புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

வாழத் தொடங்கையில்...

வாழத் தொடங்கையில்...

‘ஹலோ’

‘ஹலோ’ யாருங்க பெண்குரல் ஹலோ, ஹலோ என்று ஆண்களோட பேசிப் பேசி ‘போர்’ அடித்துப் போன ஆனந்தனுக்கு இப்போ ஒரு பெண் குரல் கேட்டதும் ஆனந்தமாக இருந்தது.

மீண்டும் ஹலோ என்றான்

சுமதி தன் அப்பாவுக்குத்தான் ‘கோல்’ எடுத்தாள். ஆனால் அது எப்படியோ வேறொருத்தரின் ஹலோவாக இருந்தது. அந்தக் குரலில் அவன் ஓர் ஆணின் சிம்மக் குரலாக இருந்தது அவளுக்கு. கட் பண்ண அவளுக்கும் மனம் வர மறுத்தது. பேச வேண்டும் என்பது போலவும் இருந்தது. என்ன பேசுவது....?

‘ஹலோ’ யார் நீங்க என்றாள்.

ஆ....ஹா...ஹா என்று சிரித்த ஆனந்தன் என்னங்க நீங்க? நீங்க கோல் எடுத்து யார் நீங்க என்று கேட்கிaங்களே! இது நியாயமாங்க என்றான் கனிவாக.

அவளுக்கு வெட்கமாக இருந்தது சொறி, சொறி ரோங் நம்...ப..ர் என முடிவை விழுங்கினாள்.

சரி சரி பரவாயில்லை வெச்சிராதீங்க. கட்டாக்கிடாதீங்க ‘பிZஸ்’

ஆஹா கட்டாகிவிட்டதே ஆனந்தன் வருந்தினான் என்றாலும் அந்த இலக்கம் தன் செல்போனில் பதிவாகியிருப் பதையிட்டுத் திருப்திப் பட்டுக் கொண்டான்.

அவன் பேசிய முழுவதையும் கேட்ட பின்பே அவள் றோங் நம்பர் என்றவள் ‘கட்’ பண்ணிவிட்டாள். என்றாலும் சும்மா பேச்சுக்காகப் பேசியிருக்கலாம் ச்சே! ஏன்? அவசரப்பட்டோம். என்ற அவள் தனக்குள்ளே கைசேதப்பட்டு தன்னை நொந்து கொண்டாள்.

செல்போனை தன் மேசையில் ‘ஓப்’ பண்ணி வைத்தாள் அப்பாவுடன் முக்கியமான விடயம் பற்றிப் பேச வேண்டியவள்; அதை மறந்தவள் தன் செல்போனை ஒரு தரம் கனிந்த பார்வையால் நோக்கினாள். ஏதோ எண்ணி மீண்டும் அதை எடுத்து நேசித்தவள் ‘ஓன்’ பண்ணி மேசையில் வைக்க மனமில்லாமல் வைத்தாள். ஏதோ யோசித்தாள். அவனுடன் தொடர்பு கொள்ள இலக்கத்தை அழுத்த மனம் விரும்பினாள். என்றாலும் ‘சீச்சீ’ என்றது அவளின் மறு மூளையில் ஓர் எண்ணம் வலிய மீண்டும் எடுத்தால் தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான். சேச்சே யாரென்றும் தெரியாமல் நான் எடுக்க என்ன தேவை இருக்கிறது! என்றாலும் ‘கட் பண்ணாதீங்க’ என்று கெஞ்சினானே! நாம் மிஞ்சி விட்டோமே என்று தன்னைச் சாடிக் கொண்டாள். ‘ஓப்’ பண்ணவில்லை. ஏன் சில நேரம் அவன் எடுக்கலாம்தானே என்ற ஒரு நப்பாசை. அது எப்படி நம்பர் தெரியும். அதுதானே! என்றவள் சிந்தனை அலைமோதியது. இனி அதைப் பற்றியெல்லாம் நமக்கு கவலை எதற்கு என்று தேற்றிக்கொண்டாலும் மனம் திடப்படவில்லை தனது தொலைபேசியை நேயத்துடன் எடுப்பதும் மனமின்றி வைப்பதுமாக இருந்தாள் சுமதி.

