புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
லேக்ஹவுஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன் இலாபமும் ஈட்டி வருகிறது

லேக்ஹவுஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன் இலாபமும் ஈட்டி வருகிறது

லேக்ஹவுஸ் நிறுவனம் இன்று அதில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு நிவாரணங்களை, சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகவும் இலாபமீட்டும் ஒரு நிறுவனமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது என தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம். பியான ஏ. எச். எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘திறமையான ஒரு தலைவரைக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில் திறமையான பணிப்பாளர் சபை ஒன்றும் உள்ளது. உபுல் திஸாநாயக்க, ரஸாங்க ஹரிச்சந்திர போன்றோருடன் மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர் பீட பணிப்பாளர் சீலரட்ண செனரத் இருக்கிறார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வெளியீடுகள் பற்றி மிகவும் கீழ்த்தரமான முறையில் சபையில் தெரிவிக்கப்பட்டது.

தினமின, சிலுமின, தினகரன், வாரமஞ்சரி, வண்ண வானவில், ஒப்சேர்வர், டெய்லி நியூஸ் போன்ற பிரதான செய்தித் தாள்கள் மூலம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல மாணவர்களுக்கு, பெண்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு என தனித்தனியாக சிறு பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.

கயந்த கருணாதிலக்க எம்.பி. லேக்ஹவுஸ் பற்றி தவறான தகவல்களையே சபையில் முன்வைத்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் சுமார் 1908 ஊழியர்களுக்கு மாதாந்தம் 30 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. 135 மில்லியன் ரூபா போனஸ¤க்காக செலவு செய்யப்படுகிறது. வருடத்தில் 4 தடவைகள் போனஸ் வழங்கப்படுகிறது. வருட இறுதியில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அங்கு மருத்துவ காப்புறுதித் திட்டம் இருக்கிறது. அங்கு சிறிய மருத்துவ நிலையமே இருக்கிறது. இலவசமாக மருந்து வகைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. வதிவிட வைத்தியர் ஒருவரும் இருக்கிறார்.

13,500 ரூபாவை அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவாக வழங்குகிறது. இது இந்த நிறுவனம் செய்யும் மாபெரும் சமூக சேவையாகும்’ என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

யுத்தத்தை வெற்றிபெற முடியாது என படை வீரர்களைக் கொச்சைப்படுத்திய மங்கள சமரவீர இன்று ‘சிரச’ தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குத் தொடர்கிறார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சம்பந்தமாக எதிர்க் கட்சியினர் விமர்சித்தனர். அந்த நிறுவனம் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில் வழங்கி அவர்களுக்கு சிறந்த சம்பளத்தை வழங்கி வருவதை இவர்கள் அறியமாட்டார்கள்.

‘சனல் 4’ ஊடகவியலாளர் பற்றி சபையில் பேசப்பட்டது. சனல் – 4 புகைப்படக் கருவிகள் படையினரின் செயற்பாடுகள் எனக் கூறி படையினருக்கு எதிரான காட்சிகளை சர்வதேசமெங்கும் ஒளிபரப்பின. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் துரத்தப்பட்ட போதும் காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போதும் சனல் 4 புகைப்படக்காரர்களின் கமராக்கள் எங்கே இருந்தன என கேட்க விரும்புகிறேன்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.