புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய தரப்பாக முஸ்லிம் சமூகம்

தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய தரப்பாக முஸ்லிம் சமூகம்

புலிகளுடனான ஆறு சுற்றுக்களில் உள்வாங்கப்படாதது பாரிய வடு நோர்வே புதிய தூதுவரிடம் மு.கா. தலைவர் ஹக்கீம் கவலை தெரிவிப்பு தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென எதிர் பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச் சருமான ரவூப் ஹக்கீம் இலங் கைக்கான நோர்வே தூது வர் கிaட் லொக் செனிடம் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான உத்தேச தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென தாம் கருதுவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் கிaட் லொச்சென், நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து இரு நாடுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடனான ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்றியதாகவும் இனப் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை ஒரு முக்கிய தரப்பினரான முஸ்லிம்களுடைய பரிமாணம் தனியாக உள்வாங்கப்படாதது ஒரு பாரிய குறை பாடாக தொடரந்தும் இருந்து வருவதாக வும், இந்த பாரதூரமான குறைபாடு இனியும் தாமதிக்காமல் நிவர்த்திக்கப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகு மென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். நோர்வே அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கி வந்த பல்வேறு உதவிகள் பின்னர் தடைப்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், புதிதாக அவ்வாறான உதவிகளையும், வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியதையும் வலியுறுத்தினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.