புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

அமரர் கே.இராஜலிங்கத்தின் ஆற்றல்கள், பங்களிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

அமரர் கே.இராஜலிங்கத்தின் ஆற்றல்கள், பங்களிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

kலையகத்தின் மூத்த தலைவர் அமரர் இராஜலிங்கம் அவர் களை நினைவு கூரும் இந் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். 1947 இல் இலங்கையின் முதலாவது தேர்தலில், மலையக மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை - இந்திய காங்கிரஸின் 06 பேரில் நாவலப்பிட்டி தொகுதியின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர் மறைந்த இராஜலிங்கம். 1952 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய காங்கிரஸின் தலைவராக பதவி வகித் துள்ளார். மறைந்த தலைவர்களான செளமியமூர்த்தி தொண்டமான், அkஸ் என்ற வரிசையில் வைத்து எண்ணப் படுபவர். இன்று மக்கள் மத்தி யில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செல்வாக்குள்ளதாக இருப்பதற்கு அடித்தளமிட்டவர்களில் கே. இராஜலிங்கமும் ஒருவர். அவரது ஆற்றல் பங்களிப்பு நன்கு பதிவு செய்யப்படவோ, உணரப் படவோ இல்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அந்த வகையில் இந் நிகழ்வை ஒழுங்கு செய்த பெ. முத்துலிங்கம் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அபிவிருத்தி

அபிவிருத்தி என்பது பல் பரிமாணங்களை கொண்ட ஒரு கருத்தாகும். பொருளாதார, சமூக, அரசியல், கலாசார மற்றும் மனித உரிமை பற்றிய பரிமாணங்கள், அபிவிருத்தி என்ற பொதுவான கருத்தில் உள்ளடக் கப்படுகின்றன. பல்வேறு துறைகளை உள்ளடக்கி வளர்ச்சியுடன் மாற்றங்களை கொண்டதாய் விளங்குகின்றபோது அது முழுமையான அபிவிருத்தியாக கொள் ளப்படுகின்றது. இந்த அபிவிருத்தி என்ற கருத்து காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, புதிய பரப்புகளை அல்லது அம்சங்களை உள்ளடக்கியதாக அமைகின்றது. பொதுவாக நாட்டின் அபிவிருத்தி எனும்போது, அது பொருளாதார வளர்ச்சியை மையப்படுத் தியதாகவே கருதப்பட்டது. ஒரு நாட்டினது தேசிய உற்பத்தியில் ஏற்படுகின்ற வளர்ச்சி, அல்லது தனிநபர் வருமானத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சியே, பொருளாதார அபிவிருத்தியின் குறிகாட்டிகளாக 50களில் எடுத்துரைக் கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே, நாடுகளும் அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடையும் நாடுகள் அல்லது குறை அபிவிருத்தி நாடுகள் என வகைப்படுத் தப்பட்டன.

சமத்துவ அபிவிருத்தி

காலவோட்டத்தில் பொருளாதாரத்தை மையப்படுத்திய அபிவிருத்தி பற்றிய கருத்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. 1970 களில், மொத்த தேசிய உற்பத்தி உயர்வு மாத்திரம் போதாது, அந்த நாட்டின் கல்வியறிவு வீதம், உயிர்வாழ்வில் எதிர்பார்க்கை ழியிபிரி ரிகீஜிரிவிஹிதினிவிவீ சிசு மரண வீதம் என்பன அபிவிருத்தி குறிக்காட்டிகளாக கருதப்பட்டன. அபிவிருத்தி பற்றிய விளக்க கேள்விகள் பல பொருளியல் அறிஞர்களினால், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமையத் தொடங்கியது.

ஒரு நாடு அபிவிருத்தியடைகின்றதென்றால் அங்கு வேலையின்மை குறைந்துள்ளதா? வருமானப் பகிர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? எல்லா பிரதேசங்களும், சமரீதியான வளர்ச்சியடைகின்றனவா? எல்லா சமூக, மற்றும் இனக்குழுக்கள், உள்வாங்கப்ப டுகின்றனவா? என்ற கேள்விகள் பல மட்டங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. அனைத்து பிரதேசங்களையும் மற்றும் பல்வேறு சமூக மற்றும் இனக் குழுக்களையும் உள்ளடக்கியதாக அமைகின்ற அபிவிருத்தியே சமத்துவ அபிவிருத்தி என எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய அபிவிருத்தி பற்றிய கருத்தே இன்று வற்புறுத்தப் படுகின்றது. உதாரணமாக சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய அர சாங்க தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கொழும்பு பிரகடனத்திலும், இது மையப்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக் காட்டலாம்.

