வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
சொந்தம் யார், யார்?

சொந்தம் யார், யார்?

"கருகிவிட்ட மலருக்குத் தரையே சொந்தம் - என்றும்

கழிசடை நீர்ப்போக்கிற்குக் கடலே சொந்தம்

உருகிவிட்ட பொன்னுக்குப் பெண்கள் மேனி

ஒட்டி வைத்த சொந்தமடா!"

சும்மா யோசிச்சிக்ெகாண்டு இருக்கும்போது திராவிடஸ்தான் இதழ்ல கவிஞர் பட்டுக்கோட்டை கலைக்கூத்தன் எழுதிய இந்தக் கவிதை ஞாபகத்துக்கு வந்தது. கருகிவிட்ட மலரில் இருந்து அப்படியப்படி... சொல்லிக்ெகாண்டுபோய்... கடைசியில " நிலைகெட்ட ஆட்சிக்கு யார், யார் சொந்தம்? என்று கேள்வி எழுப்பியிருப்பார்.

இந்தக் கவிதை ஞாபகம் வாறதுக்குக் காரணம் இருக்கு.

முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானதெண்டு சொல்லப்பட்ட சொத்துகள, அவர் தன்ர இல்லையெண்டு சொன்னதால, கனக்க பிரச்சினை.

அதிலை சிக்குப்பட்டது அவர்ட மைத்துனர். மைத்துனர் எண்டா அத்தையின்ர மகனோ, அம்மான்ர மகனோ இல்ல.

சகோதரியின் கணவர். மொழி வேறயா இருந்தாலும் உறவு முறைய மாத்தேலாதுதானே! சில பேர் கொஞ்சம் வசதியா இருந்தா, அவர் எனக்கு நெருங்கிய சொந்தம் என்பர். இல்லாட்டிக்குத் தூரத்துச் சொந்தம், தெரிஞ்சவர் எண்டு சொல்வர்.

இப்போதைய உலகம் இதுதானே! இப்பிடித்தான், பிரண்ட்ஸ்மார் மூணு பேர் கதைச்சுக்ெகாண்டு இருக்கும்போது, அங்க இருந்த ஒரு பொம்பிளை கேட்டாவாம், "உங்கட வைப் உங்களுக்குச் சொந்தமா?" எண்டு. உடனே நண்பர்கள்ல ஒருத்தர் சொல்லி இருக்கார், "ஓ.. அவ எனக்கு நெருங்கிய சொந்தம்" எண்டு.

பிறகு அவ கேட்டிருக்கா, எப்படி? அவ எண்ட வைப்... நெருங்கிய சொந்தம்தானே! எண்டு பதில் சொல்லியிருக்கார் நண்பர். எல்லோரும் வயித்தப்பிடிச்சுக்ெகாண்டு சிரிச்சிருங்காங்க. நான் சொல்ல வந்த விசயம் இதுவல்ல.

சொந்தம் யார், யார்? என்பதற்கும் யார் யார் பொறுப்பு என்பதற்கும் வித்தியாசம் இருக்குதானே! கருகிவிட்ட மலருக்குத் தரைதான் சொந்தம். கழிசடைநீர்ப்போக்கிற்குக் கடல்தான் சொந்தம். உருகிவிட்ட பொன்னுக்குப் பெண்களின் மேனிதான் சொந்தம். இப்படி ஒண்டையொண்டு பிரிக்க முடியாது. ஆனால், பொறுப்புகளை சிலவேள மாத்தலாம்.

மாத்தியும் யோசிக்கலாம். சொந்தம் எண்டா சொந்தம்தான், அதில ஒண்டும் பிசகேலாது! கவிஞர் கலைக்கூத்தன் எப்பிடி ஆழமா சொல்லியிருக்கார் என்றது கவிதையை வாசிச்சா உங்களுக்கு விளங்கும். அந்தக் கவிதையோட சில சம்பவங்கள வைச்சு கனக்ற் பண்ணிப்பாத்தன். எல்லாம் சரியாத்தான் இருக்கு.