அடையாளம் வைத்து கவிட்டிருந்த நாவலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து வாசிக்க கையிலெடுத்தாள். தொலைபேசியை எடுக்கும் போது இருந்த ஆர்வமும் விருப்பமும் அந்த நாவலை எடுக்கும் போது இருக்கவில்லை.

அந்த நாவல் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நாவல். வாசிக்க எடுத்தால் வைக்க மனம் விடாத புத்தகம். படிக்கப் படிக்க தூண்டும் நாவல். ஆனால் அவளுக்கு அது அப்போது சோபிக்கவில்லை.

அவள் மனநிலை அதை வாசிக்க நாட்டம் விடவில்லை. என்றாலும் வேண்டா வெறுப்பாக வாசிக்க தொடங்கினாள்.

‘ரீங்....ரீங்...ரீங் என நில போன் மணி அடித்தது அம்மாவுக்கு முந்திக் கொண்டு கதாநாயகி பார்வதி ஓடிப்போய் தூக்கிவிடுகிறாள். அவள் தன் காதலன் கமல் கதைப்பான் என்று எதிர்பார்த்தே குசினிக்குள்ளிருந்த அம்மாவுக்கு முந்துகிறாள். சுமதியின் எதிர்பார்ப்பு போலவே அந்த நாவலின் ஓட்டமும் இருந்ததால் சுமதியின் வாசிப்பு வேகமும் ஓடியது.

ஹலோ என்றாள் பார்வதி “மருமகள்! உங்கப்பா பம்பாய்க்குப் போயிட்டார் என்னா”

‘ஆம்’ மாமா பார்வதி

அப்பா வந்ததும் மாமா நன்றி சொன்னதாகச் சொல்லுங்க.

எதுக்கு மாமா பார்வதி....

அப்பா போன வாரம் வந்து எங்கட வீட்டுக்கு தொலைபேசி இணைப்புக்குக் காசு கட்டி தந்து விட்டுப் போனார். இன்றுதான் இணைப்பு வழங்கினார்கள் அதுதான் எடுத்துப் பார்த்தேன். சந்தோசம் மிக்க நன்றி என்று சொல்லுங்க. மருமகள்! வைக்கிறேன்பிள்ள.

ஆ... கெதியா வெச்சித் தொலையுங்கமாமா என்று முணுமுணுத்தாள் பார்வதி, சப்தம் வெளிவரவில்லை. ஏமாந்த பார்வதி ரிசீவரை தூக்கி விசினாப்போல் தொலைபேசிக்கு மேல் போடுகிறாள் என்று கதை தொடர்கிறது.

கதாநாயகி பார்வதி போலவே தன்னையும் சுமதி கற்பனை செய்து கொண்டாள்.

சுமதியின் கையடக்கத் தொலைபேசி அழைத்தது. அவனாகத்தான் இருக்கவேண்டும் அவனேதான் அவள் இதயம் குளிர்ந்தது. முகம் மலர்வதும் குளிர்வதும் போனுக்குள் அவனுக்குத் தெரிவது போல அவள் நாணி கூனிக் குறுகினாள். அவள் வாசித்திருந்த நாவல் போன இடம் தெரியவில்லை.

என்னாங்க நீங்க அப்புடி திடீரென ‘கட்’ பண்ணிட்டிங்க! யாரு எவரு என்னா ஏதுண்டு கேட்கவேணாமா என்று அவன் கேட்டான்.

அவள் மெளனம்

ஹலோ! மீண்டும் அவன்.