ஆராயப்பட வேண்டிய விடயங்கள்

இந்த உரையில் நான் ஆராய விரும்புகின்ற கேள்விகள் இரண்டாகும். இலங்கையில் இடம்பெற்ற அபிவிருத்தியில், மலையக மக்களின் ஈடுபாடு எத்தகையதாக அமைந்தது? அல்லது அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்காளிகளாக, அல்லது பயன்பெறுவோர்களாக அமைந்திருந்தனர்?

எதிர்காலத்தில், குறிப்பாக 2015ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில் ஏற்படவிருக்கும் அபிவிருத்தியில் மலையக மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமையப்போகிறது அல்லது எவ்வாறு அமைய வேண்டும்?

இலங்கையில் அபிவிருத்தி

இலங்கையின் அரசியல், பொருளாதார வரலாற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த விடயம், இலங்கையின் அபிவிருத்தி செயல்முறையானது, ஒரு சமத்துவ அடிப்படையில் அமையவில்லை என்பதாகும். இலங்கை சனநாயக அரசிய லைப்பை கொண்டிருந்தாலும், பொருளாதார அபிவிருத்தியானது, மேற்கு மாகாணத்தை- கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை மையங்கொண்டதாக அமைந்திருந்தது. இந்த இரண்டு மாவட்டங்களில் கைத்தொழில்கள், சேவைகள் போன்ற பொருளாதார நடவடிக் கைகள் செறிந்திருந்த காரணத்தினால், ஏனைய மாவட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகளை பொறுத்தவரை குறைவான பங்களிப்பையே கொண்டிருந்தது. இதன் விளைவாக அந்த பகுதியை சேர்ந்த மக்களும் பொருளாதார பலன்களை அனுபவிப்பதில் ஒரு குறைவு நிலையையே அனுபவித்தனர்.

மலையக மக்கள்

இந்த வகையில் மலையக மக்களின் நிலைமை என்ன? இந்திய வம்வாவளி, மலையக தமிழர்கள் இலங்கையின் தேசிய இனங்களில் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவதாக கருதப்படுகின்றனர். மலையக மக்கள், செறிவாக வாழ்கின்ற துறை தோட்டப் பகுதியாகும். இவர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையில் பலர் இலங்கைத் தமிழராக கணிக்கப்படுகின்ற காரணமாக 7%மாக இருக்க வேண்டியவர்கள் 4%மாக திகழ்கின்றனர். இவர்கள், மத்திய, ஊவா, சப்ரகமுக மாகாணங்களில் செறிந்தும், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பரவியும் காணப்படு கின்றனர். மலையக மக்கள் என்று அடை யாளப்படுத்தும் போது தோட்டங்களை மையமாக கொண்டு என்று பல்வேறு மாவட்டங்களில் பரந்து வாழ்கின்ற இவர்கள் வரலாறு, பொருளாதாரம், அரசியல், கலாசாரம் என்ற அடிப்படையில் தனித்த இனக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த மக்கள், இலங்கையின் அபிவிருத்தி செயல்முறையில் எவ்வாறு உள்வாங்கப்பட்டனர் என்பதே நாம் இங்கு ஆராய வேண்டிய வினாவாகும்.

வரலாற்று நோக்கு

மலையக மக்கள் அபிவிருத்தி பாதையில் - பிரதேச அபிவிருத்தி சபைகள் வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது எல்லா பிரதேசங்களையும் உள்ளடக்க வேண்டும் என்ற அபிவிருத்தி கொள்கை அல்லது உபாயம் அதிகரித்த முறையில் முன் னெடுக்கப்பட்டது.

