புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
ஏடாகூடமான கேள்விகள் 28

ஏடாகூடமான கேள்விகள் 28

ஏடாகூடம் : மொழி
 

பதில் தருவது:

எழுத்தாளர் அனுஷா மொறாயஸ்

கேள்வி : ‘இருட்டும்’ நீங்களும் இரட்டைப் பிறவிகளாமே! அப்படியா?

பதில் : நாமிருவரும் இணை பிரியாத தோழிகள், என்றும் சொல்லலாம்.

(ஜாக்கிரதை! பெண்கள் தொட்டு பொட்டு வைத்துக் கொள்ளப் போகிறார்கள்)

கேள் : நீங்கள் நடந்து போகும் போது ஏன் கால்கள் இரண்டையும் பயன்படுத்து கிaர்கள்?

பதில் : ஒற்றைக் காலில் நடக்கும் ‘நளினம்’ புரியாததால் இரண்டு கால்களையும் பயன்படுத்த வேண்டி உள்ளது.

கேள் : பாம்புக்குப் பிடித்த நோய் எது?

பதில் : தலைவலி

(‘புற்றுநோய்’..... இது எப்படி இருக்கு?)

கேள் : உங்களுக்கு கோபம் வந்தால் அம்மியைத் தூக்கி ‘அவரை’ அடிப்பீர்களாமே! உங்கள் ‘மம்மி’ தான் சொன்னார்கள்.

பதில் : என்ன செய்வது எனக்கு கோபம் வரும் போதெல்லாம் என் கால்களில் அம்மிதான் தெரிகின்றது. எடுத்து அடிப்பதற்கும் எனக்கு அதுதான் ‘இலகுவாக’ உள்ளது.

(ஓ..... ‘பொம்புள’ தாராசிங்)

கேள் : நீங்கள் கதை எழுதும் போது ‘கடுக்காயை’ இடது கையில் வைத்துக் கொண்டுதான் எழுதுவீர்களாமே. அது ஏன்?

பதில் : அப்போது தான் கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒருவருக்கு ஒருவர் ‘கடுக்காய்’ கொடுக்க இலகுவாக இருக்கும் என்பதால்

(‘அவருக்கு’ கொடுக்காமல் இருந்தால் சரி!)

கேள் : இதுவரையில் நீங்கள் எத்தனை பேருக்கு ‘அல்வா’ கொடுத்திருப்பீர்கள்?

பதில் : எனது நிஜப் பெயரான ‘லூர்து மேரி’யை மறைத்து ‘அனுஷா மொறாயஸ்’ எனும் இனிமையான இளமையான பெயருக்குள் மறைந்திருந்து எனது ரசிக ரசிகைகளுக்கு ‘அல்வா’ கொடுத்துள்ளேன்.

(ச்சா.... இது கொஞ்சம் வித்தியாசமான ‘அல்வா’ தான்)

கேள் : ஒரு எழுத்தாளன் தான் இறக்கும் தறுவாயில் தனது சொத்தை எல்லாம் மனனுக்கு எழுதி வைத்து விடுகிறார். அதைப் பார்த்த மகன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால், இறுதியில் இருந்த ஒரு வரியைப் படித்ததும் அவன் மயங்கி விழுந்து விடுகிறான். அவன் ஏன் அப்படி மயங்கி விழுந்தான் அப்படி என்ன எழுதப்பட்டிருந்தது?

பதில் : ‘இதில் இடம்பெற்ற யாவும் கற்பனையே!’ எனும் வரியைப் பார்த்து.

(அடடா! நீங்க அறிவுக் கொழுந்துன்னு சொல்லவே இல்ல!)

கேள் : இலங்கையில் உள்ள எழுத்தாளர்களில் எந்த எழுத்தாளரைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படுகிaர்கள்?

பதில் : உங்களைப் பார்த்துதான் வருடங்கள் பல கழிந்தும் இன்னும் களைக்காமல் இளமை, இனிமை, புதுமையென எழுத்துலகில் மட்டுமல்ல இன்னும் சில துறைகளில் நீங்கள் ஓங்கி உயர்வதைக் கண்டு நிச்சயம் எனக்கு உங்கள் மேல் பொறாமை! ‘இடிக்கு விழ இடமில்லாமல் இடியப்பக்காரியின் வீட்டின் மேல் விழுந்ததாம்

(விழ இடமில்லாமல் இடியப்பக்காரியின் வீட்டின் மேல் விழுந்ததாம்)

கேள் : உங்களை யாராவது விரட்டி விரட்டி காதலித்தார்களா?

பதில் : இந்த கறுப்பழகியும் காதலிக்கப்பட்டாள். முன்னொரு காலத்தில்.

(ஹ.... அந்த மலரும் நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’ பாட்டி!)

கேள் : கோல்பீசுக்குப் போய் குடைக்குள் அமர்ந்து காற்று வாங்கிய அனுபவம் உண்டா?

பதில் : இதுவரை இல்லை. இனிமேல்தான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

(கிழிஞ்சுது போ!)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.