ஹலோ மெல்லிய குரலில் அவள்,

ஒரே நேரத்தில் இருவரும் செல்போனுக்கு ‘இச், இச்’ கொடுத்தார்கள். ஆனால் அது அவளுடையது அவனுக்கும் அவனுடையது அவளுக்கும் விளங்கவில்லை அந்த ‘இச்சு, இச்சு’

அப்படியே அது தொடர்கதையாகி இருவரும் தனிமையில் சந்திக்கும் இடம் குறித்துக் கொண்டு முதல் சந்திப்பிலே ஒருவர் முகம் ஒருவருக்கு எப்போதோ நெருங்கிப் பழகிய பாசம் போல நெருக்கம் நேயம் கனிந்து காதலாகி பரிணமித்தது. ஜோடிப் பொருத்தம் அந்தலோகப் பொருத்தம், அவனுக்கு ஊர்வசி, மேனகாவைப் பார்க்கும் சபலம் தட்டியது.

காதலுக்கு எப்போதும் எல்லோருடைய பெற்றார்களும் முட்டுக்கட்டையாக இருப்பது என்பது ஒரு சித்தாந்தமாகிவிட்டது என்றால் இவர்களின்... தாய் தந்தையர்களென்றாப்போல விதிவிலக்கா என்ன

அவன் ஓர் ஆசிரியன் வயது முப்பதுக்கு மேல் என்றாலும் ஹேன்சம் தோற்றம். அவள் ஓர் ஆசிரியை வயது இருபத்தொன்பதுக்குமேல். இளவாழை அழகிய தோற்றம்.

அவரவர் தாய் தந்தையரை சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தை உறவுக்குள் இரு குடும்பத்தையும் சுமூகமாக இணைய வைத்து, கொடுக்கல் வாங்கல் என்ற உறவுகளுக்கும் தள்ளிவிட்டார்கள்.

சுமதியைக் கண்ட ஆனந்தனின் குடும்பத்தாருக்கும் ஆனந்தைக் கண்ட சுமதியின் குடும்பத்தாருக்கும் பற்றுப் பிடிப்பு அட்டையையும் மேலான ஒட்டு ஏற்பட்டு விட்டது. சுமதியும் ஆனந்தனும் ஒட்டு இல்லாவிட்டாலும் காதலர்களின் குடும்பங்கள் இரண்டும் எக்காரணத்தையிட்டும் பிரிந்து விடமாட்டார்கள்.

சம்பந்த நெருக்கம் இருதரப்பாருக்கும் இடை இல்லாத அவ்வளவு இறுக்கம்.

எவ்வளவு நெருக்கமான உறவையும் பிரிக்கக் கூடிய சகுனிகள் இடையில் புகுந்து விரிசலை ஏற்படுத்தி விடுவார்கள். ஆகவே, மேலும் தாமதியாது உடனே முகூர்த்தம், பொருத்தம், சுபவேளை பார்த்து தினம் குறித்துவிட்டார்கள்.

அன்று திருமணம் ஊர்வலமாகப் பெண் மாப்பிள்ளை சகிதம் ‘டும் டும்’ மேளம் ‘பீப் பீப்பி’ நாதஸ்வரம் வாசிக்க கோயிலுக்கு செல்கின்றது. மரியதாஸ் ஒரு டொக்டர். எப்போதும் (தன்) இடப்பக்க பொகட்டினுள்ளே தனது கையடக்கத் தொலைபேசியை வைத்துக் கொள்வான். இது அவனது பழக்க வழக்கத்தில் மாற்ற முடியாத ஒன்று.

