வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

ரோசாப் பூ...!

ரோசாப் பூ...!

ஒரு காட்டில் மிகவும் அழகான பூங்கா ஒன்றிருந்தது. அப்பூங்கா அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களால் அழகு பெற்றிருந்தது. பூக்களை நாடி தேனீக்கள், பறவைகள் என்பன நித்தமும் வந்தன.

இப்பூங்காவில் ஓர் அழகான ரோசாப்பூ பூத்தது. அதன் அழகைக் கூறிமுடிக்க இயலாதளவு அந்தமலர் அவ்வளவு அழகாக இருந்தது. அது போல அங்கு ஒரு மலரைக்காண முடியாது. அது காற்றில் அசையும் அழகைப் பார்த்து மயங்காதவர் எவரும் இருக்க முடியாது.

அந்தப் பூங்காவில் ரோசாப் பூவுக்குப் பக்கத்திலேயே ஒரு காக்காணம் மலரும் பூத்திருந்தது. அது அழகாகவோ மணமாகவோ இருக்கவில்லை. வண்டுகளும் தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் ரோசாப்பூவையே நாடி வந்தன. காக்கணம் மலரை திரும்பியேனும் பார்க்கவில்லை.

“எல்லோரும் உன்னைத்தான் பார்க்கிறார்கள். உன்னிடம் வருகிறார்கள் என்னை யாரும் பார்ப்பதும் இல்லை. நான் அழகும் இல்லை மணமும் இல்லை” இவ்வாறு ஒரு நாள் காக்காணம் மலர் ரோசாவிடம் கூறியது.

“நான் எவ்வளவு அழகாக இருந்தாலும் மணம் வீசிக் கொண்டிருந்தாலும் விரைவில் வாடிவிடுவேன். நீதான் அதிர்ஷ்டசாலி ஓரிரு நாட்கள் வாடாமல் இருப்பாய்.

மறுநாள் காலையில் பார்க்கும்போது ரோசாப்பூவின் இதழ்கள் யாவும் விழுந்து அம்மலர் வாடிப்போய் இருந்தது. அதை நாடி எதுவும் வரவில்லை.

இவ்வாறே அறிவும், பண்புடையோரும் அனைவராலும் கவரப்படுவார்கள் என்பதை இக்கதை மூலம் அறிந்து கொள்வோம்.

 

எம். ஐ. எப். சிப்கா,

தரம் -08E,

ப/ வெளிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம் வெளிமடை.


 




|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.