புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்

பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்

இலங்கைக்கான தேசியத் திட்டம்

கொழும்பு அப்ரார் நிறுவனம் ‘2020ஆம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாட சாலைகளும் மத்ரஸாக்களும்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்துள்ள இலங் கைக்கான தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு குருணாகல் - சியம்பளகஸ்கொடுவை மதீனா தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர் நZமி அவர்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் அப்ரா நிறுவனத்தின் தலைவரும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் குழந்தை நோய்நலப் பிரிவுத் தலைவருமான வைத்திய நிபுணர் முஸ்தபா ரயீஸ் அவர்களும் அப்ரார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸலாம் ஏ ஹமீட் அவர்களும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

வைத்திய நிபுணர் முஸ்தபா ரயீஸ் அவர்கள் : உரையாற்றுகையில், “இன்று முஸ்லிம் பாடசாலைகளிலும் மத்ரஸாக்களிலும் மாண வர்களின் அடைவுகளில் பெறும் வீழ்ச்சியைக் காணமுடிகின்றது. அது மட்டுமன்றி மாணவர்கள் இடைவிலகும் வீதமும் அதிகரித்துள்ளது. இன்னும் மாணவர்கள் நெறி பிறழ்வுகளுக்கு உள்ளாகுதல், பாடசாலைகளையும் மத்ரஸாக் களையும் ஆசிரியர்களையும் வெறுத்தல் மட்டுமல்லாது இவற்றின் அடியாக கல்வியையே வெறுத்தொதுங்கும் அபாயகரமான நிலையும் வளர்ந்து வருகிறது.

இவற்றுக்கு பல காரணங்கள் முன்வைக் கப்பட்டாலும் தனது மருத்துவ அனுபவங்கள், உளவள ஆலோசனை நிகழ்வுகள் என்பவற்றி னூடாகப் பெற்ற நேரடி அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, மேற்குறிப்பிட்ட மாணவர்களின் பிரச்சினைகளுக்கு காரணங்களாக அமைவது பாடசாலைகளி லும் மத்ரஸாக்களிலும் வீடுகளிலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை களும் அவர்களை மதிக்காமை, அங்கீகரிக் காமை போன் றனவையே என்பதுதான் உண்மை.

ஓர் ஆசிரியர் மாண வனை தண்டிப் பதற்காக கையில் பிரம்பொன்றை எடுக்கிறார் என்றால் அவர் எடுப்பது பிரம்பல்ல, ஒரு கத்தரிக்கோல். ஆலவி ருட்சமாக வளரவேண்டிய மரத்தை அதன் வேர்க ளையும் கிளைகளையும் கத்தரித்து ‘பொன்சாய்’ மரமாக்கவே அவர் முயற்சிக்கிறார். 42 நாட்களில் 90 அடிக ளையும் தாண்டி வளரக்கூடிய ‘சைனீஸ் பம்பு’ எனும் சீன மூங்கில் மரங்கள் இன்று இவ்வாறு கத்தரிக்கோல்களை கையில் எடுப்பவர்களினால் ‘பொன்சாய்’ மரங்களாக மாறியிருக்கின்றன” என்றார். மேலும் அவர் உரையாற்றுகையில், ஒரு மாணவனுக்கு விழும் அடி அவனது உடம்பில் விழும் அடி யல்ல. மாறாக அவனது உள்ளத்தின் ஆழத்தில் விழும் அடி. உடலியல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள், உள ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள் அனைத்தும் இது போன்றதே. நான் பரிசோதித்த பலரில் இதன் தாக்கத்தை நேரடியாகக் கண்டுள்ளேன். மத்ரஸாக்களில் அல்லாஹ்வின் குர்ஆனை உள்ளத்தில் சுமப்பதற்காக, ஹிப்ழ் பண்ணுவதற்காகச் சேர்ந்து கிடைத்த தண்டனைகளால் உள்ளத்தில் வடுக்களைச் சுமந்து வாழ்க்கையை இழந்த வர்களைப் பார்த்திருக்கிறேன். இவைகள் வெறும் கற்பனைகளோ கட்டுக்கதைகளோவல்ல.

நான் சந்தித்த மனிதர்களிலிருந்து முன்வைக்கின்ற உண்மைகள். எனவேதான் கூறுகின்றேன், கையில் பிரம்பை எடுப்பதும் உடலியல் ரீதியான தண்டனைகள், உள ரீதியான தண்ட னைகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகங்களே. எனவே, ஒளிந்திருக்கின்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து இந்த உலகிலும் மறுமையிலும் மிகச் சிறந்த அடைவைப் பெறும் வகையில் அவர்களை மாற்ற வேண்டுமானால் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும் உருவாக வேண்டும். இதற்காகத்தான் ‘2020’ஆம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும் எனும் தொனிப்பொருளிலமைந்த தேசியத் திட்டமொன்றை அப்ரார் நிறுவனத்தினூடாக இன்றிலிருந்து முன்னெடுக்கின்றோம்” என வைத்திய நிபுணர் முஸ்தபா ரயீஸ் அவர்கள் தனது அங்குரார்ப்பண உரையில் குறிப்பிட்டார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.