1970ம் ஆண்டுகளில் எனலாம். 1970ம் ஆண்டுகளில் கூட்டாட் சியானது (சுதந்திர கட்சி, சமசமாஜ கட்சி, மற்றும் கம்யுனிஸ்ட் கட்சி) பிரதேச மட்டத்தில் அபிவிருத்தியை கொண்டு செல்வதற்காக முதன்முறையாக பிரதேச அபிவிருத்தி சபைகள் உருவாக் கப்பட்டு, அதன் மூலமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதன் முறையாக பட்டதா¡ரிகள் சேவை முறைமை உருவாக்கப்பட்டு, உதவி அரசாங்க அதிபர் காரியாலங்களுக்கு அனுப்பப் பட்டனர்.

பிரதேச அபிவிருத்தி சபைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட மட்டத்தில், மாவட்ட திட்டமிடல் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அதை நடை முறைப்படுத்துவதற்காக அரசியல் அதிகார சபை மாவட்ட அடிப்படையில் அமைக்கப் பட்டது. ஒரு தொகை நிதி மாவட்டத்திற் கென ஒதுக்கப்பட்டு, அது திட்டமிடல் அமைச்சின் வழிகாட்டல்களில், அரசியல் அதிகார சபையின் மேற்பார்வையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்டது.

இத்தகைய அபிவிருத்தி செயல்முறையில் தோட்டத்துறை உள்ளடக்கப்படாததால் அங்கு வாழ்ந்த மலைய மக்கள் உள்வாங்கப்படவில்லை. 60-70 களில் இம்மக்களின் அரசியல் பிரநிதித்துவம், தேசிய மட்டத்தில் நியமன பாராளுமன்ற பிரதி நிதித்துவத்திற்கும் மாத்திமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கீழ் மட்ட சனநாயக நிறுவனங்களான கிராமசபைகள், நகர, பட்டின சபைகளில், இவர்களின் பிரதிநிதித்துவம் பொதுவாக இல்லை யென்றே சொல்லலாம். இந்த சந்தர்ப்பத்தில் எனது நுவரெலியா அனுபவம் பொருத்தமானது என்பதால் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என கருதுகின்றேன்.

அமரர் இராஜலிங்கம் தொடர்...

நுவரெலியா மாவட்டத்தின் திட்டமிடல் உத்தியோகத்தராக 1973ம் ஆண்டு திட்டமிடல் அமைச்சிலிருந்து திட்டமிடல் பிரிவினை ஆரம்பிப்பதற்காக அனுப்பப்பட்டேன்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட தொகையை எத்தகைய அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு ஒதுக்குவது என்ற அரசியல் அதிகார சபையின் முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எனக்கு அதிர்ச்சியை தந்தது. நுவரெலியா மாவட்டத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரசாங்க தரப்பினர், ஒருவர் எதிர்க்கட்சியை சார்ந்தவர், அவர் இந்த கூட்டங்களுக்கு வருகை தருவதில்லை ஆக, அரசாங்க தரப்பு மூவரும், ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் அடங்கிய அரசியல் அதிகாரசபை கூட்டத்தில் நுவரெலியா, கொத்மலை ஆகிய இரண்டு தொகுதிகள் (உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும்) அபிவிருத்தியடைந்த பகுதியாகவும் வலப்பனை, ஹங்குரங்கொத்த ஆகிய இரண்டு தொகுதிகளும் அபிவிருத்தியடையாத பகுதிகளாக இனங்காணப்பட்டன.

நுவரெலியா மற்றும் கொத்மலை தொகுதிகள், கணிசமான தோட்டப் புறங்களை உள்ளடக்கி இருந்தமையே இவை அபிவிருத்தியடைந்த பகுதிகளாக இனங்காணப்பட்டன. 1973ஆம் ஆண்டு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பயிரிடப்படாத எல்லா நிலங்களிலும், முடிந்தவரை, பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்றவே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச அபிவிருத்தி சபைகளை அமைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டனர். தோட்டங்கள் முழுமையாக பயிர்ச்செய்கை ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவை, இந்த அபிவிருத்தி முயற்சியில் புறந்தள்ளப்பட்டன. இது குறித்து நியமன பாராளுமன்ற பிரதிநிதி மறைந்த அkஸ் மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரதேசவாரியாக எடுக்கப்பட்ட அபிவிருத்தி முயற்சிகளில் தோட்டத்துறை, அன்றிலிருந்து இன்றுவரை அதாவது பிரதேச சபைகள் மலையக மக்களின் ஆளுகைக்குட்பட்ட நிலையிலும் உள்வாங்கப்படாமலிருப்பது ஒரு தொடர் கதையாகவே அமைந்துள்ளது.

