வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
முன்பணத்தை திருப்பிச் செலுத்தாதிருக்க நடவடிக்ைக எடுக்கக் கோரிக்ைக

மலையகத்தில் தீபாவளி சோபையிழப்பு

முன்பணத்தை திருப்பிச் செலுத்தாதிருக்க நடவடிக்ைக எடுக்கக் கோரிக்ைக

தீபாவளி பண்டிகை இம்முறை பெருந்தோட்ட மக்கள் மத்தியில் களை கட்டவில்லை. தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்குச் சம்பள உயர்வின் நிலுவைச் சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்த்த தொழிலாளர்களுக்குப் பெரும் ஏமாற்றம் எஞ்சி நின்றதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்கள் முன்பணத்தை திருப்பிச் செலுத்தாதிருக்க சங்கங்கள் நடவடிக்ைக எடுக்க வேண்டுமென கோரி உள்ளனர்.

இதனால், கண்டி மாத்தளை மாவட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் நகரங்களுக்குச் சென்று தமது குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான பொருளாதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டங்களிலும் தோட்டங்களை அண்டிய நகர்களிலும் வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது.

தொழிலாளர்கள் வேலை செய்யும் மலைகளிலும் பிரட்டுக்களத்திலும் வீடுகளிலும் சம்பள விசயத்தைப் பேசுவதையும் தொழிற்சங்கங்களை விமர்சிப்பதையும் காணமுடிகிறது. கடந்த 17 மாதங்களாகத் தொழிலாளர்கள் பழைய சம்பளத்திற்கே வேலை செய்துள்ளதையிட்டு கவலையடைந்துள்ளனர்.

யாரிடம் சென்று குறைகளைக் கூறி ஆறுதல் பெறுவது? நாம் நம்பியிருந்த தொழிற்சங்கங்களே நம்மை கைவிட்டுவிட்டன. இனி யாரிடம் சொல்லி அழுவது என்ற நிலையில் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.

இந்துக்களின் முக்கிய திருநாள்களில் தீபாவளி பண்டிகையாக பெருந்தோட்ட மக்கள் மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இவை அனைத்தும் தெரிந்தும் சங்கங்கள் தம்மை ஏமாற்றிவிட்டதாகச் சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வர முன்பே பிள்ளைகள் உடுதுணிவகைகள், பாடசாலை புத்தகங்கள், சப்பாத்துகள், டியூசன் பணம் முதலியவற்றுக்குப் பட்டியல் போட்டுவைத்திருந்தனர். கடைசியல் ஆயிரம் ரூபாய் சம்பளமுமில்லை நிலுவைச் சம்பளமும் இல்லை இப்பொழுது எல்லா தோட்டத்தொழிலாளர்களும் மிகக் கவலையுடன் இருப்பதைக் காணமுடிகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.