புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

ஊடகவியலாளர்களை பயமுறுத்திய யுகம் ஜனவரி 8 ஆம் திகதியுடன் முடிவு

கொல்லப்பட்டோருக்கு நஷ்டஈடு : பிரதமர் ரணில்

 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்த யுகம் கடந்த ஜனவரி 8 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மீதான வரவு - செலவு திட்ட குழு நிலை விவாதத்தில்

ஊடகவியலாளர்கள்....

உரையாற்றும் போதே பிரதமர் விக்கிரமசிங்க மேற்படி கூறினார்.

பிரதமர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

கடந்த காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நாம் அந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். வடக்கில் தான் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

யுத்த சூழ்நிலையிலும் பல இக்கட்டுகளுக்கு மத்தியில் பத்திரிகைகளை அச்சிட்ட சரவணபவன் எம்.பிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறான நிலைமைகளில் பெரும்பாலானோர் தமது நிறுவனங்களை மூடிவிடுவர்.

இதேவேளை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இதை வழங்குவதில் பிரச்சினை இருக்காது.

மேலும் ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம் என்றார். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.