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டங்கள்

1977இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பிரதேச அல்லது பிராந்திய அபிவிருத்தி பற்றி நோக்குகையில் ஒன்றிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் (யிஞிளிஜி) முக்கியம் பெறுகின்றன. 1977ற்கு பின்னால் முழுமையாக தடையற்ற பொருளாதார கொள்கை பின்பற்றப்பட்ட காலகட்டத்தில் பாரிய பெருந்திட்டங்கள் மாகவலி, சுதந்திர வரத்தக வலயம், வீடமைப்பு என்பவை செயற்படுத்தப்பட்டன. இந்த அபிவிருத்தி செயன்முறையில் பிராந்தியங்கள் விடுபட்டு போயின. இதனை ஈடுகட்டும் முறையில், சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஐ.ஆர்.டி.பி நடைமுறைப்படுத்தப்பட்டன. நுவரெலியா, பதுளை, மாத்தளை என்பவை முக்கியத்துவம் வாய்ந்தன. இந்த செயற்றிட்டங்களில் மிகக் குறைந்த அளவில், சமூக ரீதியான செயற்றிட்டங்கள், தோட்டத்துறையில் செயற்படுத்தப்பட்டன. உண்மையில் யிஞிளிஜி களும் தோட்டங்களை உள்ளடக்கி செயற்படவில்லை.

1987ஆம் ஆண்டளவில், 13ஆவது யாப்பு திருத்தத்தோடு, கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளும் அதே ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளும் கவனத்திற்குரியன. அதிகார பகிர்வு மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் மக்களின் ஈடுபாடு என்ற வகையில் இந்த இரு நிறுவன ஏற்பாடுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தேசிய அரசியல் ரீதியாக 1977இல் தெரிந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மறைந்த செளமியமூர்த்தி தொண்டமான் மூலமாக தொடங்கிய, இந்த பிரதிநிதித்துவம் பத்து வரைக்கும் சென்றுள்ளது. இச் சமூகம் அரசியல் ரீதியாக தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டமையை எடுத்துக்காட்டியது. பிரதேச சபைகளிலும் மாகாண சபைகளிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதை செறிவாக்கி, உறுதிப்படுத்தி, அபிவிருத்திக்கான தளத்தை விரிவுபடுத்தியது எனலாம்.

மாகாண சபையானது, கொடுக்கப்பட்ட ஆணைக்குள், சில துறைகளில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவு ஈடுபாடு செய்து வருகின்றது. மத்திய, ஊவா மாகாணங்களில் மாகாண கல்வி அமைச்சருக்கான பதவிகளை இம்மக்களின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டமையை நடைமுறைப்படுத்துவதில், இம் மக்கள் இத்துறைகளில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது. யாப்பு ரீதியாக மாகாண சபைகள் நேரடியாக தோட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கை குறித்து அதிக அளவில் ஈடுபாடு காட்ட முடியாவிட்டாலும் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகள் மூலமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரதேச சபைகள்

பிரதேச சபைகளை பொறுத்தவரை, மலையகப் பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை, சனத்தொகைக்கேற்ப இல்லாதிருப்பது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில், பல மாவட்டங்கள் 7000 - 10000 சனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை என்றிருக்க, நுவரெலியா மாவட்டத்தில் 140,000 பேருக்கு ஒரு சபை என்றிருப்பது ஒரு பிரதிநிதித்துவ குறைபாடாக எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இதற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தாலும், இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை. பிரதேச சபைகள் இரண்டு, நுவரெலியா மாவட்டத்திலும், ஒன்று கண்டி மாவட்டத்திலும், மலையக மக்களின் தலைமையில் செயற்படுகின்றன. இன்றும் பல பிரதேச சபைகளில் இம்மக்களின் பிரதிநிதிகள் கணிசமான செல்வாக்கு செலுத்துகின்றனர். மலையக மக்களின் அரசியல் அடையாளம் பிரதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை அபிவிருத்திக்கான தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டினாலும், தோட்டங்களில், அவை முழுமையாக ஈடுபடுவதற்கு சட்ட ரீதியான தடைகள் உண்டு என்பது உணரப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக பிரதேச சபையின் செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டாலும், சட்ட ரீதியாக தடையின்றி செயற்பட பிரதேச சபை சட்டத்தில் மாற்றம் தேவை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

