புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
ஏழைப் பிள்ளையின் நண்பன் - 10

ஏழைப் பிள்ளையின் நண்பன் - 10

எஸ்.டபிள்ய+.ஆர்.டி.பண்டாரநாயக்க இவ்விரு சிறுவர்களையும் எதிர்காலத் தலைவர்களாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுமாறு மஹிந்தவின் தந்தைக்கு வேண்டுகோள் விடுத்தார்

(சென்றவாரத் தொடர்)

thடி வீட்டு மேசையில் பால்சோறு துண்டு துண்டாக அழகாக பீங்கான்களில் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு துண்டு பால்சோறு அண்ணன் சமலின் கையில் இருந்து கீழே விழுந்ததை அவதானித்த திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க “மகனே ஒரு நாளும் பால்சோறை நிலத்தில் விழ இடமளிக்கக்கூடாது” என்று அறிவுரை கூறினார். அதற்குச் சமல் “அது என் கையில் இருந்து விழுந்து விட்டது” என்று பதிலளித்தார்.

அதையடுத்து திரு.பண்டாரநாயக்க கீழே விழுந்த பால்சோற்றை தனது கைகளால் எடுத்து “தவறுதலாக இது உன் கைகளில் இருந்து விழுந்து விட்டது” என்று கூறினார். “நீ வேண்டும் என்றே இதைச் செய்யவில்லை, நாம் உணவை மதிக்க வேண்டும். அரிசி உணவே எங்கள் பிரதான உணவாகும். அரிசியைப்போல் இன்னும் ஒன்றையும் நீங்கள் கீழே வீழ்த்தி விடக்கூடாது” என்று பண்டாரநாயக்க அவர்கள் கூறியபோது, அண்ணன் சமல் “அது என்ன?” என்று கேட்டார்.

அதற்கு “புத்தகங்கள்” என்று பதிலளித்த திரு.பண்டாரநாயக்க, “நீங்கள் உணவையும், புத்தகங்களையும் மதிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் திரு.பண்டாரநாயக்க கேலியாக பேசுகையில், “அதிக தூரத்தில் இருக்கும் ருஹ¥ணு பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய இரண்டு மகன்மார்களையும், சகோதரனின் மகனையும் இந்த நிகழ்வை பார்ப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார்” என்று கூறினார். “இப்படியான வாய்ப்புகள் சிறுவர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். எங்கள் அடுத்த சந்ததியினருக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது நன்கு தெரிந்திருக்க வேண்டும். நாம் இந்த சிறுவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அதனால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எங்கள் நாட்டின் அடுத்த சந்ததியினருக்கான தலைவர்களை உருவாக்குவதற்கு இப்போதே நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்” என்று சிரித்துக்கொண்டே திரு. பண்டாரநாயக்க கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறுவனாக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்களை தொகுத்து தெனகம சிறிவர்தன என்ற நூலாசிரியர் எழுதிய மூலப்பிரதியை செல்வி முதுபத்மகுமார ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கத்தை ஏழைப்பிள்ளையின் நண்பன் என்ற தலைப்பில் எஸ்.தில்லைநாதன் மொழிபெயர்த்துள்ளார். இந்த கதை வாராவாரம் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவரும்.

“இப்படியான முயற்சிகள் எங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளன. எங்களில் ஒருவரும் ஏன் நான் கூட என்னுடைய பிள்ளைகளை அழைத்து வரவில்லை” என்று திரு.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

அவ்விதம் பண்டாரநாயக்க தந்தையைப் பாராட்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள், தங்கள் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி தவழுவதை அவதானிக்கத் தவறவில்லை.

***

காலி ரிச்மன்ட் கல்லூரியின் மண்டபத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்ப்பதில் மஹிந்த அக்கறை செலுத்தினார். அங்கு மூன்று ராஜபக்ஷகளின் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன.

முதலாவது புகைப்படம் டீ.எம்.ராஜபக்ஷவின் புகைப்படமாகும்.

இவர் 1913, 1914, 1915ம் ஆண்டுகளில் ரிச்மன்ட் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். அப்படத்திற்கு அருகில் டீ.சி.ராஜபக்ஷவின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் டீ.ஏ.ராஜபக்ஷவின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் மூவரும் ரிச்மன்ட் கல்லூரியின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாவர். பல்வேறு விளையாட்டு அணியின் தலைவர்கள் என்ற முறையில் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டங்களில் தங்கள் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தார்கள். இவர்களின் படங்களை அண்ணன் சமல் ராஜபக்ஷவும் தம்பி மஹிந்தவும் அவதானித்தார்கள். இவர்கள் எங்களின் பெரிய தந்தை, இரண்டாவது தந்தை மற்றவர் எங்களுடைய தந்தை என்று சகோதரர்கள் தங்களுக்கு இடையில் புகைப்படங்களை அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இந்தப் படங்களை சிறுவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு கல்லூரியின் உப அதிபரான எஸ்.ஏ.வீரசிங்க வந்தார். சிறுவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களின் படங்களை பார்ப்பதை அவர் அவதானித்தார். அவர் அவதானித்த பின்னர், இந்த மூவரும் இந்தப் பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்தார்கள் என்று கூறினார்.

