புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
ஈரானிய திரைப்பட விழா

ஈரானிய திரைப்பட விழா

இம்மாதம் 24-28 வரை

வாழ்க்கையின் யதார்த்தத்தை கலா ரலசனையோடு வெளிப்படுத்தி, உலக சினிமாவுக்கு வழிகாட்டியாக இன்று அமைந்திருக்கிறது. ஈரானிய சினிமா.

அது தொடாத கதையோ, இல்லையெனுமளவுக்கு முன்மாதிரியான படங்களைத் தந்திருக்கிறார்கள் ஈரானிய இயக்குநர்கள்.

1940 களின் பிற்பகுதியில் இருந்தே ஈரானில் திரைப்படத் தயாரிப்பு ஆரம்பித்தாலும், 1970களில் மசூத் கிமியா என்ற இயக்குநரின் ‘சீசா’ என்ற படம் அங்கு ஓர் புதிய அலையை உருவாக்கியது.

டாரியஸ் மொஹர்ஜியின் ஹிhலீ விow திரைப்படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. 1979 இன் இஸ்லாமியப் புரட்சியின் பின், 80 களின் பற்பகுதியில் மீண்டும் ஈரானிய சினிமா புத்துயிர் பெற்றது.

இக்காலப் பகுதியில் இருந்தே அவை உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கத் தொடங்கிவிட்டன.

மனிதப் பெறுமதிகளை மிக எளிமையான அழகியல் உணர்வோடு சித்தரிப்பவையாக ஈரானிய திரைப்படங்கள் இருப்பதால், 90 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இருந்து ஈரானியத் திரைப்படங்கள் உலகின் எந்தப் பகுதியில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும், அவை வெற்றிபெற்று பல உயர் விருதுகளை தட்டிச் செல்ல ஆரம்பித்தன. சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற இயக்குநர்களான, மசூத் கிமியாஸ், அப்பாஸ் கிராஸ் தமி, நாசர் டக்வாய், மஜித் மஜிதி, மக் மெல்பப், அப்பாஸ் ராபி, போன்ற பலரை உலகுக்கு தந்த பெருமையும் ஈரானிய சினிமாவுக்கு உண்டு.

இஸ்லாமியப் புரட்சிகளுக்குப் பின்னர் 80 களில் மட்டும், சர்வதேச ரீதியாக 80 முக்கிய விருதுகளை ஈரானிய சினிமா பெற்றிருக்கிறது.

ஈரானிய சினிமாவில் காணப்படும் ஆரோக்கியமான சூழல் பல முக்கிய பெண் இயக்குநர்களையும் உலக சினிமாவுக்குத் தந்திருக்கிறது.

சமகால ஈரானியத் திரைப்படங்களை இத்தாலிய நவயதார்த்த வாத சித்தாந்தத்தின் தொடர்ச்சியாக, பல திரை விமர்சகர்கள் கூறுவர்.

ஈரானிய திரைப்படங்கள் குழந்தைகளின் மனோநிலையை கூர்மையாக, கலைத்துவத்துடன் சித்தரிப்பவை. அதனால்தான் இன்றும் அநேகரின் வீடுகளில் Children of Heaven எனும் திரைப்படம் ஒரு ஆவணம் போலவே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

வருடம் தோறும், தரமான ஈரானியப் படங்களை இலங்கை திரைப்பட ரசிகர்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பை ஈரானிய திரைப்பட வாரம் வழங்குகிறது. இலங்கையில் உள்ள ஈரானியத் தூதரகம் வருடாவருடம் நடாத்தும் இத்திரைப்பட வாரம் இம்முறை இம்மாதம் 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இஸ்லாமியப் புரட்சியின் 33 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, இலங்கைக்கான ஈரானியத் தூதரகத்தின் கலாசாரப் பிரிவும், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்தும் இவ்விழாவில் இம்முறை, ஈரானின் புகழ் பெற்ற இயக்குநரான அப்பாஸ் ராபி மற்றும் ஒளிப்பதிவாளர் பாபர் பொல்கோயே ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.

ஆரம்ப நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிரதம விருந்திராகக் கலந்து கொள்கின்றார். இவ்வாரம்ப நிகழ்வில் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் பங்கு கொள்ளலாம்.

பெப். 25 முதல் 28 ம் திகதி வரை காண்பிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களையும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

இத்திரைப்பட விழாவில் ButterFly In The Wind, Elixir and Dust, Strangers, 40 Year Old, Gold and Copper Child and Angel  ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படவுள் ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.