புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
டி.வியை வீட்டில் எங்கே வைப்பது?

டி.வியை வீட்டில் எங்கே வைப்பது?

டி. வியை வீட்டில் எங்கே வைப்பது?

பலரும் இப்போது தினமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாஸ்து சம்பந்தமான விபரங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களின் நன்மை கருதி, சின்ன குறிப்புகளை இந்த வாரம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

"வீட்டில் உள்ள டி. வியை எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

* உங்களது வீட்டின் நடுஹால் அல்லது அறையின் தென்கிழக்கில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்கலாம். இதுவே சிறப்பு வட மேற்கிலும் வைக்கலாம். ஆனால்,

டி. வி. ஓய்வின்றி அதிக நேரம் ஓடிக்கொண்டிருக்கும்.

* உங்கள் சாப்பாட்டு மேசையை வைப்பதற்கு சிறந்த இடம் மேற்கு பகுதிதான். சமையல் அறையை ஒட்டிய பிற திசைகளில் அமைவதில் தவறில்லை.

ஆனால், மேற்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணுமாறு இருக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக குடும்பத் தலைவன் கிழக்கு பார்த்து அமர்ந்து உண்ண வேண்டும்.

மேசைகளைப் பயன்படுத்தும் போது சதுர, நீள்சதுர மேசைகளையே பயன்படுத்த வேண்டும் வட்ட வடிவ மேசைகளையும் முட்டை வடிவ மேசைகளையும் பயன்படுத்தக் கூடாது.

அது,

வம்பு சண்டை வளர்வதற்கு இடம்தரும்.

* சிறிய மண்பானை ஒன்றிற்குள் சில்லறை காசுகளை நிறையப் போட்டு மேற்குப் பகுதியில் மறைவாக வைக்கவும். இது உங்கள் பொருளாதாரம் உயர்வதற்கு வழி வகுக்கும்.

(வடக்கு பார்த்திருக்கும் இல்லத்தின் வாசல் கதவு வடக்கு சார்ந்த வடமேற்கில் அமைந்திருப்பது சுபமானது அல்ல.

அதேபோல்,

கிழக்கு முகம் பார்த்திருக்கும் இல்லத்தின் வாசல் கதவு கிழக்கு சார்ந்த தென்கிழக்குப் பக்கத்தில் அமைவதும் சிறப்பு அல்ல.

* சமையல் அறைக்குள் இருக்கும் அடுப்புக்குப் பின்னால் ஜன்னல் இருப்பதும் நல்லதல்ல. இந்த ஜன்னல் வழியே காற்று உள்ளே வருவதும் அசுபமாகும். இப்படி இருப்பதும் உங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* வீட்டுக்குள் நுழையும் போது தெரியும்படி இருக்கும் இடத்தில், கண்ணாடிகளையோ, எதிரொளி ஏற்படுத்தக் கூடிய பிரேம் போட்ட படங்களையோ மாட்டி வைக்கக் கூடாது.

குறிப்பாக,

டி. வி. யையும் வைக்கக் கூடாது.

* தூங்கும் போது,

வீட்டின் வாசல்பக்கம் கால்களை நீட்டும் விதத்தில் தூங்காதீர்கள். மேற்கு பக்கமாக தலை வைத்துத்தான் தூங்க வேண்டும்.

அதே நேரம்,

படுக்கை அறைக்குள் குழந்தைகளின் படங்களை தொங்கவிட வேண்டாம். கண்ணாடியும் வைக்க வேண்டாம். இதைத் தவிர்க்க முடியாவிட்டால்,

கண்ணாடியை மூடி வைக்கவும். பிரேம்போட்ட கண்ணாடிகளைப் பாவிப்பதுதான் நல்லது.

* வீட்டின் தெற்கு அல்லது மேற்குப் பகுதியில் பூஜை அறையை அமைக்கலாம். அவ்வறையின் மேற்குச் சுவர் ஓரமாக விளக்கு விக்கிரகங்களை கிழக்கு பார்க்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். வழிபடும் போது மேற்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து வழிபடலாம்.

* வீட்டின் தெற்குப் பக்க சுவற்றில், சூரியன் உதிப்பதைக் காட்டும் புகைப் படம் அல்லது வரைபடமோ ஏதாவது ஒன்றை மாட்டி வைக்க வேண்டும்.

இதனால்,

பக்கத்து தோட்டத்திலோ, பக்கத்திலோ இவை இருக்குமாயின் அந்த வீட்டில் குடியிருக்கக் கூடாது.

* வடகிழக்கில் மட்டும் பூஜை அறையை வைத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல்

காணியின் வடகிழக்கு மூலையில் கோயிலைக் கட்டவும் கூடாது.

ஏதாவது ஐயங்கள் இருந்தால் 0114949124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.