திடீர் விபத்து முறிவுகள் உடைவு நரம்பு எலும்பு முறிவுகளுக்கு உடன் சத்திர சிகிச்சை செய்யும் அவசர சிகிச்சைப் பிரிவு ‘ஸ்பெசலிஸ்ட் சேர்ஜன்’ அதனால் சீரியஸ் என்றவுடன் அழைப்பு வரும். அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக தன்தலை மாட்டிலே கையக்கதொலைபேசியை வைத்துக் கொண்டுதான் தூங்குவான். டொக்டர் மரியதாசும் மனைவி மணிமேகலையும் திருமணம் முடித்து வருடங்கள் ஐந்து தாண்டியும் ஒரு குழந்தையை ஈன்று கொள்ளவில்லை, செய்யாத வைத்தியமில்லை ஏறி இறங்காத கோயிலுமில்லை, சேர்ச்சு மில்லை.
எதுக்கோ ஐந்து வருடங்களின் முடிவில் அழகன் ஒன்று பிறந்தான். அவனுக்கு வயது இப்போ நான்கு பாலர் பாட சாலை செல்லும் பிள்ளை.
தொண்டை கரகரத்து இருமிவிடக் கூடாது, மேனி சாடையாகச் சுட்டு விடக்கூடாது; மூத்திரம் நிறம் கூடிக் குறைந்து போகக் கூடாது, படுக்கையில் அனுங்கி விடக்கூடாது உடனே பேபிடொக்டர். அந்த பேபி டொக்டர் லேடிக்கும் அப்பாடா என்றிருக்கும் அந்தளவுக்கு பராமரிப்பு. மணிமேகலையும் பெஞ்சமின் பிராங்ளின் எழுதிய குழந்தை வளர்ப்பு புத்தகமும் பட்டபாடு, யாரும் பார்த்தால் இவர்கள்தானா புதுசா ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்கி றார்கள் என்று கேட்டு விடு வார்களோ!
பிள்ளை மீது தாயை விடத் தந்தை மரியதாசிக்கே பாசம் அதிகம் என்று சொல்லி விடவும் முடியாதுதான் என்றாலும் தாய் பாசம் மிகையானது என்பது நிகரில்லாதது, இவ்விருவரின் பாசம் நேசம் பராமரிப்பென்பது சமமானது என்று விட்டுவிடலாம்.
டொக்டர் மரியதாசின் கடமை உணர்வா பிள்ளைப் பாச உணர்வா எது கூட என எடை போட்டுப் பார்த்தால் துலாம்பரத் தட்டு சமமான தாகவே இருக்கும்.
அன்று ஓர் அவசர அழைப்பு வைத்தியசாலையிலிருந்து மருத்துவ அதிகாரிகள் அழைத்தி ருந்தார்கள். டொக்டர் மரியதாஸ் தான்.
இந்த உயிருக்கு உத்தரவாதம் என்ற இறுதி நிலையான அவசரமாக இருந்தால் தான் வைத்திய அதிகாரி அழைப்பார். அவசரமாக தன் மனைவி கொடுத்த தேனீரைக் கூட குடிக்காமல் தன் மகனுக்கு மட்டும் வெறும் ‘அவ்வா’ கொடுத்து ‘டாட்டா’ காட்டி விட்டு காரை என்றுமில்லாத வேகமாக எடுத்துக் கொண்டவன். இடதுபுறப் பகட்டில் குறு குறுத்த தன் செல்போனை எடுத்து ஹலோ! ஓகே சேர் ஆ அப்படியா சரி வந்து கொண்டி ருக்கிறேன் என்றவன் மீண்டும் விரைந்தான்.
ஹொஸ்பிட்டலுக்குச் சுமார் இருநூறு மீற்றர் தூரம் தள்ளி ஓர் இடத்தில் நடைபாதைக் கடவை உள்ளது.
கடவை மஞ்சள் கோடுக ளால்...திருமண ஊர்வலம் அந்தக் கடவையைக் கடக்க வருகிறது. அது ஒன்றையும் டொக்டர் மரியதாஸ் கவனிக்க நியாயமில்லை காரணம் அதுக்குள்ளே மனைவி கோல் எடுத்து என்னங்க மகன்... ‘கட்’ அவன் தனது செல்போனில் மனைவிக்குக் கோல் எடுப்பதிலே கவனம் மூழ்கி மகனுக்கு என்ன? என்ற பதட்டம் கடவையில் காரின் வேகம் சற்றும் குறைக்கவில்லை அதே வேகத்தில் கடவையில் கடந்த ஊர்வலத்தினுள்ளே காரை விட்டார். ஸ்தலத்திலே டொக்டர் மரியதாசும் கோயிலுக்குச் சென்ற கலியாண ஊர்வலத்தில் மணப் பெண் சுதியும் மணவா ளன் ஆனந்தனும் இரத்த வெள்ளத்தில்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.