புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

பெற்றோரின் அலட்சியமா? விதியா?

பெற்றோரின் அலட்சியமா? விதியா?

மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. பொருட்களை, ஆதனங்களை, பணத்தை நாம் இழந்து விட்டால் அதனை ஈடு செய்துவிடலாம். ஆனால் உயிர்களைப் பறிகொடுத்தால் காலா காலமாகக் கவலைதான். அது நம்மை வாட்டி, வதக்கி உருக்குலைத்துவிடும். அண்மைக்காலமாக பெற் றோரின் கவனயீனத்தால் குழந்தைகள் இறந்து விடும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இந்த இறப்புகள் விதியென்று இன்னொரு சாரார் வாதிடவும் கூடும்.

எனினும் பெற்றோர் தம் குழந்தைகள் மீது சிரத்தை எடுத்திருந்தால் இந்த உயிர் இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்ற சம்பவங்களில் ஒரு சிலவற்றை நாம் தொகுத்துத் தருகின்றோம்.

கிணற்றில் விழுந்து 03 வயது குழந்தை மரணம்

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 03 வயதுடைய பெண் குழந்தையொன்று கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவானந்தன் தர்மினி (வயது 03) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தையின் தாய் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்தக் குழந்தை கிணற்றடிக்குச் சென்று தவறி கிணற்றினுள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிணற்றிலி ருந்து சடலத்தை அச்சுவேலி பொலிஸார் மீட்டனர்.

தேங்காய் தலையில் விழுந்து

3 மாத குழந்தை உயிரிழப்பு

தென்னை மரத்திலிருந்த தேங்காய் (குரும்பை) தலையில் வீழ்ந்ததில் 3 மாத கைக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் கல் முனை தமிழ் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ரமேஷ் சரோமி எனும் மூன்று மாத கைக்குழந்தையே உயிரிழந்துள்ளது. காலையில் இப்பகுதி யில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது இந்த குழந்தையின் தாய் தனது குழந்தையை தோளில் தூக்கி போட்டவாறு பக்கத்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு அருகில் இருந்த தென்னை மரத்திலிருந்து குரும்பை ஒன்று வீழ்ந்துள்ளது. உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த மூன்று மாத பெண் குழந்தையானது குறித்த தம்பதிகளுக்கு பத்து வருட இடைவெளியில் பிறந்த பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. நேர்த்தி வைத்து பெற்றெடுத்த தமது பெண் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து சிறுமி மரணம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்ததில் சிறுமி உயிரிழந்தார்.

கோட்டைக்கல்லாறு முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 4 வயதான சுகுணராஜh அகஸ்தியா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார். இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஸ்ராண்டில் ஏற முயன்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கொள்ளையர்களினால் மாணவன் உயிரிழந்தார்

கொள்ளையர்களினால் கோடாரி கொத்திற்கு இலக்காகிய மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடாரியினால் கொத்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்ததுடன், தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிடரிப்பகுதியில் கடுமையான காயமேற்பட்டிருந்த மகனான சண்முகநாதன் யதுர்'னன் (19) என்பவரே சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை (07) மாலை உயிரிழந்துள்ளார். யதுர்'னன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

லிந்துலை மெராயா தோட்டத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இராஜகுலசேகரம் ராஜ் சன்ஜp (18) என்ற சிறுவனின் உடல் மெராயா குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இவர் வெளியே செல்லும் பொழுது இவரின் தாயாரிடம், தான் வெளியில் சென்று வருவதாக கூறியே சென்றுள்ளார். வெளியில் சென்ற சிறுவன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததன் காரணமாக குழப்பமடைந்த பெற்றோர் அயல் வீட்டாரின் உதவியுடன் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். (தொடர் 21ம் பக்கம்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.