இவர்கள் பாடசாலைக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் பெருமை தேடித் தந்த பெருந்தலைவர்கள் என்று பாடசாலையின் உதவி அதிபர் சிறுவர்களிடம் கூறினார். அந்த நற்செய்தியைக் கேட்ட சமல் மஹிந்தவின் முகத்தைப் பார்க்க, மஹிந்தவும் அண்ணனின் முகத்தைப் பார்த்தார்.

பின்னர் அவர்கள் அந்த படங்களை பெருமையோடு பார்த்தார்கள். பாடசாலை உதவி அதிபர் அங்கிருந்து சென்றவுடன் அண்ணன் சமல் மஹிந்தவைப் பார்த்து, “தம்பி நாங்களும் அவர்களைப் போன்று தலைவர்களாக வர வேண்டும்” என்று கூறினார். மஹிந்த சிறிது நேரம் யோசித்த பின்னர் “அண்ணா அது சரி, நாம் அவர்களைப் போன்று தேசத் தலைவர்களாக வரவேண்டும்” என்று சொன்னார்.

***

1

952ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைவியான இரண்டாவது எலிசபத் மகாராணியாரின் தனது கணவர் எடின்புரோ கோமகன் என்று அழைக்கப்படும் இளவரசர் பிலிப்ஸ¥டன் இலங்கைக்கு கொத்திக் என்ற புத்தம் புதிய சொகுசு கப்பலில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பிரிட்டிஷ் மகாராணியாரை வரவேற்பதற்காக பெருமளவு பணத்தை செலவிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்றைய காலகட்டத்திலும் விலைவாசி அதிகரித்திருந்ததனால் மக்கள் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கினார்கள். “இந்த வெள்ளைக்கார மகாராணியாரை பார்ப்பதற்கு ஏன் இவ்வளவு பணத்தை செலவிடுகிறார்கள். அந்தப் பணத்தை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு செலவிடலாமே” என்று மக்கள் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை பகிரங்கமாக கண்டிக்க ஆரம்பித்தனர். ஆனாலும், அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் செலவுகளை செய்து வந்தது. எங்கள் மகாராணியார் எங்கள் நாட்டுக்கு வருகை தருவது எங்களுக்கு பெருமையை தேடிக் கொடுக்கும் என்று அன்றைய ஆட்சியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்கள். இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் மகாராணியார் தனது கணவருடன் கொழும்பு வந்து சேர்ந்தார்.

“என்னுடைய பாடசாலை மாணவர்களும் மகாராணியாரை பார்க்க கொழும்புக்கு போகிறார்கள்” என்று அண்ணன் சமல் தனது தந்தையிடம் கூறினார். “சமல், நீ மகாராணியாரை பார்க்க விரும்பினால் நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். தம்பி மஹிந்தவையும் அழைத்து வா” என்று தகப்பனார் கூறினார்.

அண்ணன் சமலும், தம்பி மஹிந்தவும் பாராளுமன்றத்திற்கு சென்று மகாராணியாரை பார்த்தார்கள். கொழும்பில இருந்து அந்த நிகழ்வுக்குப் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மஹிந்த தன் அண்ணனைப் பார்த்து, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்தப் பெண்மணி எங்களின் ஆக்கிரமிப்பாளராகத் தானே இருந்தார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அண்ணன் சமல், அப்போது எலிசபத் மகாராணியின் தந்தை 6வது ஜோர்ஜ் மன்னர் தான் எங்கள் நாட்டின் மீது ஆட்சி செலுத்தினார் என்று பதிலளித்தார்.

அப்போது நாம் “இறைவா, ஜோர்ஜ் மன்னரை காப்பாற்று என்றெல்லாம் பாடுவோம்” என்று அண்ணன் சமல் கூறியதைக் கேட்ட தம்பி மஹிந்த, “இப்படி பாடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று கேட்டார். “எங்கள் ஆசிரியர்கள் அவ்விதம் பாடுங்கள் என்று சொன்னதால் தான் பாடினோம்” என்று அண்ணன் சமல் பதிலளித்தார்.

“ஏன் நாம் கொழும்புக்கு இந்தப் பெண்ணை பார்க்க வந்தோம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று மஹிந்த கூறிய போது, அண்ணன் சமல் நானும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

(தொடரும்)

தமிழில்:

 

 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.