புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
பா'ன் என்றால் ஆடைக்குறைப்பு அல்ல

பா'ன் என்றால் ஆடைக்குறைப்பு அல்ல

தாரா பிரியதர்ஷினி

“ஆடை வடிவமை ப்பு என்றால் கத்திரிக்கோலுடனும் ஒரு சிறு துண்டு துணியுடனும் தையற்கலை கற்பிப்பது என்றுதான் இன்ன மும் இருந்து வருகிறது. நவ நாகரிகம் என்றால் ஆடைக ளைக் குறைக்கும் என்று நினைக்கிறார்கள். இதுபற்றிய தெளிவு போதுமானதாக இல்லை” என்று கவலைப்படு கிறார் தாரா பிரியதர்ஷினி.

ஒவ்வொருவரின் கலாசாரத் தில் எந்த மாற்றமும் இல்லாமல் நவீன முறையில் ஆடைகளை வடிவமைக் கலாம் என்கிறார் தாரா.

2011 ஆம் ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப் பாளராகத் தெரிவுசெய்யப் பட்டு பரிசு பெற்றவர். 1500 வரையிலான ஆடை வடிவ மைப்புகளைத் தயாரித்திருக் கும் தாரா, அலுவலக உடை முதல் அனைத்துவிதமான வைபவங்களுக்கும் இரு பாலாருக்குமான ஆடை வடிவமைப்பைத் தயாரித்தி ருக்கிறார்.

இலங்கையில் சுமார் 500 இற்கும் அதிக மான வடிவமைப்பாளர்கள் இருந்தும் தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிவர்கள்தான் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலரில் முக்கியமானவரைகத் திகழும் தாரா, தமிழ்ப் பெண்களை இந்தத் துறை யில் ஈடுபடுத்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்.

“விசேடமாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பெண் களின் வாழ்வாதாரத் திற்குக் கைகொடுக்கும் வகையில் தான் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறேன். இதற்கு வசதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், ‘கெட்ஸ் டிசைனிங் சர்க்கிள்’ என்ற அமைப்பி னைத் தோற்றுவித்து செயற்படுத்தி வருகிறோம். கொழும்பு 07 தர்மபால மாவத்தையில் இல.71 இல் எமது அமைப்பின் அலுவ லகம் அமைந்திருக்கிறது.

ஐந்து ஆறு இலட்சம் எனச் செலவழித்துதான் இந்தக் கலையைப் படிக்கிறார்கள். அதுவும் சாதாரணமானவர் களுக்கு இது சாத்தியமில்லை.

ஆகவே நாங்கள் எமது அமைப்பில் அங்கத்தவர் களாகச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு ஆடை வடிவமைப்பு பற்றி கலையைக் கற்றுக்கொடுக்கிறோம்.

வருடத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் மாத்திரம் அறவிடுவோம். வெளிநாட்டுப் பயணங்களையும் ஏற்பாடுசெய்துகொடுத்து இந்தத் துறையில் முன்னேற வழி ஏற்படுத்துவோம்” என்று பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் தாரா. மேலதிக விபரங்களுக்கு 0755972335 என்ற தொலைபேசி எண்ணுக்கு தாராவை தொடர்புகொள்ள முடியும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.