தேசிய மட்டத்தில் - அமைச்சுக்கள்

தேசிய மட்டத்தில் பல்வேறு துறை குறித்த அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச நிறுவனங்களின் செயற்பாடு கவனிக்கத்தக்கவொன்றாகும். 1992இல் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு சமூக நலனிற்காக நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. வீடமைப்பு, சுகாதாரம் சிறுவர் நலன் போன்ற துறைகளில் வெளிநாட்டு உதவியோடு இவை பல செயற்றிட்டங்கள் மேற்கொண்டன.

மறைந்த சந்திரசேகரன் 1994இல் வீடமைப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பொழுது அவருக்கு தோட்ட வீடமைப்பு ஒதுக்கப்பட்டது. பின்னர் 2002இல் சமூக அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டார். மறைந்த தொண்டமான், ஆரம்பத்தில் கால்நடை மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சராக செயற்பட்டார். 1997இல் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த வேளை தோட்ட சமுதாயத்தின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஒரு ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டாலும், அந்தக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் தோட்டப்புற மக்களுக்கென தோட்டப்புற உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு என ஒரு தனியான அமைச்சு உருவாக்கப்பட்டமை, ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். பெருந்தோட்டத் தொழில்களுக்காக ஒரு அமைச்சு நீண்ட காலமாக செயற்பட்டு வந்த தெனினும் அது முழுக்க உற்பத்தி தொடர்பாகவே கூடிய கவனம் செலுத்தியது. தொழிலாளர் நலனை பொறுத்தவரை அது உற்பத்தி தொடர்பானதாகவே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2005இல் இந்த அமைச்சு சமூக அபிவிருத்தியை சேர்த்து தோட்ட உட்கட்டமைப்பு வீடமைப்பு சமூக அபிவிருத்தி என முழுமையான ஒன்றாக பெருப்பிக்கப்பட்டது.

இந்த அமைச்சு, தோட்டத்துறையின் சமூக அபிவிருத்திக்கென்று ஆணை கொண்டுள்ள காரணத்தால் இந்த அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதி முழுமையும் தோட்டப்புறத்தை சென்றடைந்தன. நிதி ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரை 2006ஆம் - 2007ஆம் ஆண்டுகளில், தோட்டத்துறைக்கு 3இலிருந்து 4 பில்லியன் ரூபா அதாவது ரூபா 3000 மில்லியனிலிருந்து ரூபா 4000 மில்லியன் வரைக்கும் பலதுறைகளுக்கும் ஒதுக்கப்பட்டன. பின்னர் 2008, 2009 ஆண்டுகளில் இத்தொகையானது ரூபா 2 அல்லது ரூபா 2.5 பில்லியனாக குறைந்ததை காணமுடிகிறது. அபிவிருத்தி குறித்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று 10 ஆண்டு சமூக அபிவிருத்தித் திட்டம் உருவாக்கப்பட்டமையாகும். இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் போனமை மிகவும் துர்ப்பாக்கியமான ஒன்று. இதைவிட துக்ககரமானது, இந்த அமைச்சே இல்லாமல் ஆக்கப்பட்டதாகும். 2006 - 2015ஆம் ஆண்டு காலப்பகுதியை உள்ளடக்கிய இத்திட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால், பல அபிவிருத்தி குறிக்கோள்கள் இலக்குகள், எய்தப்பட்டிருக்கலாம். இந்த அமைச்சு இல்லாமல் போனதன் பின்னால் தோட்டத்துறைக்கான ஒதுக்கீடுகளில் கணிசமான வீழ்ச்சியை காணமுடிகிறது.

