புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
நீதியின் காவலன்

நீதியின் காவலன்

தோன்றிற் புகழொடு தோன்றுக என் றான் வள்ளுவன். அதற்கிணங்க தான் தொட்ட துறை கள் அனைத்தையும் துலங்க வைத்து தமக்கும் புகழ் சேர்த்தவர் மேல்முறை யீட்டு நீதியரசராக விளங்கிய நீதய ரசர் கிருஷ்ணபிள்ளை பாலகிட்ணர்.

இவர் காலமாகி இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24-07-2011) ஞாகார்த்த உரையை முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆற்றவுள்ளார்.

நீதியரசர் பாலகிட்ணர் யாழ்ப்பாணத்தின் கொக்குவிலில் 1931ம் ஆண்டு கிருஷ்ணபிள்ளை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை புகையிரத திணைக்களத்தில் விhiலீஜீ ஹிrains விontrollலீr ஆகக் கடமையாற்றியவர். இவரின் தாயார் சமய சமூக விஷயங்களில் மிகவும் ஈடுபாடுகொண்டவராகவும், தமது 6 பிள்ளைகளையும் நல்லமுறையில் வளர்த்துச் சமூகத்தில் கல்வியிலும், பண்பிலும் நன்கு சிறப்புடையவர்களாக வாழ வழிவகுத்தார்.

நீதியரசர் பாலகிட்ணர் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் யாழ். இந்துக் கல்லூரியிலும், கொழும்பு சென்ட் ஜோசப் கல்லூரியிலும் கல்வி கற்று பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓர் (கி. தி) பட்டதாரியானார். அதன்பின்னர் இலங்கைச் சட்டக் கல்லூரியில் இணைந்து 1957ம் ஆண்டு ஓர் சட்டத்தரணியாக (தினீvoணீatலீ) வெளியேறினார். இதைத் தொடர்ந்து அன்றைய காலத்தில் சட்டத்துறையில் பிரபல்யம்பெற்ற காலம் சென்ற சி. ரங்கநாதன் (ஙி. வி) யின் கீழ் தன் சட்டத் தொழிலை ஆரம்பித்தார். இவரின் ஆழ்ந்த, பரந்த, சிறந்த சட்டவாதத்திறமையினாலே சட்டத் துறையில் மிகவும் பிரபல்யம் மிக்கவராக விளங்கினார். பாலகிட்டணர் 1966ம் ஆண்டு நீதித்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுராதபுரம், இரத்தினபுரி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நீதிபதியாகக் கடையாற்றினார். இதன்பின்னர் கல்முனை, சாவகச்சேரி போன்ற இடங்களில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றினார். இவரின் திறமையைப் பாராட்டி நீதிச்சேவை இவரை முதற்தர நீதிபதியாக பதவி உயர்வு கொடுத்து யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதியாக கடமைபுரிய நியமித்து சிறிது காலத்தின் பின் மேல் நீதிமன்ற நீபதியாக பதவி உயர்வு பெற்று நீர்கொழும்பு, சிலாபம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் மகத்தான சேவையாற்றினார். 1986ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக பதவி உயர்வு பெற்றார்.

நீதியரசர் பாலகிட்ணர் 25 ஆண்டுகளுக்கு மேலாக நீதிச்சேவையில் பணிபுரிந்துள்ளார். மேலும் அஞ்சா நெஞ்சத்துடன் யாவரும் வியக்கும் வண்ணம் நீதித்துறையில் ஓர் உதய சூரியனாக விளக்கினார்.

இவர் ஓர் கரும வீரனாக, பயம், பாரபட்சம், விருப்பு , ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஓர் தலைசிறந்த நீதிபதியாக, நீதியரசராகக் கடமையாற்றினார்.

நீதியரசர் பாலகிட்ணர் அன்பும், பண்பும் உடையவராகவும், உண்மை நண்பராகவும், உத்தமமான உறவினராகவும் வாழ்ந்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவரின் வாழ்க்கை இலட்சியங்களாக அமைந்தன. சுருக்கமாகக் கூறின் 'இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய ஒரு பெருமகன். இவர் ஒரு இனிய நண்பனாய், சிறந்த கலைஞனாய், தெளிந்த அறிஞனாய், உயர்ந்த பண்பாளனாய், பாசமிகு தந்தையாய், கடமைமிக்க கணவனாக, முதன்மையான மூத்தோனாய் நம் மத்தியில் வாழ்ந்த ஒரு பெருமகன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.