புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு

மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு

டொக்டர் நிரோஷ மென்டிஸ்

உலக சனத்தொகையில் நான்கு பேரில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டி ருப்பதாக தேசிய மன சுகாதார கவுன்சிலின் பணிப்பாளரும், மனோதத்துவ நிபுணருமான டொக்டர் நிரோஷ மென்டிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த காலங்களைவிட மனநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அழுத்தம் காரணமாக மாணவர்கள் உட்பட பலர் மனநோயினால் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றார். பரீட்சை அண்மிக்கும் காலப்பகுதியில் கொழும்பில் பிரதான பாடசாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் மனோரீதியாகப் பாதிக்கப்படும் மாணவர்கள் அனுமதிக் கப்படும் விகிதம் அதிகரித்துள்ளது. இறுக்கமான மனோநிலையே இதற்கான காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மனசுகாதார மன சுகாதாரம் குறித்த பாடநெறிகளைத் தொடர்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.