தமிழ்ப்பகுதிகள்ல நடக்கிற வாள் வெட்டு, போதைப்பொருள் பாவனை, மதுபாவனை குத்தங்கள் எல்லாத்துக்கும் காரணம் நிலைகெட்ட ஆட்சியா, அல்லது நெறிகெட்ட இளைஞர் கூட்டமா, நீதித்துறையா எண்டெல்லாம் கனக்ற் பண்ணிப்பாக்க வேண்டிக்கிடக்கு. லேட்டஸ்ட்டா நடந்துகொண்டிருக்கிற சம்பளச் சிக்கலுக்கு யார் யார் சொந்தம் எண்டு சிந்திச்சுப் பார்த்தா இடியப்பச் சிக்கலா இருக்கு.

சிலர் சம்பளம் எண்டா எங்களுக்குத்தான் சொந்தம் எண்டு சொல்லுறாங்க. தொழிலாளர்களக் கேட்டா உழைப்பு எங்களுக்குச் சொந்தம் என்கிறாங்க. தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமெண்டு முதலாளிமார் சொல்றாங்க. ஆனா, அந்த மக்களோடவாழ்வாதாரத்துக்குச் சொந்தம் கொண்டாட யாரும் இல்ல. தொழிலாளர்களச் சொந்தம் கொண்டாட யாரும் இல்ல.

அங்க நடக்கிற ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்குச் சொந்தம் கொண்டாட யாரும் இல்லை. சம்பள உயர்வுக்கும் நிலுவைச் சம்பளத்திற்கும் சொந்தம் கொண்டாட யாரும் இல்ல. கடைசியா பார்த்தா ஆயிரம் ரூவாவுக்கு நாங்க சொந்தம் இல்லை எண்டு சொன்னவங்க, இப்ப எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறாங்க.

சொந்தம் எண்டு சொல்லிட்டா, பிறகு விலத்தி இருக்க முடியாது. சந்தாப் பணத்திற்குச் சொந்தம் எண்டு சொல்றவங்க, அத மாதா மாதம் குடுக்கிறவங்கள சொந்தம் கொண்டாடத் தயங்குறாங்க. இப்ப புரியுதா, கவிஞர் கலைக்கூத்தன் என்ன அருமையா சொல்லியிருக்கார் எண்டு.

தோட்ட மக்களோடு தொப்புள் கொடி உறவைக்ெகாண்டவங்க, இப்ப தூரத்து உறவுக்காரங்க எண்டு சொல்றதுக்கும் தயங்குறாங்க.

நிலுவைச் சம்பளம் கிடைக்காது கிடைக்காது என்று எத்தனையோ தடவை தினகரன் பேப்பர்ல எழுதியிருந்தாங்க. அதெல்லாம் பாக்காம சிலபேர் இனித்தான் நடவடிக்ைக எடுப்போம் எண்டு சொல்றாங்க. பாராளுமன்றத்தில கதைக்கப்போறதாவும் சொல்றாங்க.

ஏற்கனவே, அண்ணன் வடிவேல் சுரேஷ் பெட்றோல கொண்டு போய், சம்பளத்தக் குடுங்கடா! இல்லையெண்டா கொளுத்திக்ெகாண்டு செத்துப்போவேன் எண்டு பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

ஆனா, கம்பனிக்காரங்க அப்பவும் இரக்கப்படல. தொழிலாளிமேல இரக்கப்படாதவங்க, ஓர் எம்பிமேல இரக்கப்படுவாங்களா எண்டு இப்பதான் தெரியுது. கம்பனிக்காரங்க என்னதான் சொன்னாலும், தோட்டத்த குத்தகைக்கு எடுத்திருந்தாலும் தோட்டங்களுக்கு உண்மையான சொந்தக்காரங்க தொழிலாளிகள் என்றதை யாருக்கும் மறுக்கேலாது. அடுத்த கிழமை தீபாவளி.

அவங்களுக்குத் தீபாவளி அட்வான்ஸ் பத்தாயிரம் குடுப்பதாகச் சொல்லப்படுது. அத எப்படி திருப்பிச் செலுத்துவோம் எண்டு அந்த மக்கள் கேட்பதாகச் சொல்கிறார் நண்பர்.

பத்தாயிரம் அல்ல பதினைந்து ஆயிரமும் எடுக்கலாம். திருப்பிக்குடுக்ேகாணுமே! நிலுவைச் சம்பளம் கிடைச்சிருந்தாலும் கடன் வாங்காமல் கொண்டாடியிருக்கலாம். சரியா முப்பதாயிரத்திற்கு மேல அவங்களுக்கு இழப்பு! இதற்கெல்லாம் யார் யார் சொந்தம்? சிந்திக்க வேண்டிய விசயம்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.