புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

இலங்கையின் முதலாவது விஞ்ஞான பு+ங்கா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


இலங்கையின் முதலாவது விஞ்ஞான பு+ங்கா

இது நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய கேந்திர நிலையமாக சமீபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நனோ தொழில்நுட்ப நிலையம் 2009ம் ஆண்டளவில் தமது பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

இதற்கு அரசாங்கத்தினால் 1771.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. 23 இளம் விஞ்ஞானிகள், 4 பொறியியலாளர்கள் அத்துறைசார் 4 பேராசிரியர்கள் இணைந்த குழுவொன்று இத்திட்டத்திற்காக நியமிக்கப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சிகளினூடாக இலங்கையானது நடுத்தர வருமானம் பெறக்கூடிய நாடாக உருவாக முடியும்.


 முகில்வண்ணன்
(சிறுவர் நவீனம்)

(சென்றவார தொடர்)

‘இதற்கு ஒன்றும் செய்ய முடியாதா?” என்றான் வர்மன்.

“முடியாது நண்பா. எனக்கு விதிக்கப்பட்டது இதுதான். அதன்படி தான் நான் நடக்க வேண்டும். ஆனால் ஒன்று நீங்கள் திரும்பி வரும் போது இப்பகுதிக்கு வந்த பின் என்னை நினைத்தால் நான் வந்து உதவுவேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்” என்றது குதிரை.

“நீ செய்த உதவிக்கெல்லாம் நன்றி. நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றான்.

“வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்” என்று கூறிய குதிரை பறந்து சென்றது.

சற்று நேரம் அதனையே பார்த்துக் கொண்டு நின்றான். “முனிவர் குதிரை பற்றி எதுவும் கூறவில்லையே’ என்று எண்ணினான். அப்போது “சில விடயங்களை அங்கங்கே அறிந்து கொள்வாய்” என்று கூறியது ஞாபகம் வந்தது. பின்னர் தன் இறக்கைகளை மாட்டிக் கொண்டு, தன் திசையை நோக்கிப் பறக்கத் தொடங்கினான். பறக்கும் போது தான் தெரிந்தது எத்தனை பயங்கரமான பாதையால் செல்ல வேண்டி இருக்கிறது என்று மலைகள் அத்தனை உயரமானதாகவும், பள்ளங்கள் அத்தனை குழியாகவும் இருந்தன. ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலையில் ஏறுவதற்கே பல நாட்கள் செல்லும் போல் தெரிந்தது. அதுமட்டுமின்றி இப்படி பல மலைகளைக் கடப்பதற்கிடையில் உயிர் போய்விடும் போலிருந்தது.

(தொடரும்...)

இரவில் எங்காவது தங்குவதும் பகலில் பறப்பதுமாக இருந்தான். உணவைத் தேட முடியவில்லை. வீட்டில் இருந்து கொண்டு வந்த சிற்றுண்டிகளை சிறிது சிறிது சாப்பிட்டான். நீராகாரமும் கிடைக்கவில்லை. பறக்கும் போது கீழே பார்த்துக் கொண்டே வந்தான். நீர் கிடைக்கவே இல்லை.

இன்னும் இரண்டு நாள்களின் பின்னர் சமதரையான இடம் வந்தது. இங்கு நீர் கிடைக்கலாம் என்று பார்த்து வந்தபோது ஒரு பசுமையான தடாகம் தெரிந்தது. மகிழ்ச்சியாக தரை இறங்கினான். தடாகம் நிறைய பல வர்ணத்தில் பூக்கள் நிறைந்திருந்தன.

அவசரத்தில் இறக்கைகளை கழற்றிவிட்டு தடாகத்தில் இறங்கினான்.

அப்போது அங்கே ஒரு அதிர்ச்சி வர்மனுக்குக் காத்திருந்தது. அக்காட்சியைக் கண்டதும் அதிர்ந்து போய் நின்றான் வர்மன்.

அந்தத் தடாகத்தில் பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். வர்மன் கவனிக்கவே இல்லை. மின்னல் போல் ஓடி ஆடைகளை அவசரமாகச் சுற்றிக் கொண்டு வெளியேறினான். அவனுடைய இறக்கைகளையும் எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தாள்.

அதிர்ச்சியில் இருந்து நீங்கிய வர்மன் தனது இறக்கைகளைத் தரும்படி கத்திக் கொண்டு பின்னால் ஓடினான். ஆனால் அவள் எந்தத் திக்கில் சென்றாள் என்று தெரியவில்லை.

வழமைபோல் கிழக்கை நோக்கி தேடிச் சென்றான். மாலை மங்கிய வேளையில் ஒரு குடிசை வீட்டைக் கண்டான். அங்கே சென்று விசாரித்தான். பெரியவர் ஒருவர் இவன் தான் தனது மகள் கூறிய அவன் என்று புரிந்து கொண்டார். அவர் அந்தப் பெண் போல் சிறிய உருவத்தில் இருந்தார்.

“அது எனது பெண் தான். நீதான் அவளை மணம் முடிக்க வேண்டும்” என்றார். அவர் ஏதோ பாசையில் பேசினார். ஆனால் அவனுக்குப் புரிந்தது. அவன் தமிழ் பேசினான். அவருக்கும் புரிந்தது. இது அற்புதமாக இருந்தது.

“ஐயோ நான்... ஒரு சிறுவன்... எனக்கு திருமணமா..?” என்று வாயைப் பிழந்து நின்றான். அவர்களுடைய உருவத்துடன் ஒப்பிடும்போது இவன் பெரியவனாக அவர்களுக்குத் தோற்றமளித்தான். அது தான் இங்கு பிரச்சினை.

“அனுமதி இல்லாமல் ஒரு பெண் நீராடும் தடாகத்துக்குள் சென்றது மட்டுமின்றி அவளை பார்த்தும் இருக்கிறாய்... இனி அவன் வேறு யாரையும் மணக்க முடியாது” என்றார் அவர்.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.