்களது ஜாதகத்தில் புதன் பகை பெறாமல் இருந்தால் பச்சை நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 7ம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண்களால் பலவித பிரச்சினை ஏற்படலாம். சொத்துக்களால் இலாபம் கிடைக்கும். இலட்சுமீகடாட்சம் உண்டு, வீண் தொந்தரவுகளும் ஏற்படும். பெண் மூலம் பலவித சச்சரவு ஏற்படலாம். புதிய பாதவி கிடைக்கலாம். மங்களகரமான காரியங்கள் வீட்டில் நிலவலாம். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் நீங்கள் எண்ணியபடியே மகிழ்ச்சியாக அமையும்.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலா ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் சுக்கிரன் பகை பெறாமல் இருந்தால் பட்டு வெண் நிறம் நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 6ம் இடத்து சுக்கிரன் காரணமாக நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் பலவித முட்டுக்கட்டைகள் ஏற்படும். உடல் நலம் பாதிப்படையலாம். பகைவர்களின் தொந்தரவு இருக்கும். பலவித சிரமங்களுக்கு முகம் கொடுத்து காரியங்களை தொடர வேண்டி வரும். குடும்ப உறவினர்களிடையே சச்சரவு ஏற்பட லாம்.
 


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகை பெறாமல் இருந்தால் சிவப்பு நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 5ம் இடத்து சுக்கிரன் காரணமாக திடீர் பண வரவு உண்டு நண்பர்களின் ஆதரவு ஏற்படும். பெரியவர்களின் ஆதரவும் உண்டு பெண் வழிகளால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். உடல் நலம் பாதிப்படையும். பொருளாதார ரீதியில் உயர்வு ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் பெரியவர்களின் ஆசியும் கிடைக்கும் வராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.
 


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் வியாழன் பகை பெறாமல் இருந்தால் மஞ்சள் நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 4ம் இடத்து சுக்கிரன் காரணமாக பிரிந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள், சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். புதிய பதவி கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிரிகள் அடிபணிவர். இனசன உறவுகள் கொண்டாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். மனதில் ஒருவித அச்சம் நிலவும்.
 


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் சனி பகை பெறாமல் இருந்தால் கரு நீலம் நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 3ம் இடத்து சுக்கிரன் காரணமாக குழந்தை பாக்கியம் ஏற்படலாம். நண்பர்கள் உதவுவார்கள் புதிய சொத்து க்கள் சேரும், சமூகத்தில் மதிப்பு உயரும். பலவிதங்களிலும் வீண் பண நஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும். கண் சம்பந்தமான பிரச்சினை ஏற்படலாம். உடலில் புதிய உற்சாகம் பிறக்கும். சந்தோஷமான செய்தியும் வந்து சேரும் மனதில் ஒருவித அச்சம் நிலவும்.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் சனி பகை பெறாமல் இருந்தால் கருநீலம் நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 2ம் இடத்து சுக்கிரன் காரணமாக திடீர் பண வரவு ஏற்படும். அரச மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் சுகம் ஏற்படும். சமூதாயத்தில் செல்வாக்கு குறையும். வீண் அலைச்சலுக்கும் இடம் உண்டு. உடல் நலம் பாதிப்படையலாம். தொழில் துறையால் இலாபம் ஏற்படும். அரசாங்க ரீதியான நன்மைகள் கிடைக்கும். குடும்ப சுகம் மேம்படும். வெளியூர் பிரயாணத்துக்கு வாய்ப்புண்டு செலவுகளுக்கும் இடம் உண்டு.
 


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிகாரர்கள் உங்களது ஜாதகத்தில் வியாழன் பகை பெறாமல் இருந்தால் மஞ்சள் நிற ஆடை அதிர்ஷ்டம் தரும். இவ்வாரம் 1ம் இடத்து சுக்கிரன் காரணமாக திடீர் விருந்து உபசாரம் கிடைக்கும். பெண் நண்பர்கள் ஆபத்துக்கு உதவுவார்கள். வெளியூர் பிரயாணத்திலும் நாட்டம் கொண்டவர்கள். இடமாற்றத்துக்கு இடம் உண்டு. பெருமளவு பண நஷ்டம் ஏற்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.