புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே?

காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே?

கண்டுபிடித்து தருமாறு அக்கா உருக்கம்

 விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சிப் பாடல்களை எழுதிவந்த புதுவை இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன நிலையில் அவரை மீட்டுக் கொடுக்குமாறு கோரிகை விடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக புதுவை  இரத்தினதுரையின் அக்கா சாட்சியம் வழங்கியிருக்கின்றார். ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றிருந்தபோதே அவர் மேற்படி சாட்சியத்தை வழங்கியிருக்கின்றார்.

பத்மநாதன் இராஜலக்ஷ்மி என்ற புதுவை இரத்தினதுரையின் அக்கா சட்சியமளிக்கையில், 2009.05.18ஆம் திகதி எனது தம்பி இரத்தினதுரை அவருடைய இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் படையினரிடம் சரணடைந்தார். பின்னர் அவருடைய மகன்கள் தொடர்பில் படையினர் பாரிய பெயர் பட்டியல் ஒன்றைக் கொண்டுவந்து ஆராய்ந்த பின்னர் மகன்களையும், மனைவியையும் விடுதலை செய்ததுடன் என் தம்பியை அழைத்துச் சென்று விட்டனர். அவர் ஒரு கவிஞனாக புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தார்.

எனவே, அவர் கண்டுபிடித்துக் கொடுக்கப்படவேண்டும். மேலும், அவர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் போனதன் பின்னர் அவர் உயிருடன் உள்ளதாக திவயின பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருக்கின்றன. எனவே அவர் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும் எனப் புதுவை இரத்தினதுரையின் அக்கா சாட்சியம் வழங்கியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.