வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

யாழ். பல்கலை மாணவர் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் மரணம்;

பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

அமைதியை பேண கடும் பாதுகாப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் குறித்து உடனடியாக பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதுவிடயமாகத் துரித விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்ைக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல்கலை மாணவர்களின் மரணத்தினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதந்தாங்கிய பொலிஸார் எந்நேரமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை தோன்றியிருப்பதாக அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியிருப்பதுடன் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அரசாங்கம் இதற்கு நீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்ைக விடுத்துள்ளன.

விவரம்»

வறண்டு கிடக்கும் தெதுறு ஓயா

 

Other links_________________________

முழங்காலுக்கு கீழே சுடத்தெரியாவிட்டால் பொலிஸ் பயிற்சி எதற்கு?

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சூட்டுச் சம்பவம், யாழ். மக்களை மீண்டும் பொலிஸார் மீது அவநம்பிக்கை கொள்ள வைப்பதாக அமையும். பொலிஸார் மீதான புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இழைத்தோர் மீது கடும் நடவடிக்கைளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விவரம்»

அவசரகாலச் சட்டம் இல்லாத நிலையில்உத்தரவிட்டது யார்?

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில், சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? அல்லது சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என்ற கேள்வியை பல்கலைக்கழக மாணவர்களின் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது கேட்டுநிற்கின்றது . . .

விவரம்»

மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலே நாட்டில் ஜனநாயகம் நிலைபெறுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சிக் காலத்திற்குள் நிலையான ஜனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். திருகோணமலையில் தேசிய சுற்றுச்சூழல் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. 

விவரம்»

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.