தோட்ட முகாமைத்துவம்

தோட்டத்துறையின் சமூக அபிவிருத்தி பற்றி நோக்குகையில், தோட்டத்துறையின் உற்பத்தி முறைமை அடிப்படையில் ஒரு முழு நிறுவனமாக இயங்குவதாகும். தேயிலை உற்பத்திக்கு தொடர்ந்து தொழிலாளர்கள் தேவைப்படுவதால் வசிப்பிட தொழிலாளர் அவசியமாகி, அவர்கள் தோட்டங்களில் அடைப்பட்டிருக்கின்ற நிலை உருவாகியது. இத்தொழிலாளர்கள், தோட்டங்களிலே அடைந்திருப்பதற்காக, அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் தேவையானவை அனைத்தும் வழங்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு. உணவு, வீடு, வசதி, கல்வி, சுகாதார தேவைகள் உள்ளிட்ட அனைத்தும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டன. இவற்றில் முக்கியமாக, சமூக அபிவிருத்தி கண்ணோட்டத்தில், கவனிக்கப்பட வேண்டியவை கல்வியும் சுகாதாரமுமாகும்.

கல்வி

எம். வாமதேவன் நுவரெலியா கொட்டகலை பிரதேசத்தில் பிறந்தவர். ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் ரீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டத்தையும், ஜஹகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம். பில் (ணி. ஜிhil) பட்டத்தையும் பெற்றார். நிதி திட்டமிடல் அமைச்சில் கடந்த 34 வருடங்களுக்கு மேலாக பல பதவிகளை வகித்தார். தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த அவர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

தோட்டங்களில் ஆரம்பக்கல்வி, 5ஆம் வகுப்புவரை அரசாங்க அனுசரணையில் தோட்ட மேற்பார்வையில் வழங்கப்பட்டு வந்தது. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு பாடசாலைகள் அரசாங்க கல்வி அதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்பட்டு வந்தது. பல்வேறு அழுத்தங்கள் காரணமதக 1970களில் இத்தோட்ட பாடசாலைகளை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்கத் தொடங்கியது. இது மலையக சமூக அபிவிருத்தியில் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகும். இவற்றில் 50% ஆனவை ஷியிளிதி நிறுவனத்தின் உதவியால் தரமுயர்த்தப்பட்டுள்ளன. இத்தரமுயர்தலில் ஷியிளிதி நிறுவனத்தினரும் மிஹிZ நிறுவனத்தினரும் பங்களிப்புகள் விசேடமாக குறிப்பிட வேண்டும். இன்று 300இற்கு மேற்பட்ட பாடசாலைகள், இரண்டாந்தர கல்வி (மி.வி.ரி.லி/ழி வகுப்பு வரை) அளிப்பனவாக 10,000 ஆசிரியர்களை கொண்டதாக அமைந்துள்ளன. இங்கு கல்வி பயின்று வெளியேறும் மாணவர்கள், சமூக நிலைமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளனர். எவ்வாறாயினும் அரசாங்கம் பொறுப்பேற்றும் தரமுயர்த்தப்படாத பாடசாலைகள் இன்னும் செயற்படுகின்றன என்பதும், குறிப்பிட வேண்டியவொன்றாகும்.

சுகாதாரம்

கல்வித்துறையை போலல்லாது, சுகாதாரத்துறை மிக நீண்ட காலமாக தோட்ட நிறுவனத்தின் கீழேயே முகாமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு அரச ஈடுபாடு குறைந்த அளவில், தோட்ட மருத்துவர் நியமனம், மருந்துகள் வழங்குதல் போன்றவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. 1990களில் இறுதிப்பகுதிகளிலே, தோட்டங்களில் காணப்படும் வார்டுகள் (தீarனீ) உள்ள 52 வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இன்னும் தகுதியான வைத்தியர் நியமனம், கட்டிட வசதிகள், போன்றவை குறித்து குறைப்பாடுகள் நிலவுகின்றன. கல்வித்துறையோடு ஒப்பிடுகையில், சுகாதாரத் துறையை முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது என கூற முடியாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.